குணசேகரன் VS ஜனனி... அடுத்த யுத்தம் ஆரம்பரம்.. பார்கவிக்கு ஸ்கெட்ச்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், ஜனனியின் கையில் எப்படி போன் வந்தது என யோசித்த குணசேகரன், பீரோவில் தேடிப்பார்க்க, அவர் மறைத்து வைத்து இருந்த கடிதம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அந்த கடிதத்தில் பெண் ஒருவர், ஆக்ரோஷமாக... அழுதுகொண்டே.. இந்த கடிதத்தை 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ந் தேதி எழுதுகிறேன். இந்த கடிதத்தை நீ படிக்கும் போது நான் இறந்து இருப்பேன். ராமேஸ்வரத்தில் கடல் அலை கொதிப்பாது போல என் மனம் கொதித்துக் கொண்டு இருக்கிறது. எல்லாத்தையும் அழித்துவிடலாம், இந்த கடிதத்தில் உள்ள எழுத்துக்கூட அழிந்துவிடலாம். ஆனால், நீ விதைத்த விதை உன்னை விடாது துரத்தும். நீ செய்த பாவம் உன்னை சும்மா விடாது, உன்னுடைய குடும்பம், அண்ணன், தம்பி, தங்கை, உன்னுடைய வாரிசு, பேத்தி என ஒட்டு மொத்த குடும்பமும் அழிந்து போய், நீ நிற்கதியாக நிப்ப. அதற்கு காலம் பதில் சொல்லும் என அந்த பெண் சாபம் விட்டு எழுதி கடிதத்தை நினைத்து குணசேகரன் உடைந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்.

மறுபக்கம், தர்ஷன், பார்கவியை மருத்துவமனையில் இருக்கும் ஈஸ்வரியிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக அழைத்து செல்கின்றனர். மருத்துவமனைகளில் ஈஸ்வரியை பார்த்த தர்ஷன், பார்கவி இருவரும் கதறி அழுதபடி இருக்கின்றனர். அந்த நேரத்தில் பார்கவி, ஈஸ்வரி உன்னை என்னுடைய மகளாக நினைத்தது தான் தர்ஷனை திருமணம் செய்து கொள் என சொல்கிறேன். நிச்சயமாக உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என பேசியதை நினைத்து கண்கலங்குகிறார். இதையடுத்து மருத்துவர் இரண்டு நாட்களாக ஈஸ்வரியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. எந்த மருந்து கொடுத்தாலும் அவருடைய உடல்நிலை ஏற்றுக்கொள்ளவே இல்லை என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக் கேட்டு அனைவரும் கதறி அழுகின்றனர். அப்போது ஜனனி, எப்படியாவது ஈஸ்வரி அக்கா பழையபடி திரும்பி வரவேண்டும். அதற்காக நாங்கள் எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை அளிப்பதற்கும் தயாராக இருக்கிறோம் என சொல்கிறார். இதைக்கேட்ட மருத்துவர், இது குறித்து நான் உயர் மருத்துவர்களிடம் பேசிவிட்டு விஷத்தை சொல்கிறேன் என சொல்கிறார்.

பதுங்கிய குணசேகரன்: இன்றைய எபிசோடில் ஈஸ்வரி, ஜனனி, பார்கவி, தர்ஷன் என அனைவருமே வீட்டுக்குள் வருகின்றனர். அப்போது, கதிர் அருவாளை தூக்கி வீசி இதற்கு மேல் இந்த வீட்டில் உங்களுக்கு இடம் இல்லை. வீட்டுக்குள் கால் வைத்தால் அனைவரின் தலையை வெட்டி விடுவோம் என சொல்கிறார். அப்போது, சக்தி எதுவாக இருந்தாலும் அண்ணன் வந்து பேசட்டும் என்று சொல்ல, குணசேகரன் வந்து, கதிர், ஞானம் இருவரை தடுத்து நிறுத்தி, அனைவரையும் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கிறாள். அப்போது ஜனனியிடம், நீ நினைத்தபடி திருமணம் நடந்து விட்டது, என்னுடைய அனைத்து ஆதாரத்தையும் கொடுத்துவிடு என சொல்கிறார். அதற்கு ஜனனி எனக்கு இன்னும் ஓரு வாரம் டைம் கொடுங்க, எல்லாத்தையும் தருகிறேன் என சொல்கிறாள்.

பார்கவிக்கு குறி: பின் ஞானம், அவர்கள் வீட்டிற்குள் கால் வைத்ததுமே, வெட்டி வீசாமல் அவர்களை விட்டு வைத்தது மிகப்பெரிய தவறு என சொல்கிறார். உடனே குணசேகரன் அவர்களை நாம் ஏன் விட்டு வைத்து இருக்கிறோம் தெரியுமா? இரண்டு பேரும்அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள். ஜனனியிடம் இன்னும் என்னென்ன ஆதாரம் இருக்கிறது என்பதை முழுமையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல, முல்லையும் வீடியோவை அழித்துவிட்டேன் என சொன்னான் அதையும் அழிக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் அமைதியாக இருந்து எதிராளியின் ஆட்டத்தை பார்த்து விட்டு தான். நாம் காய்களை நகர்த்த வேண்டும் . அந்தப் பாட்டு வாத்தியார் இங்கே அடிபட்டு வெளியில் போய் செத்தான். அவன் பெத்து இருக்கும் மகள் பார்கவி இங்கேயே சாவா, அதற்கான நேரம் வரும் அதுவரைக்கும் நாம் அமைதியாக இருந்து என்ன நடக்கிறது என பார்க்க வேண்டும் என குணசேகரன் சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X