சுயநினைவை இழந்த கரிகாலன்.. மர்ம நபரிடம் இருந்து வந்த ஃபோன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன் வீட்டில் ஜனனி இருக்க அப்போது நந்தினி, ஈஸ்வரியின் அப்பா தேவையில்லாமல் என்னென்னமோ செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு எப்படி புரிய வைப்பது என்றே தெரியவில்லை என்கிறார். அப்போது அங்கு வரும் ரேணுகா, எனக்கு ஏதோ பதற்றமாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாளில் ஏதோ நடக்கப்போகிறது, என் மனம் ஏதோ பதற்றமாக இருக்கிறது என்கிறாள். அந்த நேரம் பார்த்து கொற்றவையிடம் போன் வர, கொற்றவை குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ கிடைத்தால் மட்டும் தான் நாம் இந்த வழக்கில் ஏதாவது செய்ய முடியும் அதற்கான ஏற்பாடுகளை செய் என சொல்கிறார்.

இதையடுத்து இன்றைய எபிசோடில், கொற்றவையிடம் இருந்து போன் வர அவரை பார்ப்பதற்கான ஜனனி, தர்ஷினி இருவரும் செல்கின்றனர். அப்போது கொற்றவை, நான் அஸ்வின் வழக்கை விசாரிப்பதற்கான தனியாக ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியிடம் பேசி ஒரு வரை நியமித்து இருக்கிறார். அவர் நடத்திய விசாரணையில் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சிக்கு மர்ம நபரிடம் இருந்து போன் ஒன்று வந்திருக்கிறது. அந்த போனில் குணசேகரனின் சம்பந்தமான வீடியோ என்னிடம் இருக்கிறது. அதை ஜனனி வந்தால் தான் தருவேன் என கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கும் குணசேகருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை, உங்களை எப்படி அவர்களுக்கு தெரியும் என்றும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், அந்த வீடியோவை ஜனனி வாங்கிக் கொள்வார்கள் என சொல்லி இருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் அந்த வீடியோ வந்து விடும் என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

சுயநினைவை இழந்த கரிகாலன்: குணசேகரன் வீட்டில் ஜனனி டீம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஜனனி இன்னும் இரண்டு நாளில் அந்த வீடியோ, நம் கைக்கு வந்துவிடும் அதன் பிறகு அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதை கரிகாலன் ஒட்டு கேட்டுவிட்டு, அப்போ உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லையா.. 15 நாளில் தான், அனைத்து ஆதாரங்களையும் கண்டுபிடிக்க போகிறீர்களா.. இதை நான் இப்பொழுதே மாமாவிடம் சொல்கிறேன் என ஓடுகிறான். கரிகாலனை அனைவரும் துரத்திச் செல்ல அவன் படிக்கட்டில் சரிக்கி விழுந்து மண்டையில் அடிபட்டு மயங்கி விடுகிறான். பின் எழுந்திருக்கும் கரிகாலன் சுயநினைவை இழந்தது போல நடிக்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X