எதுவுமே நடக்கலயா? கொச்சையா பேசிய கரிகாலன்.. கொந்தளித்த பார்கவி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்து இருக்கும் விஷாலாட்சியின் தம்பி, ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் இந்த குடும்பம் பல சங்கடங்களை சந்திக்கப் போகிறது. இதை நான் சொல்லவிலலை புளியங்குடி மதுரைவீரன் சொல்கிறான் என்கிறார். அதைத் தொடர்ந்து தீபாவளி என்றால், என்னத் தெரியுமா, கெட்ட எண்ணத்தை தீயில் போட்டு விட்டு, மகிழ்ச்சியோடு வாழ்வது தான், அந்த குடும்பத்தில் என்ன பிரச்சனை இருந்தாலும், அதை மனதில் வைத்து கொள்ள வேண்டும் பண்டிகை கொண்டாமல் இருக்க வேண்டாம் என்று சொல்கிறார்.

இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர், சீர் கொடுப்பதற்கு தானே வந்தீங்க, தேவையில்லாமல் எதுவும் பேச வேண்டாம் வெளியில் போங்க என்று சொல்கிறார். இதைத் தொடர்ந்து விசாலாட்சி தனது தம்பிக்கு 100 ரூபாய் கொடுக்கிறாள். என்னிடம் இந்த காசு தான் இருக்கு என்கிறாள், உடனே அவர் அக்கா, எனக்கு எப்போதும் 10 ரூபாய் தான் தருவா, இப்போ 100 ரூபாய் கொடுத்து இருக்க அக்கா, ரொம்ப சந்தோஷம் என்கிறார். அதன் பின் விசாலாட்சி நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் எனக்கு நீ தீபாவளி சீர் செய்ய வேண்டும் என்று சொல்ல, கலங்கிய கண்ணோடு அவர் வெளியில் செல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைஎல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த பார்கவி தன்னுடைய அப்பா தலை தீபாவளிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் ஜனனி நடந்ததை எல்லாம் மறப்பது மிகவும் கஷ்டம் தான் அதற்காக இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று மட்டும் நினைக்காதே, நானும் அப்படித்தான் நினைத்து ஒரு நாள் வீட்டை விட்டு ஓடி விட்டேன். ஆனால், அப்பத்தா தான் என்னை மீண்டும் இந்த வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். உனக்கு என்ன கஷ்டமாக இருந்தாலும் அதை என்னுடன் பகிர்ந்து கொள், நான் உனது சகோதரி என சொல்ல கண் கலங்கும் பார்கவி, என்னுடைய அப்பா தலை தீபாவளிக்கு சிகப்பு புடவை தான் வாங்கி தர வேண்டும் என சொல்லியிருந்தார். அதேபோல இப்போது எனக்கு சிகப்பு புடவை வந்து இருக்கிறது, அதைப்பார்த்ததும் எனக்கு என் அப்பா நினைவு வந்து விட்டது என கண் கலங்குகிறாள். அப்பொழுது ஜனனி, உன்னுடைய அப்பா மேலே இருந்து உன்னை பார்த்துக்கொண்டே இருக்கிறார். அவர் பார்க்கும் போது நீ அழுது கொண்டு இருக்கக் கூடாது, சிரித்துக் கொண்டே இரு என சொல்கிறாள்.

ஆத்திரப்படும் பார்கவி: இதையடுத்து, இன்றைக்கு எபிசோடில் கதிர் தன்னுடைய அம்மாவுக்கு பாட்டு புடவை வாங்கி வந்து தருகிறார். அதைப் பார்த்த விசாலாட்சி, இது நான் கட்டும் புடவை போல இல்லையே, சின்ன பொண்ணுங்க கட்டும் புடவை போல இருக்கு என்கிறார். அப்போது, கரிகாலன், என்ன மாமா வடிவுக்கரசிக்கு வாங்கும் நினைப்பில் வாங்கி வந்து விட்டீர்களா? என கேட்கிறான். அதன்பின், கரிகாலன் தர்ஷனை பார்த்து, ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கிறீங்க, ஆனால், வெளியில் வந்தவுடன் ஒண்ணுமே தெரியாதது போல நடிக்கிறீர்களே என கொச்சையாக பேசுகிறார். இதனால், ஆத்திரப்படும் பார்கவி மரியாதையாக பேசுங்கள் என ஆத்திரப்பட்டு கத்துகிறாள். இதையடுத்து, இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X