உயிருக்கு போராடும் ஜீவானந்தம்.. விடாது துரத்தும் ரௌடிகள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில் ஜனனி பல தடைகளை தாண்டி ஜீவானந்தம் வருவதாக சொன்ன இடத்திற்கு சென்று விடுகிறாள். ஆனால், அந்த இடத்தை போலீஸ் சுற்றி வளைத்து இருப்பதால், பார்கவியும் ஜீவானந்தம் மறைவாக ஒரு இடத்தில் அமர்ந்து இருக்கின்றனர். பல இடத்தில் ஜனனி அவர்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். அங்கு வரும் வன அதிகாரி ஜனனிடம் இங்கே என்ன உங்களுக்கு வேலை என கேட்க சும்மா சுத்தி பார்க்க வந்தே சார் என்ன சொல்கிறாள். உடனே, அவர் இங்கு நிற்கக்கூடாது கிளம்புகள் என சொல்ல ஜனனி வேறு வழியே இல்லாமல் காரை எடுத்துக்கொண்டு செல்கிறாள்.

இவை அனைத்தையும் மறைந்து இருந்து பார்த்த பார்கவி, போலீஸ் போனதும் ஜனனியின் காரை துரத்திக்கொண்டு ஓடுகிறார். ஆனால், ஜனனி சென்றுவிட என்ன செய்வது என்று தெரியாமல், ஜீவானந்தம் மறைந்து இருந்த இடத்திற்கு வந்து பார்க்க அவர் அங்கு இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அனைத்து இடத்திலும் தேடுகிறாள். அவரை தேடிக்கொண்ட பார்கவி ஒரு இடத்திற்கு செல்ல அங்கே இருக்கும் ஒருவர், நீங்கள் தேடிவந்தவர் இங்கே தான் இருக்கிறார் என்று சொல்கிறார். உடனே, பார்கவி உள்ளே சென்று பார்க்க, அங்கு ஜீவானந்தம் வலியால் துடித்துக்கொண்டு இருக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இவர் காட்டுப்பகுதியில் மயங்கி இருந்தார், என் ஆட்கள் தான் இவரை இங்கு அழைத்து வந்தார்கள். இவருக்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் இவருடைய உயிர் போய்விடும் என்கிறார். நான் ராணுவத்தில் மருத்துவராக வேலை பார்த்தேன். என்னுடைய கை பாதித்துவிட்டதால் வேலையில் இருந்து வந்துவிட்டேன். நான் உனக்கு எப்படி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்கிறேன். அதன்படி நீ அறுவை சிகிச்சை செய்து குண்டை எடுத்தால் இவர் உயிர் பிழைப்பார் என்கிறார். இதைக் கேட்டு பார்கவி அதிர்ச்சி அடைகிறாள். மறுபக்கம் மண்டபத்தில், பர்தா போட்டு இருக்கும் நந்தினி, தர்ஷனை தனியாக சந்தித்து அவனிடம் அனைத்து விஷயத்தையும் சொல்கிறாள்.

விடாது துரத்தும் ரௌடிகள்: இதையடுத்து, இன்றைய எபிசோடில் ஜனனி, பல இடங்களில் ஜீவானந்தம் நந்தினியை தேடி அலைகிறார். அப்போது ஒரு கடையில் போனுக்கு சார்ஜ் போட்டு அமர்ந்திருக்க ஜனனியை தேடிக்கொண்டு ரௌடிகள் அந்த கடைக்கு வந்து விடுகின்றனர். அந்த கடைக்காரனிடம் ரவுடிகள் ஜனனியின் போட்டோவை காட்டி, இந்தப் பெண் வந்தாளா என்று கேட்கின்றனர். நிலைமையை புரிந்து கொண்ட அந்த கடைக்காரர். அப்படி யாரும் இங்கே வரவில்லை என சொல்லி ஜனனியை காப்பாற்றுகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X