ஜனனிக்கு முடிவு கட்டிய குணசேகரன்.. தர்ஷன் திருமணத்தில் நடக்கப்போவது என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: புலிகேசி செய்தியாளர்களிடம் ஜீவானந்தம் மற்றும் பார்கவி இருவரையும் சுட்டுக்கொன்று விட்டோம். அவர்களது உடல் கிடைக்கவில்லை. அவரின் உடலை தேடிக் கொண்டு இருக்கிறோம். ஜீவானந்தம் என்பவர் ஏற்கனவே பலவிதமான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதால் அவரை சுட்டுப் பிடிக்க எங்களுக்கு உத்தரவு வந்தது. அதைத் தொடர்ந்து நாங்கள் அந்த பகுதியில் தேடி சென்ற போது, இரண்டு பேரையும் சுட்டுக்கொன்றுவிட்டோம். விரைவில் அவர்களின் உடல் கண்டுப்பிடித்து உங்களிடம் காட்டுகிறோம் என்கிறார். இதை செய்தியில் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, அய்யோ, இப்படி ஆகிவிட்டதே, தர்ஷன் வாழ்க்கையே போச்சு என கதறி அழுகிறாள். மறுபக்கம், தர்ஷினி, அய்யோ ஜீவா அப்பா என கதறி அழுகிறாள்.
தர்ஷன் பார்கவியை நினைத்து கண் கலங்கி அழுது கொண்டு இருக்கிறான். இதைப் பார்த்த அன்புக்கரசி, நீங்களும் வந்து டான்ஸ் ஆடுங்க, அதுதான் அந்த பார்கவி செத்துட்டால, உங்களுக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கப் போகுது, நீங்களும் நானும் தான் சந்தோஷமா வாழ போகிறோம். அதனால எனக்கு என்ன எல்லாம் பிடிக்குதோ அதேபோல நீங்களும் எனக்காக சில விஷயங்களை மாத்திக்கிட்டு தான் ஆகணும் இப்ப எனக்கு டான்ஸ் ஆட வேண்டும் என்று தோணுது அதனால நீங்களும் என் கூட வந்து டான்ஸ் ஆடுங்க என்று சொல்கிறாள் அன்புக்கரசி, ஆனால், தர்ஷன்,வேண்டாம் என்று சொல்லும் போது தடுமாறி விழுந்துவிடுகிறான். உடனே, அன்புக்கரசி, என்ன ஆச்சு ஜூஸ் கொண்டுவரவா என்று கேட்க, தர்ஷன் அந்த ஜூசை கொடுத்துத்தானே என்னை இந்த அளவிற்கு ஆக்கி வெச்சி இருக்கீங்க, உங்க இஷ்டத்திற்கு நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு சொல்கிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் காரில் சென்று கொண்டிருக்கும் ஜனனிக்கு போனை கடைசில் மறந்துவைத்துவிட்டு வந்தது தெரிகிறது. இதையடுத்து, ஒரு கடைக்கு ஜனனி செல்ல, அப்போது டிவியில் ஜீவானந்தமும் பார்கவிவை சுட்டுக்கொன்று விட்டோம் என புலிகேசி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். உடனே அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் இருந்து போனை வாங்கி, நந்தினிக்கு போன் செய்து பேசுகிறாள். அப்போது நந்தினி, புலிகேசி ஜீவானந்தத்தையும் பார்கவிவையும் சுட்டுக்கொன்ற விட்டதாக டிவியில் சொல்கிறார்கள். அதைக் கேட்டு எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என புலம்பி அழுகிறாள். அப்போது ஜனனி, நம்மை திசை திரும்புவதற்காக புலிகேசி டீம் செய்யும் வேலை என, உன் மனதில் தோன்றுகிறது அக்கா. நிச்சயமா இரண்டு பேருக்கும் ஒன்னும் ஆகி இருக்காது. நான் கல்யாண மண்டபத்திற்கு பார்கவி கூடத்தான் வருவேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
ஜனனி உயிருக்கு ஆபத்து: இன்றைய எபிசோடில் ஜனனி, ஜீவானந்தம், பார்கவியை தேடி காரில் சென்று கொண்டு கொண்டு இருக்கிறாள். மறுபக்கம் குணசேகரன், தனது அடியாட்களுக்கு ஃபோன் செய்து அறிவுக்கரசி, ஜீவானந்தமும் பார்கவியை போலீசார் சுட்டுக்கொன்றுவிட்டதாக சொல்ககிறாள். ஆனால், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவர்களை தேடி ஜனனி சென்று கொண்டிருக்கிறாள். அவள் கதையை முடித்து விடுங்கள் என குணசேகரன், ஜனனியின் போட்டோவை அனுப்பி விடுகிறார். அந்த போட்டோவை வைத்துக்கொண்டு அடியாட்கள் ஜனனியை தேடி செல்கின்றனர்.


Click it and Unblock the Notifications











