குணசேகரன் முகத்தில் கறியை பூசிய ஜனனி.. யாரையும் வாழவிடமாட்டேன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: விறுவிறுப்பா சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், அறிவுக்கரசி, குணசேகரனை தனியாக ரூமுக்கு அழைத்து சென்று, அந்த கொலையை நான் தான் செய்தேன். அந்த வீடியோ கிராபர், நீங்க ஈஸ்வரி அக்காவை அடித்த வீடியோவை வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு மிரட்டினான். பணத்தை தரவில்லை என்றால் அந்த வீடியோவை இணையத்தில் விட்டு விடுவதாக கூறினான். இதனால், எனக்கு வேறு வழியே தெரியவில்லை பணத்தை தருகிறேன் என அழைத்து சென்று அவனை கொன்று விட்டேன்.
இததெல்லாம் செய்ததற்கு காரணம் உங்களுடைய குடும்ப மானம் வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் செய்தேன் என்று அறிவுகரசி சொல்லிவிட்டு, இடுப்பில் வைத்து இருந்த பென்டிரைவை எடுத்து குணசேகரனிடம் கொடுக்கிறாள். அந்தப் பென்ட்ரைவை வாங்கிய குணசேகரன், அதை ஜன்னல் வழியாக ஷங்கர் என்ற அடியாளிடம் கொடுத்து விடுகிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதன் பின் வெளியே வந்த குணசேகரன், இந்த கல்யாணம் நடக்காது இந்தப் பெண் யார் என்றே எனக்கு தெரியாது, நீங்க தாராளமாக இவளை கைது செய்யலாம் என சொல்ல அதிர்ந்து போனா அறிவுக்கரசி குணசேகரின் சட்டையை பிடித்து அடிக்கிறாள். இதனால் கொந்தளித்துப்போன குணசேகரன், அறிவுக்கரசியை பளார் பளார் என அடிக்கிறான். இதனால், அந்த இடமே களையபரமாகிறது. அப்போது, குணசேகரன் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்து வைக்கத்தான் நாங்கள் இந்த ஏற்பாடுகளை செய்தோம் என சொல்கிறான். அறிவுகரசி யார் என்று எங்களுக்கு தெரியாது, அவளை கைது செய்யுங்கள் என சொல்ல அறிவுகரசி கதறி அழுதபடி அனைவரின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள்.
மிரட்டிய ஜனனி: போலீஸ் அறிவுக்கரசியை கைது செய்யும் நேரத்தில், ஜனனி, சார் அதுக்குள்ள ஏன் போறீங்க, திருமணத்தை நடத்தி கொடுத்துவிட்டு போங்க என்று சொல்கிறாள் இதனால், ஆத்திரப்பட்ட குணசேகரன், இந்த மண்டபத்தில் ஒரு கொலை நடந்து இருக்கிறது. தீட்டாகிவிட்டது எப்படி திருமணத்தை நடத்துவது. இப்பொழுது கல்யாணம் பண்ணக்கூடாது என போலீசார் முன்னிலையில் சொல்ல, அப்போது ஜனனி தன்னிடம் இருக்கும் போனை காட்டி, குணசேகரனிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்துச் சென்று பேசுகிறாள். இப்பொழுது திருமணம் நடக்கவில்லை என்றால் இந்த ஃபோனில் இருக்கும் ஆதாரத்தை நான் கமிஷனரிடம் கொடுத்து விடுவேன் என்று முரட்டுகிறாள்.
தலைகுனிந்த குணசேகரன்: இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்த குணசேகரன் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணத்தை செய்து வைத்துவிட்டு, அந்த மண்டபத்தை விட்டு வெளியே வருகிறார். கோபத்தின் உச்சத்தில் இருந்த குணசேகரன் எதுவுமே பேசாமல் தன்னுடைய அறைக்கு சென்று விடுகிறார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ஞானம், எப்படி இருந்த அண்ணாவை இப்படி செய்துவிட்டார்களே, இனிமேல், எந்த துரோகியும் இந்த வீட்டுக்கு வரக்கூடாது, அப்படி யாராவது வந்தால், அனைவரையும் வெட்டி சாய்த்து விட்டு நான் ஜெயிலுக்கு போய் விடுவேன். இனிமேல், எனக்கு பொண்டாட்டி, மகள் என எதுவும் வேண்டாம், அண்ணானை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தவள் கூட இனி மேல் குடும்பம் நடத்த முடியாது என்று ஆக்ரோஷமாக கத்துகிறான்.


Click it and Unblock the Notifications











