ஜீவானந்தம், பார்கவி உடலை தேடும் போலீஸ்.. தர்ஷனின் வாழ்க்கையே போச்சு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: புலிகேசி, அறிவுகரசிக்கு ஃபோன் செய்து பார்கவி, ஜீவானந்தம் இரண்டு பேரின் கதையும் முடிந்துவிட்டது என்று சொல்ல, அறிவுக்கரசி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறாள். புலிகேசி நீ சொன்னதை செய்துட்ட, நீ கேட்டது மேல நான் செய்கிறேன். சீக்கிரம் இங்கே வா என்று சொல்கிறாள். இதையடுத்து, இந்த சந்தோஷமான விஷயத்தை அறிவுகரசி, குணசேகரனிடம் சொல்கிறாள். மாமா சொன்னேன்ல ஜீவானந்தம் கதையை முடிச்சிட்டுத்தான் இந்த கல்யாணம் நடக்கும் என்று நான் சொன்னது போலவே, இந்த கல்யாணம் நடக்கப்போகிறது என்று சந்தோஷப்படுகிறாள்.
அதை தொடர்ந்து கரிகாலன் மற்றும் முல்லை இருவரும், வெளியில் இருக்கும் நந்தினி மற்றும் ரேணுகாவிடம், ஜீவானந்தம், பார்கவியை போலீஸ் டீம் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று சொல்ல இருவருமே பதற்றம் அடைகின்றனர். இதையடுத்து ஜனனிக்கு ஃபோன் செய்ய, ஜனனி ஃபோனை டீக்கடை ஒன்றில் மறந்துவைத்துவிட்டதாக சொல்கிறாள். பின், நந்தினி, சக்திக்கு போன் செய்து ஜீவானந்தம், பார்கவியை போலீஸ் டீம் சுட்டுவிட்டதாக சொல்கிறாள். இதைக்கேட்டு, சக்தி, அவர்கள் சொல்வது எல்லாம் உண்மையானு தெரியல, முதலில் செய்தியில் வருதா என்று பார்க்கலாம் அண்ணி நீங்க அமைதியாக இருங்க என்று சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மண்டபத்தில், ஜீவானந்தம் இறந்ததை கொண்டாடும் வகையில், கதிர், அன்புக்கரசி, அறிவுக்கரசி, முல்லை, கரிகாலன் என அனைவரும் டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்கின்றனர். இதை தூரத்திலிருந்து பார்க்கும் தர்ஷன் பார்கவியை நினைத்து கண் கலங்கி அழுது கொண்டு இருக்கிறான். இதை பார்த்த அன்புக்கரசி, நீங்களும் வந்து டான்ஸ் ஆடுங்க, அதுதான் அந்த பார்கவி செத்துட்டால, இதுக்கு மேல நான் மட்டும் தான், என்கூட தான் உங்களுக்கு கல்யாணம் நடக்கப் போகுது, நீங்களும் நானும் தான் சந்தோஷமா வாழ போகிறோம். அதனால எனக்கு என்ன எல்லாம் பிடிக்குதோ அதேபோல நீங்களும் எனக்காக சில விஷயங்களை மாத்திக்கிட்டு தான் ஆகணும் இப்ப எனக்கு டான்ஸ் ஆட வேண்டும் என்று தோணுது அதனால நீங்களும் என் கூட வந்து டான்ஸ் ஆடுங்க என்று சொல்கிறாள் அன்புக்கரசி.
மனவேதனையில் தர்ஷன்: இதைக் கேட்டு ஆத்திரப்படும் தர்ஷன், நான் எங்கேயும் வரல என்னால டான்ஸ் ஆட முடியாது என சொல்கிறான். அப்போது அன்புக்கரசி, இத்தனை நாள உங்களுடைய சித்திங்க பிரச்சனை பண்ணிக்கிட்டு இருந்தாங்க, இப்போ நீங்க பிரச்சனை பண்ணா ஆரம்பிச்சிட்டீங்களா... எல்லாரும் ஜாலியா டான்ஸ் ஆடுறாங்க நீங்களும் டான்ஸ் ஆடுனா தான் எனக்கு சந்தோஷமாக இருக்கும் என அவன் கைய பிடித்து தர தர என இழுத்து செல்கின்றாள் அன்புக்கரசி. ஆனால் ஆட முடியாது என கையை உதறிவிடுகிறான் தர்ஷன்.
உடலை தேடும் போலீஸ்: இதைக்கடுத்து இன்றைய எபிசோடில் புலிகேசி செய்தியாளர்களிடம் ஜீவானந்தம் மற்றும் பார்கவி இருவரையும் சுட்டுக்கொன்று விட்டோம். அவர்களது உடல் கிடைக்கவில்லை. அவரின் உடலை தேடிக் கொண்டு இருக்கிறோம். ஜீவானந்தம் என்பவர் ஏற்கனவே பலவிதமான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதால் அவரை சுட்டுப் பிடிக்க எங்களுக்கு உத்தரவு வந்தது. அது தொடர்ந்து நாங்கள் அந்த பகுதியில் தேடி சென்ற போது, இரண்டு பேரையும் சுட்டுக்கொன்றுவிட்டோம். விரைவில் அவர்களின் உடல் கட்டுப்பிடிக்கப்பட்டு உங்களிடம் காட்டுகிறோம் என்கிறார். இதைசெய்தியில் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, அய்யோ, இப்படி ஆகிவிட்டதே, தர்ஷன் வாழ்க்கையே போச்சு என கதறி அழுகிறாள். மறுபக்கம், தர்ஷினி, அய்யோ ஜீவா அப்பா என கதறி அழுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











