ஜீவானந்தத்தை சுட்டுபிடிக்க உத்தரவு.. ஜீப்பில் துரத்தி செல்லும் போலீஸ்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் மருத்துவமனைக்கு ஜனனி, சக்தி இருவரும் வந்து ஈஸ்வரியின் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் விசாரிக்கின்றனர். அப்போது அங்கு வரும், கொற்றவை, ஜீவானந்தத்தையும் பார்கவிவையும் சுட்டு பிடிக்க உத்தரவு போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அந்த இன்ஸ்பெக்டர் ஒரு சைக்கோ. போல நடந்து கொள்ளக் கூடியவன். அவனை வேண்டுமென்றே இந்த கேஸை இழுத்து விட்டு இருக்கிறார்கள். இதனால் ஜீவானந்தம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சொல்கிறாள்.

இதையடுத்து ஜனனி, ஜீவானந்தத்திற்கு ஃபோன் செய்து உங்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய போட்டோ பார்கவியின் போட்டோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விட்டார்கள். இதனால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று எனக்கு கூட சொல்லவேண்டாம், பார்கவியை திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தால் மட்டும் போதும் என சொல்கிறாள். உடனே, ஜீவானந்தம் நான் என்னை பார்த்துக்கொள்கிறேன் ஈஸ்வரியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் கதிர், அறிவுக்கரசி, முல்லை என அனைவருமே பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது கதிர், ஈஸ்வரியின் கதையை முடிக்க, மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு வார்ட் பாயிடம் பேசுகிறார். அந்த வார்ட் பாய், எனக்கு இப்போ பணம் தேவை என சொல்ல, நீ முதலில் வேலையை முடி சரியான நேரத்தில் பணம் வரும் என்கிறான். இப்படி கதிர் போனில் பேசிக்கொண்டு இருப்பதை அறிவுக்தரிசி முல்லையை வைத்து தனது போனில் ரெக்கார்ட் செய்து விடுகிறாள்.
அதே நேரம், மருத்துவமனையில் ஈஸ்வரியை கொல்வதற்காக ஏற்பாடு செய்த நபர் ஈஸ்வரியின் அறைக்கு செல்லும் போது. கொற்றவை மற்றும் டாக்டர் என அனைவரும் அங்கு வந்து விட வார்ட் பாய் பதறிப்போய் மாற்றி மாற்றி பேசுகிறான். வார்ட் பாய் மீது சந்தேகப்படும் மருத்துவர், இவன் மீது சந்தேகமாக இருக்கிறது என்று கொற்றவையிடம் சொல்கிறார். இதையடுத்து கொற்றவை அங்கு இருக்கும் கான்ஸ்டபிளை அழைத்து, ஈஸ்வரியின் உயிருக்கு ஆபத்து, இதனால், மருத்துவமனை உடையில் யார் மருத்துவமனைக்கு வந்தாலும், நன்றாக விசாரித்துவிட்டு உள்ளே அனுப்புங்கள் என்கிறார்.

ஜீவானந்தத்தை துரத்தும் போலீஸ் : இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், டீ கடையில் ஜீவானந்தம் டீ குடித்துக் கொண்டு இருக்க, அப்போது ஜீவானந்தத்தை தேடி அலையும் போலீஸ் டீம் அந்த இடத்திற்கு வருகிறது. இவர்களை பார்த்து உஷாராகி மறைந்து கொண்ட ஜீவானந்தம், அங்கிருந்து செல்லும் போது, டீக்கடையில் வேலை செய்யும் சிறுவன். சார் பிஸ்கெட் கேட்டீங்களே என கத்திக்கொண்டு பின்னாடியே செல்ல, அது போலீஸ் டீமின் காதில் விழுந்து விட, போலீஸ் டீம் ஜீவானந்தத்தை பின் தொடர்ந்து துரத்தி செல்கின்றனர். மறைந்து ஓடிச்சென்ற ஜீவானந்தம், பார்கவியிடம் போலீசுக்கு நாம் இருக்கும் இடம் தெரிந்து விட்டது. உடனே இங்கு இருந்து கிளம்ப வேண்டும் என்கிறார். இதையடுத்து, பார்கவியை அழைத்துக்கொண்டு ஒரு ஜீப்பில், தப்பிச்செல்கின்றனர். அவரை பின் துரத்திக்கொண்டு போலீஸ் ஜீப்பில் செல்கிறது. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X