கடிதத்தில் இருக்கும் மர்மம் என்ன? சக்தியிடம் தலைகுனிந்த குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: இன்றைய எபிசோடில், தர்ஷன், பார்கவி இருவரும் தங்குவதற்கு சரியான ரூம், கதிர் இருக்கும் அறை தான் என்பதால் அந்த அறைக்கு அவர்களை அழைத்து செல்கிறாள் நந்தினி. அப்போது கதிர், அறையை தர மாட்டேன் என பிரச்சனை செய்கிறான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு குணசேகரன் அமைதியாக இருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் கதிர் கத்திக்கொண்டு இருக்கிறார். அப்போது சக்தி, ஆம்பளையாக இருந்த கல்யாணத்தை நடத்திப் பார்க்க என உன்னுடைய அண்ணன் சொன்னார். நான் கல்யாணத்தை நடத்தி முடித்து விட்டேன். நீ உண்மையில் ஆம்பளையாக இருந்தால், அந்த பொண்ணு மேல அந்த பொண்ணு மேல கை வைடா பாப்போம் என துணிச்சலாக சொல்கிறார் சக்தி. அதன்பின் குணசேகரன், கதிரை சமாதானப்படுத்தி வெளியில் படுக்க சொல்கிறார். அண்ணன் சொன்னதால் வெளியில் படுத்து இருக்கும் கதிர் ஆத்திரத்தோடு எல்லாம் இன்னும் ஒருவாரத்திற்குத்தான் என சொல்கிறான்.

இன்றைய எபிசோடில், டைனிங் டேபிள் ஆத்திரத்தோடு கதிர், ஞானம் உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது விஷாலாட்சி, இந்த தர்ஷனிடம் எத்தனையோ முறை எடுத்து சொன்னேன். பார்கவியை திருமணம் செய்து கொள்ள வேண்டாம், அன்புக்கரசியை திருமணம் செய்து கொள் என்று. ஆனால், அவன் என் பேச்சை கேட்காமல் பார்க்கவியை திருமணம் செய்து கொண்டான். பெரியவனுக்கு பிறந்த ரெண்டுமே அந்த விளங்காதவள் ஈஸ்வரி போலவே இருக்கிறது. வீட்டுக்கு வந்த முதல் நாளே, பார்கவி என்னுடைய மகனை வெளியில் படுக்க வைத்து விட்டால், இன்னும் என்னென்ன செய்யப்போறாலே என ஆத்திரத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர், தர்ஷன், பார்கவி இருக்கும் அறையின் கதவை வேகமாக தட்டுகிறான். அப்போது நந்தினி ஓடி வந்து, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா, நீயும் கல்யாணமானவன் தானே, எதற்காக இப்படி நடந்து கொள்கிறாய் என திட்டுகிறாள். அந்த நேரத்தில் கரிகாலன், கல்யாணம் ஆனவன் தான் கதவை தட்டக்கூடாதா, அப்போ நான் கதவை தட்டுகிறேன் என கதவை தட்டுகிறான். இதைப்பார்த்த தர்ஷினி, கரிகாலனை தள்ளிவிட்டு உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என கேட்கிறாள். அப்போது, உங்க ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு, இது எல்லாம் ஒரு வாரத்திற்கு தான். அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என சொல்கிறான்.

அடுத்து நடக்கப்போவது என்ன: அந்த நேரம் ஜனனி கீழே இறங்கி வந்து, எல்லா விஷயத்தையும் கண்டுபிடிப்பதற்கு எனக்கு ஒரு வாரம் போதும். அதன் பிறகு என்ன நடக்கிறது என பார்க்கலாம் என சொல்கிறான். அந்த நேரம் ஞானம், கண்டுபிடிச்சேன்,கண்டுபிடிச்சேன் என்றால் எதை கண்டுபிடிச்ச என கேட்கிறான். உடனே சக்தி, நான் என்ன கண்டுபிடிச்சேன் என்று அண்ணனிடம் கேள், அவர் எதற்கான அமைதியாக இருக்கிறார் என்றும் கேள். அவர் சொல்வார் என சொல்கிறான். இதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அமைதியாக இருக்கின்றனர். மறுபக்கம், வீடியோ கிராபர் கவினின் நண்பன், சக்திக்கு போன் செய்து வீடியோவை கொடுத்து விடுவதாக சொல்ல சக்தி அவனுக்கு லொகேஷன் அனுப்பி அந்த இடத்திற்கு வர சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X