கயிற்றில் தொங்கிய தர்ஷன்.. அறிவுக்கரசிக்கு ஆப்பு வைத்த போலீஸ்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: மண்டபத்தில் திருமண வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. திருமண நேரம் நெருங்கிவிட்ட போதிலும் ஜனனி மண்டபத்திற்கு வராததால் மனம் உடைந்து போன தர்ஷன். நந்தினி, ரேணுகாவிற்கு ஃபோன் செய்து, எனக்கும் பார்கவிக்கும் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. என்னால், அன்புக்கரசியின் கழுத்தில் தாலி கட்ட முடியாது? இதற்கு மேல் வாழ வேண்டும் என்ற ஆசையே போய்விட்டது. அம்மா கண் விழித்தால் மன்னித்து விடுங்கள் என சொல்லிவிடுங்கள், பார்கவியிடம் நான் சாரி கேட்டேன் என சொல்லுங்கள் என சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறான். இதைக்கேட்டு பதறிப் போன நந்தினி, ரேணுகா இருவரும் மண்டபத்திற்கு ஓடி வந்து விஷயத்தை கதிர், ஞானத்திடம் சொல்ல அவர்கள் நாடகம் போடுறீங்களா என சொல்லி அவர்களை விரட்டுகின்றனர்.
தர்ஷன் போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக சொன்னான், தயவுசெய்து அவனைக் காப்பாற்றுங்கள் என சொல்ல அனைவரும் ஓடி சென்று தர்ஷன்அறையின் கதவை தட்டுகின்றனர். ஆனால், தர்ஷன் ஈஸ்வரியின் புடவையை எடுத்து, ஃபேனில் மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். சரியான நேரத்தில் கதிர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று. அவனை அடித்து நீ தற்கொலை செய்து கொண்டாலும் அன்புக்கரசியுடன் தான் கல்யாணம் நடக்கும். இந்த திருமணத்தை யாராலும் நிறுத்த முடியாது என சொல்கிறான். இதைத்தொடர்ந்து திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்க, நந்தினி, குணசேகரிடம் தயவு செய்து இந்த கல்யாணத்தை நிறுத்துங்க, அவன் சாவதற்கே துணிந்துவிட்டான். இப்படி புடிக்காத கல்யாணத்தை ஏன் செய்கிறீர்கள் என கேட்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது, அறிவுக்கரசி, நீ நந்தினி வெளியில போடி... தர்ஷன் செத்தாலும், அவை ஐஸ் பெட்டியில் வெச்சாவது என் தங்கச்சி குடும்பம் நடத்துவா... தர்ஷன் குணசேகரன் மகனா சாகாமல், என் வீட்டு மருமகனா சாகட்டும் யார் என்ன சொன்னாலும், இந்த கல்யாணம் நடந்தே ஆகவேண்டும் என சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் ரேணுகா, ஏய்... நீ எல்லாம் பொம்பளையா, செத்தாலும் கல்யாணம் நடக்கணுமா... டேய் தர்ஷா நீ தாலி கட்டுடா பாத்துக்கலாம்... கல்யாணத்தை தான் கட்டாயமாக செய்ய முடியும், வாழப்போவது நீ தான், நீ தாலி கட்டு, அப்புறம் டைவர்ஸ் பண்ணிக்கலாம் என சொல்கிறாள். மறுபக்கத்தில், ஜனனி, பார்கவி, ஜீவானந்தம் அனைவரும் காருக்காக காத்துக்கொண்டே இருக்கின்றனர் அப்போது புலிகேசியின் போலீஸ் டீம் அவர்களை பார்த்து விட அவர்கள் மூவரும் வெவ்வேறு திசைக்கு ஓடுகின்றனர்.
கதறி அழும் அறிவுக்கரசி: இன்றைய எபிசோடு எபிசோடில், தர்ஷன் அன்புக்கரசியின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு தயாராக இருக்கும் நேரத்தில் போலீஸ் டீம் மண்டபத்திற்குள் நுழைந்து, அறிவுகரசி போட்டோகிராபரை கொலை செய்து இருக்கிறாள். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. அவளை கைது செய்ய வேண்டும் என சொல்கிறார். இதை கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்கிறது. இதனால், பதறிப் போனா அறிவுக்கரசி, திருமணத்தை நல்லபடியாக நடத்தி வையுங்கள் மாமா அதன் பிறகு நடைப்பதை பார்த்துக் கொள்ளலாம். முதலில் என்னுடைய தங்கையின் கல்யாணம் நடக்க வேண்டும் என சொல்கிறாள். ஆனால், குணசேகரன் எதுவுமே பேசாமல் இருக்க, போலீஸ், அறிவுக்கரசியை கைது செய்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











