நான் தான் கொலை பண்ணேன்.. குணசேகரனை மாட்டிவிட்ட அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: பிடிக்காத திருமணத்தால் மனம் நொத்துப்போன தர்ஷன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், நந்தினி, ரேணுகா இருவரும் காப்பாற்றி விடுகின்றனர். அதன் பின் கதிர் அவனை அடித்து தொல்லை கொடுக்கிறான். அப்போது, அறிவுக்கரசி, நீ செத்தாலும் எனக்கு கவலை இல்லை. உன் உடம்பை ஐஸ் பெட்டியில் வெச்சாவது என் தங்கச்சி குடும்பம் நடத்துவா... தர்ஷன் குணசேகரன் மகனா சாகாமல், என் வீட்டு மருமகனா சாகட்டும் யார் என்ன சொன்னாலும், இந்த கல்யாணம் நடந்தே ஆகவேண்டும் என சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் ரேணுகா, ஏய்... நீ எல்லாம் பொம்பளையா, செத்தாலும் கல்யாணம் நடக்கணுமா... டேய் தர்ஷா நீ தாலி கட்டுடா பாத்துக்கலாம்... கல்யாணத்தை தான் கட்டாயமாக செய்ய முடியும், வாழப்போவது நீ தான், நீ தாலி கட்டு, அப்புறம் டைவர்ஸ் பண்ணிக்கலாம் என சொல்கிறாள்.
இதைக்கேட்டு ஆத்திரப்படும் ஞானம்,ஏய் என்னடி பேசுற நீ, உனக்கு அவ்வளவு தெரியம் வந்துடுச்சா, என சொல்லி ரேணுவாவை அடித்து இருவரையும் வெளியில் துரத்துகிறான். அப்போது, தர்ஷன், ஏன் அவங்களை அடிக்கிறீங்க அவங்களே வெளியில் போவாங்க என்று, சித்தி, கவலைப்படாதீங்க, கொஞ்ச நேரத்தில் தப்பான முடிவு எடுத்துவிட்டேன். இனிமேல், அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டேன். நான் செய்தது தப்புத்தான், இவங்க என்ன வேண்டும் என்றாலும் பண்ணட்டும் இனி மேல் நான் சாகமாட்டேன் சித்தி நீங்க தைரியமாக இருங்கள் என்று சொல்கிறான். அப்போது,ரேணுவா... டேய்... தர்ஷன் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நாம உயிரோட இருக்கணும் தான், சாக வேண்டியது நீ இல்ல, அப்படி அநியாம் செய்யும் இவங்க தான் என்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கத்தில், ஜனனி, பார்கவி, ஜீவானந்தம் அனைவரும் காருக்காக காத்துக்கொண்டே இருக்கின்றனர் அப்போது புலிகேசியின் போலீஸ் டீம் அவர்களை பார்த்து விட அவர்கள் மூவரும் வெவ்வேறு திசைக்கு ஓடுகின்றனர். ஒரு கட்டத்தில் மூன்று பேரும் தப்பிவிட, புலிகேசி என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். அந்த நேரத்தில் ஜீவானந்தம் புக் செய்த கார் அந்த இடத்திற்கு வருகிறது. அந்தக் காரை பார்த்த புலிகேசி, காரை புக் செய்தது யார், அவரின் பெயர் என்ன என்று கேட்டு டிரைவரிடம் விசாரணை நடத்துகிறார். இதை தூரத்தில் இருந்து ஜீவானந்தம் பார்த்துக் கொண்டு இருக்கிறார். சரியான நேரத்தில் எப்படியாவது மண்டபத்திற்கு போக வேண்டுமா என்ற பதற்றத்தில் இருக்கிறார் ஜீவானந்தம்.
என்ட்ரி கொடுத்த ஜனனி: இன்றைய எபிசோடு எபிசோடில், புலிகேசியை இந்த இடத்திலிருந்து அனுப்பினால் தான் பார்கவியும் ஜனனியும் திருமண மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், புலிகேசியை டைவர்ட் செய்யும் விதமாக ஜீவானந்தம் அந்த இடத்தில் இருந்து ஓடுகிறார். ஜீவானந்தம் ஓடுவதை பார்த்த புலிகேசி அவரை பிடிப்பதற்காக ஓட, அந்த நேரம் பார்த்து, ஜனனி, பார்கவி இருவரும் அந்த காரில் ஏறி தப்பி மண்டபத்திற்கு தப்பி வருகின்றனர். மண்டபத்தில் தர்ஷன், அன்புக்கரசியின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு தயாராக இருக்கும் நேரத்தில், மண்டபத்திற்கு வரும் போலீஸ் டீம், அறிவுகரசி போட்டோகிராபரை கொலை செய்து இருக்கிறாள். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. அவளை கைது செய்ய வேண்டும் என சொல்கிறார். இதை கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்கிறது. இதனால், தர்ஷனின் திருமணம் நடப்பது தாமதமாக, அந்த நேரம் பார்த்து ஜனனி பார்கவியுடன் மண்டபத்திற்குள் என்ட்ரி கொடுக்கிறாள்.


Click it and Unblock the Notifications











