பார்கவி வேண்டாம்.. அந்தர் பல்டி அடித்த தர்ஷன்.. கொலைவெறியில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில், ஜனனி, குணசேகரிடம் சவால்விட்டு தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் கல்யாணம் நடக்கப்போகிறது என்கிறாள். இதையடுத்து, பணிக்கர் சாமியார், ஜீவனந்தமும், பார்கவியும் உயிருக்கு போராடுவதை அனைவர் முன்னிலையிலும் சொல்கிறார். இதைக்கேட்டு குணசேகரன் டீம் சந்தோஷப்படுகின்றனர். இதைப்பார்த்த ஜனனி, பணிக்கர் சாமியாரை பார்த்து, உங்களுக்கு கடவுளுக்கு இணையாக சக்தி இருக்கிறது. ஆனால், அதை நல்லவழியில் பயன்படுத்தாமல், இப்படி கெட்டவழியில் பயன்படுத்துவது சரியா என கேட்கிறாள்.

அப்போது, பணிக்கர், அது எல்லாம் கர்மவினை, அது நடந்தே தீரும், இந்த ஜென்மத்தில் அவர்கள் செய்யும் பாவத்திற்கு அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் கண்டனை கிடைக்கும். அதேபோல, உங்கள் வாழ்க்கியில் நடப்பது கர்மவினை தான். அதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார். உடனே ஜனனி, மனித பிறவி எடுப்பதே கர்மவினையால் தான், ஆனால், நீங்கள் தெய்வத்திற்கு நிகராக இருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது, நீங்கள் தீமைக்கு துணை போனால், அந்த தெய்வம் உங்களை மன்னிக்குமா, காசு, பணத்திற்காக நீங்கள் செய்யும் பாவத்திற்கு, அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் பாவத்தை அனுபவீப்பீங்க, நாங்களாவது சாதாரண மனிதர்கள், ஆனால், கடவுளுக்கு தொண்டு செய்யும் நீங்கள் செய்யும் பாவத்தை கடவுள் என்னைக்கும் மன்னிக்கவே மாட்டார் என்று சொல்ல பணிக்கர் சாமியார் என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துப்போகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஒரு கட்டத்தில், இனிமேல் என்னால், பூஜை செய்ய முடியாது, இந்த பெண் கேட்பது எல்லாம் சரிதான். இதற்கு மேல் நான், பாவத்தை செய்ய விரும்பவில்லை என வெளியே கிளம்புகிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் கதிர், இலட்சக்கணக்கில் பணத்தை வாங்கிவிட்டு இப்படி ஓடிப் போனால் என்ன அர்த்தம் என பணிக்கர் சாமியாரை அடிக்கப்பாய்கிறார். அப்போது அங்கு இருந்தவர்கள் கதிரை சமாதானப்படுத்த பணிக்கர் சாமியார் வெளியே சென்று விடுகிறார். அதே ஆத்திரத்தோடு வரும் கதிர், ஜனனியை அடிக்க வர, அப்போது சக்திக்கும் கதிருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.

பல்டி அடித்த தர்ஷன்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், குணசேகரன், ஜனனி டீமை அழைத்து பேசுகிறார். அப்போது, இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும், இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிறான். அப்போது ஜனனி, இந்த திருமணம் ஈஸ்வரி அக்கா ஆசைப்பட்டபடி, தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் நடக்கும் என்று சொல்கிறாள். அப்பொழுது, தர்ஷனை தனியாக அழைத்துச் செல்லும் குணசேகரன். அவனிடம் சில விஷயங்களை பற்றி பேசுகிறார். பின் தர்ஷன், அனைவர் முன்பும், நான் பார்கவியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். தயவுசெய்து, என் வாழ்க்கையில் விளையாடாதீங்க, இங்கிருந்து எல்லாரும் வெளியே போங்க என சொல்கிறான். இதை கேட்டது ஜனனி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தோடு இருக்கிறாள்.

மறுபக்கம், புலிகேலியின் போலீஸ் டீம், ஜீவானந்தம் இருந்த வீட்டை நெருங்கி விட்டதால் பார்கவியும் ஜீவானந்தமும், பின்பக்க வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி காட்டுக்குள் தப்பி சென்றுவிடுகின்றனர். ஆனால், அதை தெரிந்து கொண்ட புலிகேலியின் போலீஸ் டீம், அவர்களை விடாது துரத்திக் கொண்டே செல்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X