உன் பொண்டாட்டி கதை முடிந்தது.. குணசேகரன் போட்ட பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில் ஜனனி, பல இடங்களில் ஜீவானந்தம் நந்தினியை தேடி அலைகிறார். அப்போது ஒரு கடையில் போனுக்கு சார்ஜ் போட்டு அமர்ந்திருக்க ஜனனியை தேடிக்கொண்டு ரௌடிகள் அந்த கடைக்கு வந்து விடுகின்றனர். அந்த கடைக்காரனிடம் ரவுடிகள் ஜனனியின் போட்டோவை காட்டி, இந்தப் பெண் வந்தாளா என்று கேட்கின்றனர். நிலைமையை புரிந்து கொண்ட அந்த கடைக்காரர். அப்படி யாரும் இங்கே வரவில்லை என சொல்லி ஜனனியை காப்பாற்றுகிறான்.
மறுபக்கம் ஜீவானந்தத்திற்கு, ஆர்மி அதிகாரி சொன்னது போல பார்கவி அறுவை சிகிச்சை செய்து, குண்டை எடுத்து விடுகிறாள். அந்த பயத்தில் பார்கவி மயங்கி விழுந்து விடுகிறாள. பின் சில மணி நேரம் கழித்து பார்கவி கண் திறந்து பார்க்க. அப்போது, ஜீவானந்தம் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு ஒன்னும் ஆகவில்லையே சார் என்று கேட்க, அப்போது, ஜீவானந்தம், என் உயிரை நீ காப்பாற்றி விட்ட பார்கவி என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து, பார்கவி ஜனனிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அந்த இடத்திலிருந்து லொகேஷன் அனுப்பி வைக்க, அந்த இடத்திற்கு காரில் புறப்படுகிறாள் ஜனனி.

எதிர்நீச்சல் தொடர்கிறது: திருமண மண்டபத்தில், பார்கவி உயிரோடு இருக்கும் விஷயத்தையே தெரிந்து கொண்ட குணசேகரன். முதலில் உன்னுடைய மனைவி ஜனனியை காப்பாத்து. அவள் கதையை முடிப்பதற்காக நான் ஆட்களை அனுப்பிவிட்டேன் என சொல்ல இதைக் கேட்டு சக்தி, அதிர்ச்சி அடைகிறான். மேலும் பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணத்தை உன்னுடைய பொண்டாட்டி செய்து விட்டால், அதன்பிறகு நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என குணசேகரன் சக்தியிடம் சவால் விடுகிறார்.
ஜனனிக்கு என்னாகும்: மறுபக்கம் ரவுடிகள் ஜனனியை பார்த்துவிட்டு காரில் அவளை துரத்திக் கொண்டே வருகின்றனர். அப்போது, பார்கவியிடம் இருந்து போன் வருகிறது. அவள் ஜீவானந்தத்தை புலிகேசி டீம் துப்பாக்கியால் சுட்ட விஷயத்தை சொல்கிறாள். இதை கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைகிறாள். நான் எப்படியாவது அந்த இடத்திற்கு வந்து விடுவேன் தயவு செய்து நீங்கள் அந்த இடத்தில் இருந்து வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்கிறாள் ஜனனி. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications