குணசேகரன் பற்றி தெரியவரும் மர்மம்.. நடக்கப்போகும் விபரீதம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில், அன்புக்கரசி தர்ஷனுக்கு ஃபோன் செய்து, நான் அன்னைக்கு அப்படி பேசி இருக்கக்கூடாது என்று சொல்கிறாள். இதைக்கேட்டு கடுப்பான தர்ஷன், அன்புக்கரசியை வீட்டை விட்டு வெளியில் போ என்று சொல்ல, அந்த பெண்ணாக வெளியில் போக சொல்ல நீ யாருடா, நீ எனக்கு மகனும் இல்லை, நான் உனக்கு அப்பனும் இல்லை. நீ வீட்டை விட்டு வெளியில் போடா என்று சொல்கிறார்.
மறுபக்கம், ராமேஸ்வரத்திற்கு சென்ற சக்தி, அந்த லெட்டரில் இருக்கும் முகவரி குறித்து ஒரு டீ கடையில் விசாரிக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் இருப்பர், கோவிலுக்கு அருகில் பழைய போஸ்ட் மாஸ்டர் இருக்கிறார். அவருக்கு இந்த முகவரி தெரியும் நீங்கள் அவரிடம் சென்று விசாரிகள் என்று சொல்ல, சக்தி அவரின் வீட்டை கண்டுபிடித்து, கையில் இருக்கும் கடிதத்தை காட்டி விசாரிக்கிறார். அந்த கடிதத்தை பார்த்த போஸ்ட் மேன், இது நான் எழுதிய கடிதம் தான், அந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர், பெயர் தேவகி, இந்த முகம் இன்னும் என்னிடம் நினைவில் இருக்கிறது. ஆனால், இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாது. இங்கு நிறைய படங்கள் இருக்கிறது. அங்கே சென்று விசாரித்து பாருங்கள் என்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து சக்தி வெளியே வர, அவரை பின் தொடர்ந்து வரும் குணசேகரின் ஆடி ஆள், குணசேகருனுக்கு ஃபோன் செய்து, உங்க தம்பி சக்தி, போஸ்ட் மேனிடம் கடிதத்தை காட்டி விசாரித்துவிட்டார் என்று சொல்ல, இதற்கு மேல் அவனைவிட்டு வைக்காதே அவன் கதையை முடித்துவிடு என்கிறார். இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே, ஈஸ்வரியின் அப்பா வீட்டிற்கு வந்து, என் மகள் படுத்த படிக்கையாக இருக்கிறாள். அவளை கைவிட்டீங்களே என்று சொல்ல, அப்போது குணசேரன், அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் நான் தான் ஈஸ்வரியை அடித்து படுக்க வைத்தேன் என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்.

கோவப்படும் நந்தினி: இதைக்கேட்டு ஆத்திரப்படும் நந்தினி, நிறுத்துங்க தேவை இல்லாம பேசாதீங்க அக்காவை இந்த நிலைமைக்கு ஆக்குனதே நீங்கதான். அக்காவோட ஆசைப்படி தான் நாங்க தர்ஷனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். அவங்க தான் தர்ஷனும் பார்க்கவியும் கல்யாணம் பண்ண நினைச்சாங்க அவங்களோட ஆசையை தான் நாங்க நிறைவேத்தனும் என சொல்கிறார். அப்போது ஆத்திரப்படும் குணசேகரன், கல்யாணம் பண்ணி பாக்குறது தான் உங்களுடைய லட்சியமா என்று கத்துகிறார்.
வேதனையில் ஈஸ்வரியின் அப்பா: அப்போது ஈஸ்வரியின் அப்பா மாப்பிள்ளை இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, இப்பொழுது என்னுடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே ஒரு விஷயம், என் மகள் ஈஸ்வரி நல்லபடியாக குணம் பெற்று மீண்டு வர வேண்டும் அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். எங்கு வேண்டுமானாலும் வந்து சாட்சி சொல்கிறேன் என்கிறார். அப்போது நந்தினி அப்பா, உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா... திருடன் கையிலே சாவியை கொடுக்கிறேன் என சொல்கிறீர்கள். அக்காவை அடித்து இந்த நிலைமைக்கு ஆக்கியது இவர்தான் அதனால் தான், இவர் மீது நாங்கள் வழக்கு தொடுத்து இருக்கிறோம் என்று சொல்ல அப்போது ஈஸ்வரியின் அப்பா நந்தினி உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்ல எனக்கு என்னுடைய மகள் மீண்டும் வரவேண்டும் என சொல்கிறார்.
இதைக்கேட்டு குணசேகரன் நான் என்னுடைய சொத்து அனைத்தையும் வித்தாவது ஈஸ்வரியை காப்பாற்றுகிறேன். ஆனால் அதன் பிறகு இந்த வீட்டில் நான் என்ன சொல்கிறேனோ அதன்படி தான் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் கேட்டு நடக்க வேண்டும். அதற்கு முன் நான் ஈஸ்வரியை பார்க்க வேண்டும், ஆனால், நான் பார்க்கக்கூடாதபடி போலீசில் என் மீது வழக்கு போட்டு இருக்கிறார்கள் என சொல்கிறார். உடனே ஈஸ்வரியின் அப்பா, அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்கிறார்.


Click it and Unblock the Notifications











