தாலியை கையில் எடுத்த தர்ஷன்.. வேதனையில் பார்கவி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில், புலிகேசியை இந்த இடத்திலிருந்து அனுப்பினால் தான் பார்கவியும் ஜனனியும் திருமண மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், புலிகேசியை டைவர்ட் செய்ய என்ன செய்ய வேண்டும் என ஜீவானந்தம் யோசித்துக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் புலிகேசிக்கு உயர் அதிகாரியிடம் இருந்து போன் வர, புலிகேசி அந்த இடத்தில் இருந்து கிளம்புகிறார். இதையடுத்து, மறைந்து இருந்து இருந்த அனைவரும் அந்த காரில் ஏறி செல்கின்றனர்.

மண்டபத்தில் தர்ஷன் திருமணத்திற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அப்போது, பாதபூஜை செய்ய வேண்டும் என ஐய்யர் சொல்கிறார். உடனே விசாலாட்சி, ஞானம் நீ போய் ரேணுகாவை அழைத்துவா என்று சொல்கிறார். இதைக்கேட்ட ஞானம், அவள் எதுக்கு, இந்த கல்யாணமே நடக்கக்கூடாது என்று அவள் நினைக்கிறாள், நீங்க அவளை கூப்பிட்டு பாத பூஜை செய்ய சொல்லுறீங்களா... என்னால முடியாது என ஞானம் சொல்கிறார். இதனால், கோபப்பட்ட விசாலாட்சி, கல்யாணம் நடக்க போகுது போவது என்னுடைய பேரனுக்கு, எனக்கு எல்லா சம்பிரதாயங்களும் சரியாக நடக்க வேண்டும். அவனுக்கு சித்தி, சித்தப்பா என இத்தனை பேர் இருந்தும், தர்ஷனுக்கு யாரும் இல்லாமல் அனாதை போல கல்யாணம் நடக்கக்கூடாது.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: நீ போய் அவளை கூப்பிட்ட, உன் கௌரவம் குறைந்து விடும், நான் போய் அவளை அழைத்து வருகிறேன் என சொல்லிவிட்டு வரும் விஷாலாட்சி ரேணுகாவிடம் பாத பூஜை செய்ய வரவேண்டும் என சொல்கிறார். இதைக்கேட்டு கடுப்பான ரேணுகா, நீங்க எல்லாம் மனுஷங்களா... இது ஒரு கல்யாணமா .. கல்யாணமே வேண்டாம் என்று சாகப் போறவனை புடிச்சு உட்கார வைத்து கல்யாணம் பண்ண பாக்குறீங்க இதுக்கு நான் பாத பூஜை வேற பண்ண வரணுமா என கேட்கிறாள். உடனே விசாலாட்சி கல்யாணம் கண்டிப்பாக நடக்கத்தான் போகுறது. நாளைக்கு ஈஸ்வரி குணமாகி வீட்டுக்கு வந்து,என்னுடைய மகனுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை ஏன் செய்யவில்லை என கேட்டால், நீ என்ன செய்வ.. யாருமே இல்லாம தர்ஷனுக்கு அனாதையாக திருமணம் நடக்க வேண்டுமா என சொல்ல ரேணுகா மனம் மாறி, பாத பூஜை செய்வதற்கு செல்கிறாள். இதையடுத்து பாத பூஜை நடக்கிறது.

ஜனனி மாஸ் என்ட்ரி: இன்றைய எபிசோடில், பார்கவி திருமணம் நேரம் நெருங்கிவிட்டதால், அக்கா தர்ஷனுக்கு கல்யாணம் நடந்து இருக்குமா.. என கவலையோடு கேட்கிறாள். இதைக்கேட்ட ஜனனி, கவலைப்படாத பார்கவி அப்படி எதுவும் நடந்து இருக்காது, அங்கே ரேணுகா, நந்தினி அக்கா இருக்காங்க நிச்சயம் அப்படி நடக்கவிட மாட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் அங்கே போய்விடுவோம் என்கிறார். இதையடுத்து, அன்புக்கரசியின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு தயாராக இருக்கும் நேரத்தில், மண்டபத்திற்கு ஜனனி நிறுத்துங்க என்று சொல்லிக்கொண்டே என்ட்ரி கொடுக்க, மண்டபத்திற்குள் பெரிய சண்டை நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X