சக்திக்கு தெரிய வந்த உண்மை.. நடக்கப்போவது என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஈஸ்வரியின் அப்பா குணசேகரிடம், என் மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார். இதைப்பாத்ரத்து, ஆத்திரப்படும் சக்தி என்ன பேசுறீங்க தாத்தா என்று கேட்க, டேய் நீ பேசாதேடா, உன் அம்மா படுத்தபடுக்கையாக இருக்கும் போது, அம்மாவை பற்றி கவலைப்படாமல் நீ புது கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியாக இருக்க என்கிறார். இது எல்லாம் இந்த பொண்ணுக்காகத்தானே பண்ண, நீ இனிமேல் எனக்கு பேரன் கிடையாது என்கிறார். இவர் பேசுவதை கேட்டு ஆத்திரப்படும் நந்தினி, தயவு செய்து அக்கா விஷயத்தை தவறான முடிவை எடுக்காதீங்க என்கிறாள். ஆனால், அவர் உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டு, மாப்பிள்ளை நான் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, ஈஸ்வரியை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்கிறார்.

மறுபக்கம் ராமேஷ்வரத்தில் சக்தி, தேவகி பற்று பல மடங்களில் விசாரிக்கிறார். ஆனால், யாருக்கும் சரியாக தெரியாததால், என்ன செய்வது என்று தெரியாமல் கடற்கரையில் நின்று கொண்டு யோசித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது, சக்தியை பின் தொடர்ந்து வரும் குணசேகரன் ஆள், குணசேகரனுக்கு போன் செய்து, சக்தி, பல இடத்தில் அந்த கடிதத்தை வைத்து விசாரித்து வருகிறார் என்கிறார். பல இடத்தில் தேடியும் தேவகி பற்றி தகவல் கிடைக்காததால், என்ன செய்வது என்று சக்தி யோசித்துக்கொண்டு இருக்க அந்த நேரம், அந்த வழியாக வந்த சக்தியின் நண்பன் அவரை பார்த்துவிட்டு விசாரிக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: சக்தி, தான் எதற்காக இங்கே வந்தேன் என்பதை அவரிடம் சொல்ல, சக்தியின் நண்பன், என் அப்பாவிற்கு இங்கு எல்லா இடமும் தெரியும், அவர் ராமேஸ்வரத்தில் 30 வருடமாக இருக்கிறார் என்றார். இதையடுத்து, அங்கு செல்லும் சக்தி தேவகி பற்றி விசாரிக்க. அப்போது அவர் தேவகியை எனக்கு நன்றாக தெரியும், நான் பலமுறை அவரை பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது எங்கே இருக்கிறார் எனக்கு தெரியாது. தனுஷ்கோடியில் ஒரு குருஜி இருந்தார். அவரின் பராமரிப்பில் தான் தேவகி இருந்தார். அவரிடம் சென்று விசாரிக்கலாம் என சொல்கிறார்.

மனசு பதற்றமே இருக்கு: மறுபக்கம் குணசேகரன் வீட்டில் ஜனனி இருக்க அப்போது நந்தினி, ஈஸ்வரியின் அப்பா தேவையில்லாமல் என்னென்னமோ செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு எப்படி புரிய வைப்பது என்றே தெரியவில்லை என்கிறார். அப்போது அங்கு வரும் ரேணுகா, எனக்கு ஏதோ பதற்றமாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாளில் ஏதோ நடக்கப்போகிறது என்கிறாள். அந்த நேரம் பார்த்து கொற்றவையிடம் போன் வருகிறது. அப்போது கொற்றவை குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ கிடைத்தால் மட்டும்தான் நாம் இந்த வழக்கில் ஏதாவது செய்ய முடியும் அதற்கான ஏற்பாடுகளை செய் என சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X