சக்தியை துரத்தும் பேராபத்து.. தர்ஷனுக்கு குறிவைத்த குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை : குணசேகரனுக்கு எதிராக இருக்கும் யாரோ தான் அஸ்வினிடம் இருந்து அந்த வீடியோ வாங்கி இருக்கிறார்கள். அப்படி என்றால், அந்த வீடியோவை வைத்து அவரை யாரோ பழி தீர்க்க நினைக்கிறார்கள் அது யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது சக்திக்கு ராமேஸ்வர லெட்டர் விஷயம் நினைவுக்கு வர, ஜனனி அது வேற யாரும் இல்லை குணசேகரன் போட்ட விதை தான் இப்போ பழிவாங்க துடித்துக்கொண்டு இருக்கிறது. அது யார் என்று கண்டுபிடிக்க ராமேஸ்வரம் கிளம்புகிறார். அப்போது, குணசேகரன் யாரும் இந்த வீட்டைவிட்டு வெளியே போக்கூடாது என்று சொல்ல, சக்தி, நான் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, நான் நிச்சயம் போவேன் என்கிறான். உடனே அப்படியே போய்விடு திரும்பி வந்துவிடாதே, போகிற இடத்தில் உனக்கு எதாவது ஆச்சுனா அதற்கு நான் பொருப்பு இல்லை என்று சொல்கிறார்.

இதையடுத்து, விலை உயர்ந்த காரில் குணசேகரன் வீட்டுக்கு வரும் ஒருவர், இந்த பகுதியில் பெரிய ஓட்டல் ஒன்றை கட்டப்போகிறோம். இந்த பகுதியில் இருக்கும் அனைவரிடமும் பேசிவிட்டோம். உங்கள் வீடு 8 கிராவுண்ட், அதை எங்களிடம் நீங்கள் விற்றால், மார்க்கெட் விலையை விட 30 சதவீதம் அதிகமாக தருகிறோம் என்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் குணசேகரன், டேய் நான் யாருனு தெரியுமா, பெரிய விளக்கெண்ண மாதிரி நடுவீட்டிற்கு வந்து வீட்டை விலை பேசிக்கிட்டு இருக்க, வாழ்கிற வீட்டை விற்கும் அளவிற்கு நாங்க நாறப்பய இல்லைடா... வெளியில் போடா என்று குணசேகரன் கத்துகிறார். அப்போது, அந்த நபர், எங்க பாஸுக்கு எப்படி இந்த வீட்டை வாங்க வேண்டும் என்று தெரியும் என சொல்கிறான். இதைக்கேட்டு கடுப்பான கதிர், ஞானம் இருவரும் அந்த நபரை அடித்து வெளியில் துரத்துகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஜனனிக்கு காரை விட்டு இறங்காமல் இருந்த நபர் யார்? எதற்காக அவர் வீட்டிற்குள் வராமல், வேறு ஒருவனை வீட்டிற்கு அனுப்பினார் என்ற சந்தேகம் வர கீழே கிடந்த விசிட்டிங் கார்டை எடுத்து பார்க்கிறாள். அப்போது நந்தினி, யாராக இருக்கும் இவர் எதற்கு வீட்டிற்கு வந்தார் என்று கேட்க தெரியவில்லை அக்கா, இதன் பின்னால் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என சொல்கிறாள். பின், வீடியோ கிராபர் அஸ்வினின் வீட்டிற்கு போய்விட்டு வருகிறேன். வீடியோ சம்பந்தமாக ஏதாவது ஆதாரம் வீட்டில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்கிறாள்.

குணசேகரின் ஆட்டம்: இன்றைய எபிசோடில், தர்ஷன், அன்புக்கரசியை வீட்டை விட்டு வெளியில் போ என்று சொல்ல, அந்த பெண்ணாக வெளியில் போக சொல்ல நீ யாருடா, நீ எனக்கு மகனும் இல்லை, நான் உனக்கு அப்பனும் இல்லை. நீ வீட்டை விட்டு வெளியில் போடா என்று சொல்கிறார். மறுபக்கம், ராமேஸ்வரத்திற்கு சென்ற சக்தி, அந்த லெட்டரில் இருக்கும் முகவரி குறித்து ஒரு டீ கடையில் விசாரிக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் இருப்பர், கோவிலுக்கு அருகில் பழைய போஸ்ட் மாஸ்டர் இருக்கிறார். அவருக்கு இந்த முகவரி தெரியும் நீங்கள் அவரிடம் சென்று விசாரிகள் என்று சொல்ல, சக்தி அங்கு கிளம்புகிறார். சக்தியை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர், குணசேகருக்கு போன் செய்து நீங்கள் சொன்ன ஆள் இங்கு விசாரித்துக் கொண்டு இருக்கிறார் என சொல்ல அப்போது குணசேகரன், அவன்தான் என் எதிரி அவனை சும்மா விடக்கூடாது. அவன் எங்கே போனாரால், என்ன செய்கிறார் என்று எனக்கு தகவல் கொடுத்துக் கொண்டே இரு, மீறி ஏதாவது செய்தால் அவன் கதையையும் முடித்துவிடு என சொல்கிறார் இதை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X