வீட்டிற்குள் வந்த நபர்.. அசிங்கப்படுத்திய கதிர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில் கதிர் விசாலாட்சிக்கு பட்டு பாட்டு புடவை வாங்கி வந்து தருகிறார். அதைப் பார்த்த விசாலாட்சி, இது நான் கட்டும் புடவை போல இல்லையே, சின்ன பொண்ணுங்க கட்டும் புடவை போல இருக்கு என்கிறார். அப்போது, கரிகாலன், என்ன மாமா வடிவுக்கரசிக்கு வாங்கும் நினைப்பில் வாங்கி வந்து விட்டீர்களா? என கேட்கிறான். அப்போது, நந்தினி, அந்த அந்த புடவையை வைத்துவிட்டு, நாங்க வாங்கி வந்து இருக்கும் புடவையை கட்டிக்கொள்ளுங்கள் என்று வேறு ஒரு புடவையை தர,அந்த புடவையை வாங்கிக்கொண்டு, கதிர் இந்த புடவையை வேறு யாருக்காவது கொடுத்துவிடு என்கிறாள்.
வெளியில் கரிகாலன், கதிர், ஞானம் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது கரிகாலன் எனக்கு பசி எடுக்கிறது யாரிடம் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறீர்கள், அவர்களுக்கு போன் செய்து சீக்கிரம் வர சொல்லுங்கள் என்று சொல்லுங்க என்கிறான். பின் ஞானம் ஃபோன் போட்டு, சீக்கிரமா சாப்பாட்டை எடுத்துவாங்க என்றுசொல்ல, அந்த கடைக்காரர் இறந்துவிட்டதால் கடையை மூடிவிட்டதாக சொல்கின்றனர். இதனால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என தெரியாமல் அனைவரும் இருக்கின்றனர். அப்போது கரிகாமல், சாப்பாட்டு விஷயத்தில் எதற்கு கௌரவம், பேசாமல் கவுரவத்தை விட்டு இவர்களிடமே சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு விடலாமா என நினைத்துக் கொண்டு இருக்கிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அந்த நேரத்தில் சாமிக்கு பூஜை போடப்பட்டு தலை தீபாவளி தம்பதிகளான தர்ஷன் பார்கவி இருவரையும் ஒன்றாக அமர வைத்து பலகாரங்களையும் உணவுகளையும் பரிமாறுகின்றனர். அப்போது நந்தினி தர்ஷனிடம் பார்கவிக்கு ஊட்டி விடு என சொல்கிறான். ஆனால், தர்ஷன் அதெல்லாம் வேண்டாம், சித்தி என்ன சொல்கிறான் இதைக் கேட்டுக் கொண்டிருந்த கரிகாலன். ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கிறீங்க, ஆனால், வெளியில் வந்தவுடன் ஒண்ணுமே நடக்காதது போல நடிக்கிறீர்களே என கொச்சையாக பேசுகிறார். இதனால், ஆத்திரப்படும் பார்கவி மரியாதையாக பேசுங்க, நீங்க நினைப்பது போல எங்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை என ஆத்திரத்தோடு கத்துகிறாள். அப்போது ஜனனி, அவன் ஏதோ பேசுகிறான் அவனைப் பற்றி தான் உனக்கு நன்றாக தெரியுமே அவன் கிட்ட உனக்கு என்ன பேச்சு என்கிறாள். ஆனாலும் ஆத்திரம் குறையாமல் நந்தினி தேவையில்லாமல் இவர் பேசிக்கொண்டே இருக்கிறார் என சொல்கிறார். அப்போது நந்தினி. கணவன் மனைவிக்குள் அறையில் நடப்பதை பற்றி பொது இடத்தில் பேசக்கூடாது என சொல்கிறாள்.
அசிங்கப்படுத்திய கதிர்: இதையடுத்து இன்றைய எபிசோடில் ரேணுகாவின் அம்மா நந்தினியின் அம்மா இருவருமே தீபாவளி சீரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். இவர்கள் இருவரையும் பார்த்த கதிர் எதற்காக இப்போது வீட்டிற்குள் வந்தீர்கள் உங்களை யார் கூப்பிட்டது என கேட்கிறாரன். இவர்களின் சத்தம் கேட்டு வந்த நந்தினி ரேணுகா இருவரும் அம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக இங்கே வந்தீர்கள், அதான் தீபாவளி இல்லை எனறு சொல்லிவிட்டேனா, மானத்தை வாங்குவதற்காகவா எங்கே வந்தீங்களா என கேட்கிறாள். அப்போது நந்தினியின் அம்மா இந்த வீட்டின் நிலைமை சரியில்லை என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் நீ தீபாவளிக்கு துணி வாங்கிய விஷயத்தை கேள்வி பட்டேன். அதற்காகத்தான் உனக்கு சீர் செய்துவிட்டு போகலாம் என வந்தேன் என சொல்கிறாள்


Click it and Unblock the Notifications











