குணசேகரனை பழி தீர்க்க வரும் முதல் வாரிசு.. கொற்றவையால் தெரியவந்த உண்மை.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில், குணசேகரன் தனது அறையில் இருந்து எடுத்த சக்தியிடம் என் ரூமில் இருந்து எடுத்த அனைத்தையும் ஒழுங்கா என்னிடம் கொடுத்துவிடு என கேட்கிறார். அப்போது சக்தி, எதை கேட்கிறீர்கள், ஃபோனை கேட்கிறீர்களா... இல்லை தம்பி பேருக்கு மாற்றி எழுதிய சொத்து உங்க பேரிலையே இருக்கிறதே அந்த பத்திரத்தை கேட்கிறீர்களா என்று சக்தி கேட்டதும் ஆத்திரப்படும் குணசேகரன்,சக்தியின் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க வருகிறார். அப்போது சக்தி அந்த லெட்டம் என்னிடம் தான் இருக்கு என்று சொல்ல, உடனே குணசேகரன் லெட்டரா அது என்ன என்று கேட்கிறார். அப்போது, ஜனனி, சக்தி இவருக்கு அந்த லெட்டரை பற்றி ஒன்னும் தெரியவில்லை. இதுக்கு மேல அது என்ன என்று நாம விசாரிக்கலாம் என்று சொல்கிறாள். இதையடுத்து, ஆத்திரப்பட்ட குணசேகரன், இன்னும் 15 நாட்களுக்குள் என் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டு, இந்த வீட்டை விட்டு ஓடவிடவேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால், புருஷன் பொண்டாட்டி இருவருக்குமே கருமாதி செய்து விடுவேன் என எச்சரிக்கிறார்.
காவு வாங்கும் வீடியோ: இதைத்தொடர்ந்து சக்தி, ஜனனி இருவருமே என்ன செய்வது என யோசித்துக் கொண்டு இருக்க, வீடியோ கிராஃபர் கெவினின் நண்பன் அஸ்வினிடமிருந்து போன் வருகிறது. என்ன யாரோ துரத்திக் கொண்டு இருப்பதாகவும் என்னிடம் இருக்கும் அந்த ஆதாரத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்கிறான். இதையடுத்து, அவன் அனுப்பிய லொகேஷனுக்கு சக்தி, ஜனனி இருவரும் காரில் செல்கின்றனர். ஆனால், அஸ்வினிடம் வீடியோவை வாங்குவதற்கு முன்பாகவே யாரோ பைக்கில் வந்த மர்ம நபர் அஸ்வினை சுட்டு கொன்றுவிடுகின்றனர்.

குணசேகரனின் முதல் வாரிசு: இதையடுத்து இன்றை எபிசோடில், சக்தி, ஜனனி இருவரும் இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் உடலை கைப்பற்றுகின்றனர். இதையடுத்து,இருவரையும் போலீசார் துருவி துருவி விசாரிக்க சந்தேகம் அடைந்த ஜனனி, கொற்றவையிடம் நடந்ததை சொல்கிறாள். அப்போது கொற்றவை அஸ்வினை கொன்றது குணசேகரனாக இருக்குமா... இல்லை அறிவுக்கரசி டீமாக இருக்குமா என்று கேட்க, அப்போது ஜனனி இரண்டு பேரும் இல்லை. வேறு யாரோ ஒருவர் அஸ்வினிடம் பணத்தை கொடுத்து வீடியோவை வாங்கி சென்று இருக்கிறார்கள். அவர்கள் தான் அஸ்வினை கொன்று இருக்க வேண்டும், குணசேகரன் மீது இவ்வளவு வன்மத்தோடு இருக்கும் நபர் யார் என்று தெரியவில்லை என சொல்கிறாள்.
நடக்கப்போவது என்ன: அதன் பின் கொற்றவை அஸ்வினின் அம்மாவை அழைத்து விசாரிக்க அவர், யாரிடமோ இருந்து போன் வந்ததால், அவன் வேலையில் சென்றான் என்று சொல்ல, போனை ஆய்வு செய்த போது, அதில் இருந்த நம்பரை வைத்து கொற்றவை விசாரணையை தொடங்குகிறார். மறுபக்கம், குணசேகரனுக்கு, ஜனனியிடம் எந்த வீடியோவும் இல்லை என்று சந்தேகம் வருவதால், இருவரும் வந்ததும், எதற்கான அந்த பையைனை தேடி சென்றீர்கள் அப்படி என்றால், அந்த வீடியோ ஒன்னிடம் இல்லையா... அந்த வீடியோவில் என்ன இருந்தது என்று சொல் என்று கத்துகிறார். அப்போது ஜனனி, அதான் 15 நாட்களுக்குள் தருகிறேன் என்று சொன்னேனே என்று சொல்ல, அது இருக்கட்டும் முதலில் அந்த வீடியோவில் என்ன இருக்கு சொல் என்று கத்துகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











