குணசேகரனை துரத்தும் பெண் சாபம்.. அந்த பெண் யார்? பல திருப்படங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், தர்ஷன், பார்கவி இருவரும் கோயிலுக்கு செல்கின்றனர். அப்போது, பார்கவி, அறிவுக்கரசி பேசியதை கேட்டு, மிகவும் உடைந்து விட்டேன். அறிவுகரசி தவறான பெண்ணாக இருக்கலாம். ஆனால், அவளுடைய தங்கை அன்புக்கரசியை, நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தர்ஷன் தவறு செய்து இருக்கிறான். முதலில் என்னை காதலித்து வேண்டாம் என்றான். அடுத்து அன்புகரசியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பின், அவளையும் வேண்டாம் என்று சொன்னான். மீண்டும் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறினான். இப்படியும் மாத்தி மாத்தி பேசிய தர்ஷனுக்கு மட்டும் தண்டனையே இல்லையா... அவன் செய்ததும் தவறு தானே என்று பார்கவி பேசுகிறாள்.
அப்போது பேசிய ஜீவானந்தம், தர்ஷன் மட்டும் தவறு செய்யவில்லை. அறிவுகரசி, குணசேகரன் என அனைவரும் செய்தது தவறு. ஆனால், அன்புகரசியும் உன்னைப் போன்று ஒரு பெண்தான். அவள் நீ எடுத்த முடிவுபோல, அவளும் துணிந்து ஒரு முடிவு எடுத்திருக் வேண்டும். ஆனால், அவள் அப்படி செய்யவில்லை. அதனால், அதைப் பற்றி நீ கவலைப்படாமல் உன்னுடைய வாழ்க்கையில் நல்ல படியாக வாழுங்கள். இதற்கு மேல் நாம் அனைவரும் சேர்ந்து பயணம் செய்தால், சரியாக வராது நான் கிளம்புகிறேன் என சொல்லிவிட்டு ஜீவானந்தம் அங்கிருந்து கிளம்புகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் வீட்டில் கதறி அழுது கொண்டு இருக்கிறார் குணசேகரன். இதைப்பார்த்து குடும்பமே கலங்கி நிற்கின்றனர். அப்பொழுது கதிர், ஜனனி பேசியதும் எதற்காக திருமணத்திற்கு சம்மதித்தீர்கள் என கதிர் கேட்கிறான். இதற்கு பதில் சொன்ன குணசேகரன், ஈஸ்வரியை நான் வேண்டுமென்றே அடிக்கவில்லை. பேசுவதற்காக போனேன், இருவருக்கும் இடையே சண்டை வந்ததால், அவளை அடித்துவிட்டேன். அதை அவள் வீடியோவாக எடுத்து வைத்து இருந்தால், அந்த வீடியோ அறிவுக்கரசியிடம் கிடைக்க அதை வைத்து அவள் ஒரு திட்டம் போட்டு இருக்கிறாள். அதே வீடியோ வைத்து தான் ஜனனியும் இந்த திருமணத்திற்கு என்னை சம்மதிக்க வைத்தால், இனிமேல் இவர்கள் இருவரும் சும்மா இருக்க மாட்டார்கள் வேண்டுமென்றே ஏதாவது பிரச்சனை செய்து என்னை மாட்டி விடுவார்கள் என சொல்கிறார். அப்போது கதிர், ஞானம் இருவரும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என சொல்கின்றனர்.
பெண் விட்ட சாபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், ஜனனியின் கையில் எப்படி போன் வந்தது என யோசித்த குணசேகரன், தன்னுடைய பீரோவில் சக்தி எடுத்த கடிதத்தை தேடுகிறார். அந்த கடிதம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து குணசேகரன் இடித்து போய் இருக்க, அந்த கடிதத்தில் பெண் ஒருவர்,ராமேஸ்வரத்தில் கடல் அலை கொதிப்பாது போல என் மனம் கொதிக்கிறது. நீ செய்த பாவம் உன்னை சும்மா விடாது, உன்னுடைய குடும்பம், அண்ணன்,தம்பி, தங்கை, உன்னுடைய வாரிசு, பேத்தி என ஒட்டு மொத்த குடும்பமும் அழிந்து போய், நீ நிற்கதியாக நிப்ப. அதற்கு காலம் பதில் சொல்லும் என அந்த பெண் சாபம் விட்டு கடிதம் எழுதியது வருகிறது. இதை நினைத்து குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











