தம்பியை கொல்ல துணிந்த குணசேகரன்.. வீட்டைவிட்டு வெளியேறிய சக்தி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில் கொற்றவை அஸ்வினின் அம்மாவை அழைத்து விசாரிக்க அவர், யாரிடமோ இருந்து போன் வந்ததால், அவன் வேலையில் சென்றான் என்று சொல்ல, போனை ஆய்வு செய்த போது, அதில் இருந்த நம்பரை வைத்து கொற்றவை விசாரணையை தொடங்குகிறார். மறுபக்கம், குணசேகரனுக்கு, ஜனனியிடம் எந்த வீடியோவும் இல்லை என்று சந்தேகம் வருவதால், இருவரும் வந்ததும், எதற்கான அந்த பையைனை தேடி சென்றீர்கள் அப்படி என்றால், அந்த வீடியோ உன்னிடம் இல்லையா... அந்த வீடியோவில் என்ன இருந்தது என்று சொல் என்று கத்துகிறார்.
இன்றைய எபிசோடில், ஜனனி, அந்த வீடியோவில் அக்கா உங்களை பேசுவதற்காக கூப்பிட்டாங்க, அப்போது இரண்டு பேருக்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது, நீங்க அக்காவை அடிச்சீங்க அதில் அக்கா மயக்கமடைந்து விழுந்துவிட்டார்கள். இதுக்கு மேல நீங்க என்ன பேசுசீங்க என்று சொல்லவேண்டுமா என்று கேட்க, பதறிப்போன குணசேகரன், இன்னும் 15 நாட்களுக்குள், அனைத்து ஆதாரத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டு இந்த வீட்டை விட்டு ஓடவேண்டும் இல்லை என்றால், கதையை முடித்துவிடுவேன் என சொல்கிறான். குணசேகரிடம் பேசிவிட்டு வெளியே வரும் ஜனனியிடம் என்ன ஆச்சு என்று நந்தினி கேட்க, அவருக்கு என்னிடம் வீடியோ இருக்கா என்கிற சந்தேகம் வந்துவிட்டது. அந்த வீடியோவை பற்றி கேட்டார் என்கிறாள். அப்போது, நந்தினி, அய்யோ அவருக்கு நம்மிடம் வீடியோ இல்லை என்பது தெரிந்துவிட்டதா என்று கேட்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: உடனே ஜனனி, இல்லை அக்கா, அஸ்வின் பார்க்க போகும் வழியில் அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கு என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அதை வைத்து, அந்த வீடியோ நான் பார்த்ததாக சொல்லிவிட்டேன் என்கிறாள். ஈஸ்வரி அக்காவை அடிச்சி இந்த நிலைமைக்கு ஆக்கி இருக்கிறார். இவரை இதுக்கு மேல நாம சும்மாவிடக்கூடாது, அந்த வீடியோவை எப்படியாவது வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது, கொற்றவை ஜனனிக்கு போன் செய்து, அஸ்வினிடம் இருக்கும் வீடியோ யாரோ சிலர் பணத்தை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள், அது யார் என்று தெரியவில்லை, அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறேன் என்கிறாள்.
குணசேகரன் போட்ட விதை : அதைத்தொடர்ந்து, ஜனனி, சக்தியிடம் அந்த வீடியோவை குணசேகரனிடம் இல்லை, அறிவு ஜெயிலில் இருக்கா அவளும் வாங்கவில்லை என்றால், குணசேகரனுக்கு எதிராக இருக்கும் யாரோ தான் அந்த வீடியோ வாங்கி இருக்கிறார்கள். அப்படி என்றால், அந்த வீடியோவை வைத்து அவரை யாரோ பழி தீர்க்க நினைக்கிறார்கள் அது யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது சக்திக்கு ராமேஸ்வர லெட்டர் விஷயம் நினைவுக்கு வர, ஜனனி அது வேற யாரும் இல்லை குணசேகரன் போட்ட விதை தான் இப்போ பழிவாங்க துடித்துக்கொண்டுஇருக்கிறது. அது யார் என்று கண்டுபிடிக்க நான் நாளை ராமேஸ்வரம் போகிறேன் என்கிறான்.
சக்தியை கொல்ல துணிந்த குணசேகரன்: மறுநாள் காலை சக்தி, ராமேஸ்வரம் கிளம்பும் போது, குணசேகரன் யாரும் இந்த வீட்டைவிட்டு வெளியே போக்கூடாது என்று சொல்ல, சக்தி, நான் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, நான் நிச்சயம் போவேன் என்கிறான். உடனே அப்படியே போய்விடு திரும்பி வந்துவிடாதே, போகிற இடத்தில் உனக்கு எதாவது ஆச்சுனா அதற்கு நான் பொருப்பு இல்லை என்று சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











