காவு வாங்கும் வீடியோ.. அஸ்வினை சுட்டுத்தள்ளிய மர்ம நபர் யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில், ராமேஸ்வரத்தில் இருந்த குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். குணசேகரனை பார்த்து கண் கலங்கும் விசாலாட்சி, இத்தனை நாளா எங்க போய்ட்ட, நீ இல்லாமல் வீடு வீடாகவே இல்லை என சொல்கிறாள். அப்போது குணசேகரன் சில விஷயங்களை தனியாக இருந்தால்தான் முடிவு எடுக்க முடிகிறது. மனதும் அமைதியாக இருக்கிறது. அதற்காகத்தான் சென்றேன் என சொல்கிறார். அப்போது அன்புக்கரசி நிற்பதை பார்த்து நீ எதற்காக இங்கே வந்தே என்று கேட்க, அப்போது முல்லை எங்களுக்கு என்று யாருமே இல்லை மாமா. நாங்க அனாதையாகி விட்டோம், அதனால் தான் இந்த வீட்டில் அடைக்கலமாக வந்திருக்கிறோம்.அறிவுக்கரசி உங்களுக்காக எவ்வளவு செய்து இருக்கு என்பதை மறந்துவிடாதீர்கள். இப்ப கூட அறிவுக்கரசி உங்களைப்பற்றி சொன்னால் உங்களுடைய நிலைமை என்ன ஆகும் என்கிறான்.

இன்றைய எபிசோடில், குணசேகரன் பையில் இருந்து கரிகாலன் துப்பாக்கி ஒன்றை எடுக்கிறான். இதை பார்த்த ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு, குணசேகரன் வீடு எப்படி இருக்க வேண்டும், யார் பேச்சுக்கு யார் அடங்க வேண்டும், இந்த வீட்டுப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும், யாருக்கு அடங்கி இருக்க வேண்டும் என எல்லாத்தும் சேர்த்து இனி முடிவு எடுக்க போகிறேன் என்கிறார். இதனால், அனைவரும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற பயத்தில் இருக்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து குணசேகரன் தனது அனைத்து அறைக்கு வர, அங்கே சக்தி ஜனனி இருவரும் நிற்கின்றனர். அப்போது சக்தியிடம் என் ரூமில் இருந்து எடுத்த அனைத்தையும் ஒழுங்கா என்னிடம் கொடுத்துவிடு என கேட்கிறார். அப்போது சக்தி, எதை கேட்கிறீர்கள், ஃபோனை கேட்கிறீர்களா... இல்லை தம்பி பேருக்கு மாற்றி எழுதிய சொத்து உங்க பேரிலையே இருக்கிறதே அந்த பத்திரத்தை கேட்கிறீர்களா என்று சக்தி கேட்டதும் ஆத்திரப்படும் குணசேகரன்,சக்தியின் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க வருகிறார். அப்போது சக்தி அந்த லெட்டம் என்னிடம் தான் இருக்கு என்று சொல்ல, உடனே குணசேகரன் லெட்டரா அது என்ன என்று கேட்கிறார். அப்போது, ஜனனி, சக்தி இவருக்கு அந்த லெட்டரை பற்றி ஒன்னும் தெரியவில்லை. இதுக்கு மேல அது என்ன என்று நாம விசாரிக்கலாம் என்று சொல்கிறாள். இதையடுத்து, ஆத்திரப்பட்ட குணசேகரன், இன்னும் 15 நாட்களுக்குள் என் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டு, இந்த வீட்டை விட்டு ஓடவிடவேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால், புருஷன் பொண்டாட்டி இருவருக்குமே கருமாதி செய்து விடுவேன் என எச்சரிக்கிறார்.

காவு வாங்கும் வீடியோ: இதைத்தொடர்ந்து சக்தி, ஜனனி இருவருமே என்ன செய்வது என யோசித்துக் கொண்டு இருக்க, வீடியோ கிராஃபர் கெவினின் நண்பன் அஸ்வினிடமிருந்து போன் வருகிறது. தன்னை நான்கு பேர் பைக்கில் துரத்திக் கொண்டு இருப்பதாகவும் என்னிடம் இருக்கும் அந்த ஆதாரத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்கிறான். இதையடுத்து, அவன் அனுப்பிய லொகேஷனுக்கு சக்தி, ஜனனி இருவரும் காரில் செல்கின்றனர். ஆனால், அஸ்வினிடம் வீடியோவை வாங்குவதற்கு முன்பாகவே யாரோ பைக்கில் வந்த மர்ம நபர் அஸ்வினை சுட்டு கொன்றுவிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X