மூன்று பேரும் ஸ்பார்ட் அவுட்.. குணசேகரனுக்கு வேட்டு வைத்த சக்தி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க ஜனனியிடமிருந்து எந்த தகவலும் வராததால், ரேணுகா,சக்தி, நந்தினி என அனைவருமே பதற்றத்தில் இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து சக்தி கொற்றவைக்கு ஃபோன் செய்து, மண்டபத்தில் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்கிறான். தர்ஷனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. ஆனால். வலுக்கட்டாயமாக தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்கள் என்று சொல்கிறார் சக்தி. இதைக்கேட்ட கொற்றவை, தர்ஷனுக்கு இது பிடிக்காத திருமணம் என்பதால் போலீசை அழைத்து வந்து திருமணத்தை நிறுத்தலாம். ஆனால் , தர்ஷன், என்னுடைய சம்மதத்தில் தான் இந்த திருமணம் நடக்கிறது என்று சொல்லிவிட்டால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது.
ஆனால், ஜீவானந்தத்திடம் குணசேகருக்கு எதிராக ஈஸ்வரி அனுப்பிய ஆடியோ இருக்கிறது. அதை வைத்து ஏதாவது செய்யலாம் என சொல்கிறார். உடனே சக்தி அந்த ஆதாரம் என்னிடம் இல்லை. அது ஜீவானந்தத்திடம் தான் இருக்கிறது, அவரை அப்போது தொடர்பு கொள்ள முடிவில்லை என்கிறார். அது மட்டுமல்லாமல் அறிவுக்கரசி ஒரு ஃபோனை வைத்திருந்தால் அந்த போனிலும் எந்த ஆதாரங்களையும் எடுக்க முடியவில்லை. அந்த ஃபோன் இப்போது, அண்ணன் அறையில் தான் இருக்கிறது என சொல்கிறார். உடனே, கொற்றவை, இந்த ஃபோனில் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என பாருங்கள் அதை வைத்து, நாம் ஏதாவது முயற்சி செய்து இந்த திருமணத்தை நிறுத்தலாம் என சொல்கிறாள்.

எதிர்காட்சித் தொடரகிறது: மறுபக்கம் ஜீவானந்தம், ஜனனி, பார்கவி வரும் காரை பின் தொடர்ந்து வந்த லாரி காரின் மீது மோதி விடுகிறது. இதில், பார்கவி, ஜீவானந்தம், ஜனனி மூன்று பேரும் ஸ்பாட்டுலேயே அவுட், நீங்க சொன்னபடி கதையை முடித்துவிட்டேன், எலும்பு கூட மிஞ்சாது என்கிறார். உடனே குணசேகேரன்... டேய்...உண்மையத்தான் சொல்றியா என்று கேட்க, ஆமாம்... அண்ணன்,எல்லாத்தையும் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். நீங்க கவலைப்படாமல் கல்யாணத்தை நடத்துங்கள் என்கிறான். இதைக்கேட்டு குணசேகரன் மகிழ்ச்சி அடைந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்கிறார்.
கடிதத்தில் என்ன இந்தது: மறுபக்கம் வீட்டிற்கு சென்ற சக்தி, குணசேகரன் அறையில் ஃபோனை தேட, அவரின் கையில் சொத்து பத்திரம் கிடைக்கிறது. எனக்கு எந்த சொத்தும் வேண்டாம், எல்லாத்தையும் இந்த வீட்டின் வாரிசுகளுக்கு எழுதிவைத்துவிடுகிறேன் என்று சொன்ன சொத்துக்கள் அனைத்தும், அண்ணன் குணசேகரன் பேரிலேயே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். மேலும், சக்தியின் கையில் ஒரு கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்தி அப்படியே உறைந்து போகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











