அறிவு வாய் திறந்தா என்னாகும் தெரியுமா?ஜெயிலில் அறிவுக்கரசி போடும் ஸ்கெட்ச்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: நேற்றைய எபிசோடில், தர்ஷனும் பார்கவியும் இருந்த அறைக்கே அன்புக்கரசியும் வருகிறாள். அந்த நேரம், தர்ஷனும் பார்கவியும் துணியை எடுக்க உள்ளே வந்த நிலையில், அன்புக்கரசி என்ன தர்ஷா இதே ரூமில், இதே படுக்கையில் நீயும் நானும் எத்தனை நாட்கள் ஒன்றாக இருந்தோம் அதையெல்லாம் மறந்துட்டியா.. இந்த விஷயம் எல்லாம் யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைக்கிறாயா.. என சொல்கிறாள். இதைக்கேட்டு பார்கவி அதிர்ச்சி அடைந்து நிற்க, அப்போது தர்ஷன் என்ன பேசுற அன்புக்கரசி, ஏன் இப்படி தப்பு தப்பா பேசுற, இப்படியெல்லாம் ஏன் பொய் சொல்றே என கத்துகிறான். அப்போது, அன்புக்கரசி நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை. எத்தனை நாள், நீயும் நானும் ஒரே அறையில் இருந்தோம். அதையெல்லாம் நீ மறந்துட்ட, என சொல்ல ஆத்திரப்படும் தர்ஷன், அன்புக்கரசியின் கழுத்தை பிடித்து நெரிக்க அந்த நேரம் பார்த்து அனைவரும் ஓடி வருகின்றனர்.
அப்போது, தர்ஷன் சக்தியிடம் அன்புக்கரசி தேவை இல்லாமல் பொய் சொல்கிறாள், தப்பு தப்பா பேசுகிறாள் என சொல்கிறான். இது அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த பார்கவி திகைத்துப் போய் நிற்க, அப்போது தர்ஷன், அன்புக்கரசி சொல்வது எல்லாம் பொய், நான் இந்த ரூமில் தனியாக இல்லை, கரிகாலன், கதிர் சித்தா அனைவரும் இருந்தார்கள், பைத்தியம் மாதிரி தேவையில்லாமல் அவ பொய் சொல்கிறாள், நீ எதையும் நம்பாதே பார்கவி, எங்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை என சொல்கிறான். அப்போது, கரிகாலன், டேய்... தர்ஷன் நீ உங்க அப்பனையே மிஞ்சிடுவடா, முதலில் பார்கவியை காதலிச்சா, அப்புறம் அன்புக்கரசியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று, அந்த விட்டிற்கு போன, அப்போ பார்கவியை கல்யாணம் செய்துக்கிட்டு, இந்த சின்ன பொண்ணு அன்புக்கரசியை ஏமாத்தி இருக்க என்று சொல்கிறான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு பார்கவி அமைதியாக இருக்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இவை அனைத்தையும் பார்த்த பார்கவி எதுவுமே பேசாமல், அமைதியாக இருக்கிறாள். இவர்கள் இருவரையும் பார்த்து ஜனனி வருத்தப்படுகிறாள். அப்போது, நந்தினி நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போகிறது. இவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றால், அந்த வீடியோ கிடைத்தால் தான் சரியாக இருக்கும் என சொல்கிறாள். அப்போது, ஜனனி, அந்த வீடியோ எங்களிடம் இல்லை அக்கா, வீடியோவை கொடுப்பதாக சொன்னவன் எங்களை ஏமாற்றி விட்டான் என சொல்கிறாள். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது ஜனனி, அறிவுக்கரசி ஏதோ ஒரு திட்டத்தை போட்டு இருக்கிறாள் குணசேகரன் பற்றி அனைத்து விஷயம் தெரிந்தும், அவள் ஏன் போலீசில் அதைப்பற்றி சொல்லவில்லை. இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அன்புக்கரசியை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறாள். இதனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சொல்கிறாள்
அறிவுக்கரசி வாய் திறந்த என்னாகும் தெரியுமா?: இன்றைய எபிசோடில், இதனை நாட்களாக ராமேஸ்வரத்தில் இருந்த குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். குணசேகரனை பார்த்து கண் கலங்கும் விசாலாட்சி, இத்தனை நாளா எங்கபோய்ட்ட, நீ இல்லாமல் வீடு வீடாகவே இல்லை என சொல்கிறாள். அப்போது குணசேகரன் சில விஷயங்களை தனியாக இருந்தால்தான் முடிவு எடுக்க முடிகிறது. மனதும் அமைதியாக இருக்கிறது. அதற்காகத்தான் சென்றேன் என சொல்கிறார். அப்போது அன்புக்கரசி நிற்பதை பார்த்து நீ எதற்காக இங்கே வந்தே என்று கேட்க, அப்போது முல்லை எங்களுக்கு என்று யாருமே இல்லை மாமா. நாங்க அனாதையாகி விட்டோம், அதனால் தான் இந்த வீட்டில் அடைக்கலமாக வந்திருக்கிறோம்.அறிவுக்கரசி உங்களுக்காக எவ்வளவு செய்து இருக்கு என்பதை மறந்துவிடாதீர்கள். இப்ப கூட அறிவுக்கரசி உங்களைப்பற்றி சொன்னால் உங்களுடைய நிலைமை என்ன ஆகும், ஆனால், அறிவு உங்களைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கு என சொல்கிறான்.இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











