தானாவந்து மாட்டிய ஆடு.. ஈஸ்வரியின் தந்தையால் வந்த ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், அஸ்வின் வீட்டுக்கு வந்த ஜனனி மற்றும் தர்ஷினி இருவரும் வீட்டில் இருக்கும் சிஸ்டத்தில் ஏதாவது ஆதாரம் இருக்குமா என்று விசாரிக்கின்றனர். வீட்டில் எதுவும் இல்லாததால், ஜனனி, அஸ்வினை பார்க்க யாராவது வந்தார்களா என்று கேட்க, வீடியோ கிராபர் அஸ்வினின் அம்மா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி காரில் ஒருவர் அஸ்வினை தேடி வீட்டுக்கு வந்தார். அவர் பார்ப்பதற்கு பெரிய இடத்து ஆட்கள் போல இருந்தார்கள் என்று சொல்கிறாள்.

இதைத்தொடர்ந்து, ஜனனி மற்றும் தர்ஷினி இருவரும், குணசேகரன் வீட்டுக்கு வந்து விலை பேசிவிட்டு போன, அந்த அலுவலகத்தின் விஸ்டிங் கார்டை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். பின் அலுவலகத்தில் குணசேகரன் வீட்டில் இருந்து வந்து இருக்கிறோம் என்று சொல்கின்றனர். உள்ளே சென்று பிஏ விஷயத்தை சொல்ல, பாஸ் இப்போது அவர்களை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை, நான் ஊரில் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடு என்கிறார். இதையடுத்து வெளியே வரும் பிஏ, ஜனனியிடம் பாஸ் ஊரில் இல்லை அவர் வெளி ஊர் சென்று இருக்கிறார் என்று சொல்கிறார். இதனால் சந்தேகப்படும் ஜனனி, நிச்சயமா அஸ்வின் கொலைக்கும், குணசேகரனுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கு என்பதை புரிந்து கொள்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: குணசேகரன் வீட்டில் இருக்கும் ஈஸ்வரியின் அப்பா, மாப்பிள்ளை எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை, என் சொத்து அனைத்தையிம் விற்று நான் பணம் தருகிறேன் என் மகளை காப்பாத்துங்க என்று சொல்ல, அப்போது குணசேகரன், சொத்தை விற்க வேண்டிய அவசியம் இல்லை மாமா, எனக்காக ஒரே ஒரு விஷயத்தை நீங்க செய்ய வேண்டும், என் மனைவி ஈஸ்வரி விஷயத்தில் இந்த வீட்டு பொம்பளைங்க யாரும் தலையிடக்கூடாது, நான் ஈஸ்வரியை குணமாக்கி உங்க முன்னாடி நிறுத்துகிறேன் என்கிறார். அப்போது ஈஸ்வரியின் அப்பா, என் மகளை காப்பாத்துங்க, பொறுப்பை நான் உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்கிறார்.

குணசேகரின் பிளான்: இதைக்கேட்டு ஆத்திரப்படும் சக்தி என்ன பேசுறீங்க தாத்தா என்று கேட்க, டேய் நீ பேசாதேடா, உன் அம்மா படுத்தபடுக்கையாக இருக்கும் போது, அவளை பற்றி கவலைப்படாமல் நீ புது கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியாக இருக்க என்கிறார். இது எல்லாம் இந்த பொண்ணுக்காகத்தானே பண்ண, நீ இனிமேல் எனக்கு பேரனே கிடையாது என்கிறார். இவர் பேசுவதை கேட்டு ஆத்திரப்படும் நந்தினி, தயவு செய்து அக்கா விஷயத்தை தவறான முடிவை எடுக்காதீங்க என ஈஸ்வரியின் அப்பாவிடம் கெஞ்சுகிறாள்.

சக்திக்கு நடந்தது என்ன: மறுபக்கம் ராமேஷ்வரத்தில் சக்தி, தேவகி பற்று பல மடங்களில் விசாரிக்கிறார். ஆனால், யாருக்கும் சரியாக தெரியாததால், என்ன செய்வது என்று தெரியாமல் கடற்கரையில் நின்று கொண்டு யோசித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது, சக்தியை பின் தொடர்ந்து வரும் குணசேகரன் ஆள், குணசேகரனுக்கு போன் செய்து, சக்தி, பல இடத்தில் அந்த கடிதத்தை வைத்துக்கொண்டு விசாரித்து வருகிறார். அப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று என்று கேட்க, குணசேகரன் அவன் கதையை முடித்துவிடு என்கிறார். உடனே அந்த அடி ஆள், சக்தி அசத்து இருந்த நேரம் பார்த்து குத்திவிட, இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. அதைபார்த்த அந்த பகுதி மக்கள் ஓடி வந்து சக்தியை காப்பாற்றுகின்றனர். அந்த நேரத்தில் ரௌடி தப்பித்து விடுகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X