இதே பெட்ரூமில் நமக்குள்ள நடந்தெல்லாம் மறந்துட்டியா? தர்ஷனை கார்னர் செய்த அன்புக்கரசி.. எதிர்நீச்சல்
சென்னை: நேற்றைய எபிசோடில் அறிவுக்கரசி சிறையில் இருப்பதால் அவளை எப்படியாவது வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அன்புகரசி மற்றும் முல்லை இருவரும் குணசேகரன் வீட்டுக்கு வந்து உதவி கேட்கின்றனர். இவர்களைப் பார்த்து ஆத்திரப்படும் கதிர், எதற்காக இங்கே வந்துங்க என கேட்கிறார். அப்போது முல்லை, சிறையில் இருக்கும் அறிவுக்கரசியிடம் பேசும்படி சொல்கிறான். அப்போது அறிவுக்கரசி, நான் அவர்களை அங்கே போக வேண்டாம் என்றுதான் சொன்னேன். என் மீது இருக்கும் பாசம் காரணமாக அவர்கள் அங்கே வந்து விட்டார்கள். அவர்களை அனுப்பி வைத்து விடுங்கள் என சொல்கிறாள். அதை தொடர்ந்து, முல்லையிடம் பேசும் அறிவுக்கரசி என் புள்ளைய எதுக்கு அங்கு கூட்டிக்கொண்டுபோன, உன்னால் முடிந்தால் அட்வகேட்டை வைத்து என்னை வெளியில் எடு, இல்லை என்றால், ஜெயிலேயே சாகிறேன். அதற்காக என் மகளை அங்கே அனுப்பி கஷ்டப்படுத்தாதே என்கிறாள்.
அதன் பின் முல்லை, அன்புக்கரசியிடம் வீட்டிற்கு போகலாம் வா.... அறிவு இங்கிருந்து போக சொல்லிவிட்டால் என்கிறான். அப்போது, விசாலாட்சி, எங்கேபோறீங்க, அன்புக்கரசி இங்கேயே இருக்கட்டும், அவங்க அக்கா செய்த தப்புக்கு சின்ன பொண்ணு இவள் என்ன செய்வா பாசம், பெரியவன் வரட்டும் அவன் வந்து முடிவு எடுக்கட்டும் அதுவரைக்கும் அன்புக்கரசி இங்கே இருக்கட்டும் என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஜனினியின் டீம் மொத்தமும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து இன்றைய எபிசோடில், தர்ஷனும் பார்கவியும் இருந்த அறைக்கே அன்புக்கரசியும் வருகிறாள். அந்த நேரம், தர்ஷனும் பார்கவியும் துணியை எடுக்க உள்ளே வந்த நிலையில், அன்புக்கரசி என்ன தர்ஷா இதே ரூமில், இதே படுக்கையில் நீயும் நானும் எத்தனை நாட்கள் ஒன்றாக இருந்தோம் என்பதை மறந்துட்டியா.. இந்த விஷயம் எல்லாம் யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைக்கிறாயா.. என சொல்கிறாள். இதைக்கேட்டு பார்கவி அதிர்ச்சி அடைந்து நிற்க, அப்போது தர்ஷன் என்ன பேசுற அன்புக்கரசி, ஏன் இப்படி தப்பு தப்பா பேசுற, இப்படியெல்லாம் பொய் சொல்றே என கத்துகிறான். அப்போது, அன்புக்கரசி நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை. எத்தனை நாளும், நீயும் நானும் ஒரே அறையில் இருந்தோம். அதையெல்லாம் நீ மறந்துட்ட, என சொல்ல ஆத்திரப்படும் தர்ஷன்,அன்புக்கரசியின் கழுத்தை பிடித்து நெரிக்க அந்த நேரம் பார்த்து அனைவரும் ஓடி வருகின்றனர்.
நமக்குள்ள நடந்தெல்லாம் மறந்துட்டியா: அப்பொழுது, விசாலாட்சி, ஏய்... தர்ஷா நான் இவக்கூட சண்டை போடக்கூடாது என்று சொல்லித்தானே அனுப்பினேன். இரண்டு நாள் அமைதியா இரு, பெரியவன் வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிகிறாள். அப்போது, தர்ஷன் சக்தியிடம் அன்புக்கரசி தேவை இல்லாமல் பொய் சொல்கிறாள், தப்பு தப்பா பேசுகிறாள் என சொல்கிறான். இது அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த பார்கவி திகைத்துப் போய் நிற்க, அப்போது தர்ஷன், அன்புக்கரசி சொல்வது எல்லாம் பொய், நான் இந்த ரூமில் தனியாக இல்லை, கரிகாலன், கதிர் சித்தா அனைவரும் இருந்தார்கள், பைத்தியம் மாதிரி தேவையில்லாமல் அவ பொய் சொல்கிறாள், நீ எதையும் நம்பாதே பார்கவி, எங்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை என சொல்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











