பார்கவி பத்தி தப்பா பேசினா அவ்வளவு தான்.. கொந்தளித்த ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில், சக்தி, ஜனனியிடம் அண்ணன் சம்மந்தப்பட்ட விஷயம் ஏதோ ஒன்று இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு வரும் படி தூங்கிக்கொண்டிருந்த கரிகாலனை எழுப்பி கதிர் மற்றும் ஞானம் இருவரும் சொல்கின்றனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கரிகாலன், இந்த நேரத்தில் நான் அவங்களுடைய ரூமுக்கு போனால் என் கதை முடிந்தது என்னால் போக முடியாது என்று சொல்ல, கதிர், அவனை கட்டாயப்படுத்தி அனுப்புகிறான். சக்தி மற்றும் ஜனனி இருவரும் அறையில் யாருக்கும் தெரியாமல் நுழையும் கரிகாலன். அங்கு இருக்கும் பல பொருட்களை எடுத்து தேடுகிறான். கடைசியாக ஜனனியின் கைப்பையை எடுத்து, குணசேகரன் மாமா சம்பந்தமான விஷயம் ஏதாவது இருக்கிறதா என தேடிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு இருந்த பொருளை தட்டி விட, அந்த சத்தம் கேட்டு சக்தி எழுந்து, கரிகாலனை பார்த்து எதற்காக என்னுடைய அறைக்கு வந்த என கேட்டு சரியான அடிக்கிறான்.

கரிகாலன் கத்தும் சத்தத்தை கேட்டு அனைவரும் எழுந்து வந்து விடுகின்றனர். அப்போது சக்தி, உனக்கு என்னுடைய அறையில் என்ன வேலை, எதுக்கு இங்கே வந்த என்று சரியாக அடிக்கிறான். அப்போது, கதிர், ஞானம் அனைவரும் அங்கு வந்துவிடுகின்றனர். அப்போது, சக்தி யார் சொல்லி ரூமுக்குள் வந்தே என்று கேட்டு அடிக்க, அந்த வீடே ரணகளம் ஆகிறது. இருவரும் வெளியில் போவதை தெரிந்து கொண்ட கதிர் யாரும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது, போனால் காலை வெட்டி விடுவேன் என தகராறு செய்கிறான்.

Sun television Ethirneechal Thodargiradhu serial October 18th full episode review
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுநாள் காலை, நந்தினி, ரேணுகா இருவருமே தங்களுடைய மகளுக்கு புது துணியை எடுத்து, அதை வீட்டில் கொடுத்து விடும்படி, ஒருவரை வரவைத்து கொடுக்கிறாள். இதை பார்த்துக்கொண்டு இருந்த விசாலாட்சி, தீபாவளி அதுமா பிள்ளைகளை இங்க வர சொல்லாம உங்க அம்மா வீட்டில் வச்சிருந்தா என்ன அர்த்தம் என்ன கேட்கிறாள். அப்போது நந்தினி, இந்த வீட்டில் குழந்தைகள் வளர்ந்தால் நல்லா இருக்காது அதனால்தான் எங்க அம்மா வீட்டில் அவர்கள் பாதுகாப்பாக வளர்கிறார்கள் என சொல்கிறாள்.

இனி மேல் சும்மா இருக்க மாட்டேன்: மேலும், உடனே நந்தினி, எங்க பிள்ளைகளை பத்தி கவலைப்படுவது இருக்கட்டும், தர்ஷனுக்கு இப்பொழுது தான் திருமணமாகி இருக்கு, அவனுக்கு இது தல தீபாவளி அதை பற்றி பேசுங்க என சொல்கிறாள். இதைக்கேட்டு கடுப்பான விசாலாட்சி நடந்தது ஒரு கல்யாணமா, அப்பா, அம்மா இல்லாத பொண்ணுக்கு தல தீபாவளி ஒரு கேடா என கேட்கிறாள். இதைக் கேட்டு ஆத்திரப்படும் ஜனனி, அந்த பெண்ணை அந்த நிலைமைக்கு ஆக்கியது யார், நீங்களும் உங்க பசங்களும் தானே, இனிமேல் யாராவது பார்கவி பார்த்து தவறாக பேசினால் சும்மா இருக்க மாட்டேன் என சொல்கிறாள். இதையடுத்து, இன்றைய எபிசோடில், விசாலாட்சியின் தம்பி, தீபாவளி சீர் செய்வதற்காக வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு வந்து தீபாவளி சீர் செய்ய, விசாலாட்சி தம்பியின் பாசத்தை பார்த்து கண்கலங்குகிறாள். இதை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பார்கவி நமக்கு யாருமே இப்படி இல்லையா என வருத்தப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X