ஜீவானந்தம், பார்கவியை சுட்டுத்தள்ளிய போலீஸ்.. தர்ஷன் எடுத்த முடிவு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜீவானந்ததைத் துரத்தி செல்லும் புலிகேலி டீம், ஒரு இடத்தில் அவர்களை பார்த்துவிடுகின்றனர். இருவரையும் அவர்கள் விடாமல் துரத்துகின்றனர். ஒரு கட்டத்தில் கடுப்பான புலிகேசி துப்பாக்கியை எடுத்து அவர்களை சுடுகிறான். இதில், குண்டு ஜீவானத்தின் மீது பட்டுவிடுகிறது இருந்தாலும், பார்கவியை எப்படியாவது ஜனனியிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என படாதபாடுகிறார். ஒரு கட்டத்திற்கு மேல், என்னால் இதற்கு மேல் நடக்கமுடியாது, நீ போய்விடு பார்கவி என்று சொல்ல, பார்கவி முடியாது சார் நான் போக மாட்டேன் என்று சொல்கிறாள். ஒரு கட்டத்திற்கு ஜீவானந்தம் மயங்கி சரிந்துவிட, எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என தலையில் அடித்துக்கொண்டு பார்கவி கதறி அழுகிறாள்.
மறுபக்கம், ஜீவானந்தத்தை தேடி செல்லும் ஜனனி, சக்திக்கு போன் செய்து, மருத்துவமனையில் நிலைமையை விசாரிக்கிறாள். அப்போது, சக்தி,யாரோ வேண்டும் என்று பொய் சொல்லி இருக்கிறார்கள், மருத்துவமனையில் வேலை செய்யும் யாரும் போன் செய்யவில்லை. நம்மை பிரிக்க வேண்டும் என்பதற்காக யாரோ பார்த்த வேலை இது என்கிறான். இதைக்கேட்ட ஜனனி, எது எப்படியோ இந்த நேரத்தில் நீங்கள் மருத்துவமனையில் இருப்பது தான் சரி, மண்டபத்தில் நந்தினி,ரேணுகா அக்கா இருக்கிறார்கள், நான் ஜீவானந்தம், பார்கவியை பத்திரமாக அழைத்து வந்துவிடுகிறேன் என சொல்கிறாள். உடனே சக்தி, தனியா போகாதே ஜனனி, நானும் வருகிறேன். அவர்கள், பத்திரமாக வரவேண்டும் ஜனனி, ஆனால், இரண்டு நாளா சரியாக தூங்கவில்லை, நானும் வரேன் கொஞ்சம் வெயிட் பண்ணு என சக்தி சொல்கிறான். இல்லை சக்தி, நான் கிளம்பி விட்டேன். எதுவாக இருந்தாலும், நான் போன் பண்றேன் நீ பத்திரமாக இரு என்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: திருமண மண்டபத்தில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்கிறது. அப்போது குணசேகரன் அமைதியாக இருப்பதை பார்த்து விசாலாட்சி, நிலைமை சரியில்லாத இந்த நேரத்தில் எதுக்கு நாம காத்துகிட்டு இருக்கணும். இப்பவே கல்யாணத்தை முடித்து விடலாம் என சொல்கிறாள். இதைக் கேட்டு ஆத்திரப்படும் குணசேகரன் என்னம்மா நீயும் உன்னுடைய மகன் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா? யாருக்கும், இந்த குணசேகரன் பயப்பட மாட்டான் நான் குறிச்ச நேரத்துல தான் தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் நடக்கும் அதை யாராலயுமே தடுக்க முடியாது என சொல்கிறாள்.
கதறி அழுத பார்கவி: மறுபக்கம் குண்டு அடிபட்டதால் சரிந்து விழுந்த ஜீவானந்தம் திடீரென கண் விழித்து பார்கவி, இதற்கு மேல் என்னால் உன்னுடன் வர முடியாது என் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. நல்ல வேலையாக இதயத்தில் குண்டு படவில்லை, சதையின் மீதுதான் பட்டு இருக்கிறது. ஆதனால் நான் நிச்சயம் வந்து விடுவேன் என்னை விட்டுவிட்டு நீ செல் என சொல்கிறாள். ஆனால், பார்கவி நீங்கள் வராமல் நான் எங்கேயும் போக மாட்டேன் என பேசிக்கொண்டு இருக்கும்போதே, மீண்டும் ஜீவானந்தம் சுய நினைவை இழந்து மயங்கி விடுகிறார். இதனால் யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் பார்கவி தவித்துக் கொண்டு இருக்கிறாள். அப்போது அந்த இடத்திற்கு வரும் புலிகேசி டீம் இதற்கு மேல் அவர்களை தேட முடியாது, அடுத்ததாக ஃபாரஸ்ட் அதிகாரிகளின் இடம் வருகிறது. இனிமேல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என சொல்லிவிட்டு அனைவரும் கிளம்பி விடுகின்றனர்.
இரண்டு பேர் கதையும் முடிந்தது: இன்றைய எபிசோடில் புலிகேசி, அறிவுகரசிக்கு போன் செய்து பார்கவி, ஜீவானந்தம் இரண்டு பேரின் கதையும் முடிந்துவிட்டது என சொல்ல மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அறிவுகரசி, அதை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறாள். இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் குணசேகரன் பிரச்சனை முடிந்தது என இருக்கிறான். அதை தொடர்ந்து கரிகாலன் மற்றும் முல்லை இருவரும், வெளியில் இருக்கும் நந்தினி மற்றும் ரேணுகாவிடம், ஜீவானந்தம், பார்கவியை போலீஸ் டீம் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று சொல்ல இருவருமே பதற்றம் அடைகின்றனர். இதையடுத்து ஜனனிக்கு ஃபோன் செய்ய, ஜனனி ஃபோனை டீக்கடை ஒன்றில் மறந்துவைத்துவிட்டது தெரியவருகிறது. பின், நந்தினி, சக்திக்கு போன் செய்து ஜீவானந்தம், பார்கவி போலீஸ் டீம் சுட்டுவிட்டதாக சொல்கிறாள். இதைக்கேட்டு சக்தி கவலை அடைகிறான்.


Click it and Unblock the Notifications











