நெஞ்சில் பட்ட குண்டு.. சரிந்து விழுந்த ஜீவானந்தம்.. கதறி அழுத பார்கவி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன், ஜனனி டீமை அழைத்து, அப்போது, இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும், இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிறான். அப்போது ஜனனி, இந்த திருமணம் ஈஸ்வரி அக்கா ஆசைப்பட்டபடி, தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் நடக்கும் என்று சொல்கிறாள். அப்பொழுது, தர்ஷனை தனியாக அழைத்துச் செல்லும் குணசேகரன். அவனிடம் சில விஷயங்களை பற்றி பேசுகிறார். இதையடுத்து, தர்ஷன், அனைவர் முன்பும், நான் பார்கவியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். தயவுசெய்து, என் வாழ்க்கையில் விளையாடாதீங்க, இங்கிருந்து அனைவரும் வெளியே போங்க என சொல்கிறான்.

தர்ஷன் இப்படி சொல்லியதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் ஜனனி டீம், மண்டபத்தின் வாசலிலேயே காத்து இருக்கின்றனர். வாசலில் நிற்பவர்களை வெளியே துரத்த வேண்டும் என பிளான் போடும் அறிவுக்கரசி, கதிரிடம், ஹாஸ்பிடலில் இருக்கும் வார்ட் பாயிடம் சொல்லி, ஈஸ்வரியை யாரோ சிலர் கொல்ல பார்க்கிறார்கள், சீக்கிரமாக வாங்க என்று சொல்ல சொல்லுங்க. அதைக் கேட்டு நிச்சயமாக சக்தி அங்கிருந்து கிளம்பி விடுவான். அதன் பிறகு இவர்களை ஈசியாக நாம் ஏமாற்றி நம்மளுடைய காரியத்தை சாதித்து விடலாம் என திட்டம் போடுகிறாள் அறிவுக்கரசி. அறிவுக்கரசி சொன்னது போல கதிர் மருத்துவமனையில் இருக்கும் வாட் பாய்க்கு போன் போட்டு சொல்ல, சக்தி பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறான். அறிவுக்கரசி நினைத்தது போலவே ஃபோன் வந்ததும் சக்தி விளம்பி விடுகிறான். இதையடுத்து, சக்தி காரை எடுத்துக்கொண்டு ஜீவானந்ததைத் பார்க்க செல்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் ஜீவானந்ததைத் துரத்தி செல்லும் புலிகேலி டீம், அவர்களை பார்த்துவிடுகின்றனர். இருவரையும் அவர்கள் விடாமல் துரத்துகின்றனர். ஒரு கட்டத்தில் கடுப்பான புலிகேசி துப்பாக்கியை எடுத்து அவர்களை சுடுகிறான். இதில், குண்டு ஜீவானத்தின் மீது பட்டுவிடுகிறது இருந்தாலும், பார்கவியை எப்படியாவது ஜனனியிடம் எப்படியாவது ஒப்படைத்துவிடவேண்டும் என படாதபாடுகிறார். ஒரு கட்டத்திற்கு மேல், என்னால் இதற்கு மேல் நடக்கமுடியாது, நீ போய்விடு பார்கவி என்று சொல்ல, என்று சொல்ல பார்கவி முடியாது சார் நான் போக மாட்டேன் என்று சொல்கிறாள். ஒரு கட்டத்திற்கு ஜீவானந்தம் மயங்கி சரிந்துவிட, எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என தலையில் அடித்துக்கொண்டு பார்கவி கதறி அழுகிறாள். மறுபக்கம் கதிருக்கு போன் செய்யும் ஜனனி மருத்துவமனையில் நிலைமையை விசாரித்து விட்டு, நான் ஜீவானந்தம், பார்கவியை பத்திரமாக அழைத்து வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு காரில் கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X