வீட்டை விட்டு ஓடிய குணசேகரன்.. காணாமல் தவிக்கும் குடும்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: இன்றைய எபிசோடில், சக்தியும் ஜனனியும் வீடியோ கிராபரை சந்தித்து பேசிவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். அப்போது, ஞானம், சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்க இதனால் ஆத்திரமடைந்த சக்தி தேவையில்லாமல் பேசினால் அவ்வளவு தான் என சொல்கிறான். அப்போது ஞானம், பொண்டாட்டியின் முந்தானையை பிடித்து அலைந்து கொண்டிருக்கும் நீ எல்லாம் யாரைப் பற்றியும் பேசக்கூடாது என்று சொல்ல ஆத்திரப்படும் சக்தி, இனிமேல் நீ பேசிக்கொண்டு இருப்பதை என்னால் கேட்டுக் கொண்டு இருக்க முடியாது. ஒரு அடி அடித்தால் அது பத்தாக திரும்ப கிடைக்கும் ஜாக்கிரதையாக இருங்க என மிரட்டிவிட்டு மாடிக்கு செல்கிறான்.

அப்போது, நந்தினி, அவங்களிடம் எதற்கு சக்தி இவர்களிடம் தேவையில்லாமல் பேசிக்கிட்டு இருக்க, இவர்களை யாராலும் திருத்தவே முடியாது என்கிறார். பின், நந்தினி, காலையிலிருந்து யாரும் சாப்பிடவே இல்லை. தினமும் வெளியில் வாங்கி சாப்பிட முடியாது. சமைக்க ஆரம்பிக்கலாமா என கேட்கிறாள். அப்போது ஜனனி, கொஞ்சம் அமைதியாக இருங்க அக்கா எல்லாம் சரியாகட்டும் என்கிறாள். அந்த நேரம் தர்ஷன் தூங்கிக் கொண்டு இருக்க அப்போது சக்தி இந்த நேரத்தில் என்ன தூக்கம் என எழுப்புகிறான். உடனே நந்தினி நேற்று தான் திருமணமாகி இருக்கு அதன் களப்பில் தூங்குகிறான் என சொல்ல, ஆத்திரப்படும் தர்ஷன், நீங்கள் நினைப்பது போல எதுவுமே நடக்கவில்லை தயவு செய்து கிண்டல் செய்யாதீர்கள் என கோவப்பட்டு கத்துகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: தர்ஷனை சமாதானப்படுத்தும் சக்தி, பார்கவி உன்னையே நம்பி வந்திருக்கா? இந்த வீட்டில் அனைவரும் உனக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டார்கள் அவர்களை நீ காயப்படுத்துவது போல பேசுவது சரியில்லை என்கிறான். உடனே தர்ஷன் நான் என்ன அப்படி தவறாக பேசிவிட்டேன் என்று இப்படி, ஆளு ஆளுக்கு அட்வைஸ் பண்ணீங்க என்று சத்தமாக கத்துகிறான். இதனால் ஆத்திரப்படும் சக்தி, இப்படி கத்தி பேசுவது தான் தவறு என சொல்கிறான். நான் கோவத்தில் பேசுவதால் சத்தமாக வருகிறது என்று சொல்கிறான். அப்போது ஜனனி, உன்னுடைய கோபத்தை நீ அடக்க வேண்டும் தர்ஷன். இத்தனை நாள் உன்னுடைய குணத்தால் பாதிக்கப்பட்டது உன்னுடைய அம்மா. இனிமேலும் நீ இப்படியே இருந்தால், அதனால் பாதிக்கப்படுவது பார்கவி தான். அவள் இத்தனை விஷயம் நடந்த பிறகும், உன்னை கல்யாணம் செய்து கொண்டதற்கு காரணம், உன் மேல இருக்கும் நம்பிக்கையும், அன்பாலும் தான் என்று ஜனனி சொல்ல, தர்ஷன் அமைதியாக நின்று அனைத்தையும் கேட்கிறான். வெளியில் இப்படி பிரச்சனை நடந்து கொண்டு இருக்க குணசேகரன் தனது அறையை விட்டு வராமல் அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

குணசேகரன் எங்கே போனார்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், வீடியோகிராபரிடம் இருந்து வீடியோவை வாங்குவதற்காக ஜனனியும் சக்தியும் நீண்ட நேரம் காத்திருந்து வீடியோவை வாங்கி வருகின்றனர். இருவரும் வீட்டிற்கு வந்ததும், சக்தியிடம் ஞானம் பிரச்சினை செய்கின்றான். அப்போது, இந்த வீட்டில் இருக்கும் அனைவருமே ஜெயிலுக்கு போக போகிறீர்கள், அது கட்டாயம் நடக்கப்போகிறது என சத்தி சொல்கிறான். அந்த நேரம் கரிகாலன் வீட்டில் குணசேகரன் மாமாவை காணவில்லை இல்லை என சொல்கிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X