மாப்பிள்ளை அழைப்பு.. சாக முடிவு எடுத்த தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ரவுடிகள் ஜனனியை பார்த்துவிட்டு காரில் அவளை துரத்திக் கொண்டே வருகின்றனர். அப்போது, பார்கவியிடம் இருந்து போன் வருகிறது. அவள் ஜீவானந்தத்தை புலிகேசி டீம் துப்பாக்கியால் சுட்ட விஷயத்தை சொல்கிறாள். இதை கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைகிறாள். நான் எப்படியாவது அந்த இடத்திற்கு வந்து விடுவேன், ரௌடிகள் என்ன பின் தொடர்ந்து கொண்டே வருவதால், அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு எப்படியாவது நான் அந்த இடத்திற்கு வந்து விடுகிறேன். அதுவரைக்கும் நீங்கள் அந்த இடத்திலேயே இருங்கள், வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்கிறாள் ஜனனி.

மண்டபத்தில் சக்தி இருப்பதை பார்த்து கோபப்படும் குணசேகரன், நீ எதற்காக மண்டபத்திற்குள் வந்த வெளியே போ என சொல்கிறார். மேலும், உன்னுடைய பொண்டாட்டி ஜனனி எங்க, அவ என் காரை எடுத்துக்கிட்டு அந்த பார்கவியையும் ஜீவானந்தத்தையும் தேடி போய் இருக்கா, எல்லா விஷயத்தையும் டிரைவர் என்கிட்ட சொல்லிட்டான். ஏன் காரை எடுத்துக்கிட்டு போனா, தப்பிச்சிடலாம்னு பாக்குறளா அவ, பார்த்து கவனமா அவள இருக்க சொல்லு, பார்கவியை சுடுவதற்காக போலீஸ் தெரிஞ்சுக்கிட்டு இருக்காங்க, அவங்க அடையாளம் தெரியாம இவள சுட்டுத்தள்ளிட போறாங்க ஏன்னா சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் சக்தி, தர்ஷன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என எனக்கு பயமாக இருக்கு. நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என சொல்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது குணசேகரனுக்கும் சக்திக்கும் இடையே வாக்குவாதம் நடக்க, விசாலாட்சி குறுக்கிட்டு, சக்தி இங்கேயே இருக்கட்டும், தர்ஷனுக்கு கல்யாணம் நடக்கும்போது அவன் இருந்துவிட்டு போகட்டும் என்று சொல்கிறாள். இதையடுத்து மாப்பிள்ளை அழைப்புக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. வெளியில் சென்றால் பிரச்சனை என மண்டபத்துக்குள் இருக்கும் கோவிலில் தர்ஷன் சாமி கும்பிடுகிறார். கடவுளே நான் நினைச்ச மாதிரி பார்கவிக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கவேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது பார்கவி கூடத்தான், அதேபோல தப்பு செய்த என்னுடைய அப்பாவிற்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும் மனம் உருகி கடவுளிடம் வேண்டுகிறான் தர்ஷன்.

தர்ஷன் எடுத்த முடிவு: மறுபக்கம், ஜனனி ரௌடிகளை வேறுபக்கம் திசை திருப்பிவிட்டு, ஜீவானந்தம் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுகிறாள். குண்டு அடிபட்டு இருக்கும் அவரை பார்த்து கதறிஅழுகிறாள். எங்க குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்க இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறீங்க சார் என்று சொல்கிறார். உடனே அது எல்லாம் ஒன்றும் இல்லை ஜனனி இப்போது நான் நன்றாக தான் இருக்கிறேன். முதலில் பார்கவியை இங்கிருந்து அழைத்துச் சென்று திருமணம் செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பார் என சொல்கிறார். இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்ததை, ரவுடி பார்த்து , அதை போட்டோ எடுத்து குணசேகரனுக்கு அனுப்புகிறான். உடனே குணசேகரன், அங்கு இருந்து ஒருத்தரும் உயிரோட திரும்பி வரக்கூடாது, அனைவரையும் அதே இடத்தில் வைத்து தீர்த்து கட்ட சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X