ஜீவானந்தம் எங்கே.. காட்டில் தவிக்கும் பார்கவி.. ஜனனியை துரத்திய போலீஸ்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜனனி, ஜீவானந்தம், பார்கவியை தேடி காரில் சென்று கொண்டு இருக்க, குணசேகரன், தனது அடியாட்களுக்கு ஃபோன் செய்து ஜீவானந்தத்தை போலீசார் சுட்டுக்கொன்றுவிட்டதாக அறிவுக்கரசி சொல்கிறாள். ஆனால், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவர்களை தேடி ஜனனி சென்று கொண்டிருக்கிறாள். அவளின் போட்டோவை அனுப்பிவைத்து இருக்கிறேன் என்கிறார்.
இதைக்கேட்ட ரௌடி, அண்ணா நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க, உங்க மகன் தாலிகட்டுவதற்குள் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்று சொல்கிறான். பின் ரௌடிகள், ஜனனி ஃபோன் கேட்ட, அதே இளநீர் கடைக்காரரிடம், ஜனனியின் போட்டோவை காட்டி, இந்த பெண்ணை பாத்தீங்களா என்று கேட்க, அந்த கடைக்காரர், ஆமாம், இப்போ தான் அந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்தேன். இந்த பக்கமாகத்தான் போனங்க என்று சொல்லி வேறு வழியை காட்டுகிறான். இதையடுத்து, அந்த ரௌடிகள் அந்த வழியாக சென்றுவிட, ஜனனி வேறு வழியாக ஜீவானந்தைத் தேடி செல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், திருமண மண்டபத்திற்கு வரும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட், வெளியில் இருக்கும் நந்தினியை பார்த்து, அக்கா எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்ட நந்தினி, யார் என்று தெரியாமல் புலம்புகிறாள். அப்போது, அந்த பெண், அக்கா உங்களுடைய மசாலா என் அம்மாவிற்கு ரொம்பபிடிக்கும் என்று சொல்லி தோழியாக பேசுகிறாள். அப்போது, நந்தினி தர்ஷனுக்கு நடக்கும் பிடிக்காத திருமணம் குறித்தும், தர்ஷனை சந்தித்து ஒருமுறை பேச வேண்டும் என சொல்ல, அந்த பெண் தான் அணிந்து வந்திருந்த பர்தாவை கழட்டி நந்தினிக்கு போட்டு அவரை மேக்கப் ஆர்டிஸ்ட் என்று சொல்லி, உள்ளே அழைத்துச் செல்கிறாள். ஆனால் பர்தாவில் வந்திருக்கும் நந்தினியை பார்த்து, கதிருக்கு சந்தேகம் வர அவளை குறுகுறுவென பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
காணாமல் போன ஜீவானந்தம்: இதையடுத்து இன்றைய எபிசோடில் ஜனனி பல தடைகளை தாண்டி ஜீவானந்தம் வருவதாக சொன்ன இடத்திற்கு சென்று விடுகிறாள். ஆனால், அந்த இடத்தை போலீஸ் சுற்றி வளைத்து இருப்பதால், பார்கவியும் ஜீவானந்தம் மறைவாக ஒரு இடத்தில் அமர்ந்து இருக்கின்றனர். பல இடத்தில் ஜனனி அவர்களை தேடி அலைந்து கொண்டிருக்க, அங்கு வரும் வன அதிகாரி ஜனனிடம் இங்கே என்ன உங்களுக்கு வேலை என கேட்க சும்மா சுத்தி பார்க்க வந்தே சார் என்ன சொல்கிறாள். உடனே, அவர் இங்கு நிற்கக்கூடாது கிளம்புகள் என சொல்ல ஜனனி வேறு வழியே இல்லாமல் காரை எடுத்துக்கொண்டு செல்கிறாள். இவை அனைத்தையும் மறந்து இருந்து பார்கவி பார்த்துக்கொண்டு இருக்கிறாள். பின் திரும்பி ஜீவானந்தை தேட, அவர் இடத்தில் இல்லாததால், பதறிப்போன பார்கவி அவரை தேடி அலைகிறாள். மறுபக்கம் மண்டபத்தில், பர்தா போட்டு இருக்கும் நந்தினி, தர்ஷனை தனியாக சந்தித்து அவனிடம் அனைத்து விஷயத்தையும் சொல்கிறாள்.இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











