கரிகாலனை தூக்கிப்போட்டு மிதித்த சக்தி.. ரணகளமான வீடு..எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜனனி, சக்தி இருவரும் வீடியோகிராபரிடம் இருக்கும் வீடியோவை வாங்குவதற்காக செல்கின்றனர். நீண்ட நேரமாக அவனுக்காக காத்திருக்கின்றனர். ஆனால்,அந்த வீடியோகிராபர் காரில் வந்த மர்ம நபர் ஒருவரிடம் வீடியோவை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான். இதனால் ஜனனி, சக்தி இருவருக்கும் வீடியோவை கிடைக்காமல் போகிறது.
வீட்டிக்கு சக்தியிடம், நந்தினி வீடியோ பற்றி கேட்க, ஃபோனில் வீடியோ இருக்கிறதா என்று சரியாக தெரியவில்லை என்கிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி, அந்த வீடியோ மட்டும் இல்லை என்றால் குணசேகர், நம் அனைவரையும் கொன்று புதைத்து விடுவார், அந்த வீடியோ நம்மிடம் இருக்கும் பயத்தில் தான் நம்மை இந்த வீட்டில் இருக்க வைத்து இருக்கிறார் என்கிறார். அப்போது, அந்த வீடியோ மட்டும் காரணம் இல்லை அண்ணி என்று, மறைத்து வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் கொடுக்கிறார் சக்தி. அந்த கடிதத்தில் குணசேகரா... நீ மட்டும் தான் ஆதி குடும்பத்தின் வாரிசா என எழுதி இருப்பதை படித்த நந்தினி. இந்த கடிதத்திற்கு பின்னால் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறார். ஆமாம், அண்ணி அது பற்றி விசாரிப்பதற்காக நானும், ஜனனியும் நாளை ராமேஸ்வரத்திற்கு போகிறேன் என்கிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், குணசேகரன் எங்கே சென்றார் என தெரியாமல் விசாலாட்சி, கதிர், ஞானம், கரிகாலன் என அனைவரும் ஒவ்வொருவருக்காக ஃபோன் செய்து, அங்கு வந்தாரா என விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது விசாலாட்சி, கண்ட கழுதை எல்லாம் வீட்டுக்குள்ள இருக்கு, இந்த வீட்டின் ஆணி வேர், வீட்டை விட்டு போய்டான், எங்கே இருக்கான், என்ன பண்றானு ஒன்னுமே தெரியவில்லையே என புலம்பிக்கொண்டு இருக்கிறாள். அப்போது, குணசேகரனிடம் இருந்து கதிருக்கு ஃபோன் வருகிறது. அதில், ஜனனி, சக்தியை இருவரிடமும் மிகப்பெரிய ஆதாரம் ஒன்று சிக்கி இருக்கிறது. அது மட்டும் வெளியில் வந்தால், நம்முடைய ஒட்டுமொத்த குடும்பத்தின் மானமும் போய்விடும் அது வெளியே வரக்கூடாது, இதற்காகத்தான் ஒரு முக்கியமான வேலையை பார்க்க நான் வெளியில் வந்து இருக்கிறேன். வருவதற்கு இரண்டு நாள் ஆகும். வந்ததும் சக்தி, ஜனனி இருவருக்கும் ஒரு முடிவு கட்டுவேன், அம்மாவிற்கு பொறந்தது மூன்று பிள்ளைகள் தான், அந்த சக்தியை தலைமுழுகச் சொல்லிடு என்று கோவத்துடன் போனில் சொல்கிறார் குணசேகரன்.
கொந்தளித்த சக்தி: இன்றைய எபிசோடில், கதிர், கரிகாலனிடம் சக்தி, ஜனனி ஏதோ ஒரு திட்டத்தை போடுகிறார்கள் அது என்ன என்று தெரிந்து வரும்படி அனுப்புகிறான். அதை தெரிந்து கொள்வதற்காக மேலே வரும் கரிகாலன், சக்தி ஜனனி இருவரும் அறையில் பேசிக்கொண்டு இருப்பதை ஒட்டு கேட்கிறான். வெளியில்,கரிகாலன் ஒட்டு கேட்பதை தெரிந்து கொண்ட சக்தி அவனை தூக்கிப்போட்டு மிதிக்கிறான். இதனால், அந்த வீடே ரணகளம் ஆகிறது. இருவரும் வெளியில் போவதை தெரிந்து கொண்ட கதிர் யாரும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது, போனால் காலை வெட்டி விடுவேன் என தகராறு செய்கிறான்.


Click it and Unblock the Notifications











