தர்ஷன், பார்கவி தல தீபாவளி.. இன்னும் இந்த வீட்டில் பல யுத்தம் நடக்கும்.. கலங்கிய விசாலாட்சி!
சென்னை: நேற்றைய எபிசோடில், தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தல தீபாவளி வருவதால், அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஜனனி டீம் திட்டம் போடுகின்றனர். ஆனால், பார்கவியால் தான் என்னுடைய மகன் குணசேகரனே இந்த வீட்டை விட்டே வெளியே சென்று இருக்கிறான். இந்த விடியா மூச்சு, பார்கவிக்கு தல தீபாவளி ஒரு கேடாக என்று விசாலாட்சி கோவத்தோடு திட்டுகிறாள். இதனால் ஆத்திரப்படும் ஜனனி, பார்கவி பற்றி இனிமேல் யாரும் தப்பாக பேசக்கூடாது. பார்கவி இன்றைக்கு யாருமே இல்லாமல் அனாதையாக இருப்பதற்கு காரணமே உங்களுடைய மகன்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள் என விசாலாட்சியிடம் சண்டை போடுகிறாள். இதைத்தொடர்ந்து ரேணுகா, நந்தினி இருவரும் ஈஸ்வரி அக்கா இருந்திருந்தால், இவர்களின் தல தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருப்பார்கள். இதனால், தர்ஷனின் தல தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம் என்கின்றனர்.
இந்த நேரம் பார்கவிக்கு பார்சல் ஒன்று வர, அதைப்பார்த்து கடுப்பான கதிர், பார்கவி என்று யாரும் இந்த வீட்டில் இல்லை என்று சொல்கின்றனர். அப்போது, சக்தி சென்று, பார்கவி இந்த வீட்டு மருமகள் தான் என்று சொல்லி பார்சலை வாங்கி வருகிறார். அந்த பார்சலில் ஜீவானந்தம் கிஃப்ட் இனுப்பி இருக்கிறார். அதைப்பார்த்து சந்தோஷப்பட்ட பார்கவி, ஜீவானந்தத்திற்கு ஃபோன் செய்து, நான் ரெண்டு நாள் அங்கு வந்து இருக்கட்டுமா என்று கேட்கிறாள். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் ஜீவானந்தம், என்ன பார்கவி பேசுற, இது உன்னுடைய தலை தீபாவளி ஆயிரம் தீபாவளிகள் வந்தாலும் இந்த தீபாவளி உண்மையில் ஒரு சிறப்பான தீபாவளி என்பதை மறந்து விடாதே. ஜனனிக்கு நீ எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும். அந்த வீட்டில் இருப்பது உனக்கு கஷ்டமாக இருந்தாலும், அதுதான் உன்னுடைய வீடு, போக போக எல்லாம் சரியாகிவிடும் என பார்கவிக்கு சில அறிவுரைகளை கூறுகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதைத்தொடர்ந்து விசாலாட்சியின் தம்பி, தீபாவளி சீர் செய்வதற்காக வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு வந்து தீபாவளி சீர் செய்ய, விசாலாட்சி தம்பியின் பாசத்தை பார்த்து கண்கலங்குகிறாள். அப்போது கதிர், எங்க அம்மா கோடீஸ்வரி, அவங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயில் சீரா என்று, கேவலமாக பேசுகிறான். இதைக்கேட்டு ஆத்திரப்படும் விசாலாட்சி, டேய் கதிர், என்ன பேசிக்கிட்டு இருக்க, இது வெறும் பணம் இல்லடா என் தாய் வீட்டு பாசம், நான் செத்தபிறகு, என்கிட்ட இருக்கும் நகைகள் எல்லாத்தையும் புடிங்கிடுவீங்க, ஆனால், கடைசி வரை வருவது தாய்வீட்டு கோடித்துணிதான் என்று கண்கலங்குகிறாள்.
இன்னும் பல யுத்தம் நடக்கும்: இதைத்தொடர்ந்து, இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்து இருக்கும் விஷாலாட்சியின் தம்பி, ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் இந்த குடும்பம் பல சங்கடங்களை சந்திக்கப் போகிறது என சொல்ல அதைக் கேட்டு விஷாலாட்சி அதிர்ச்சி அடைகிறாள். ஏனென்றால், ஏற்கனவே தர்ஷனின் திருமணத்தில் உயிர் பலி நடக்கும் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே, போட்டோகிராபர் மண்டபத்திலேயே கொல்லப்பட்டான். இப்போது, குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரும் என கூறியிருப்பதால், விசாலாட்சி வருத்தப்படுகிறாள். இதையடுத்து எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











