ஜனனி vs குணசேகரன் இறுதியுத்தம்.. ஜெயித்தது யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜனனி ரௌடிகளை வேறுபக்கம் திசை திருப்பிவிட்டு, ஜீவானந்தம் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுகிறாள். குண்டு அடிபட்டு இருக்கும் அவரை பார்த்து கதறி அழுகிறாள். எங்க குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்க இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறீங்க சார். இப்படி ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை என வருத்தப்படுகிறாள். உடனே அது எல்லாம் ஒன்றும் இல்லை ஜனனி இப்போது நான் நன்றாக தான் இருக்கிறேன். இவர் ஆர்மி டாக்டர், இவர் தான் என்னை காப்பாற்றி இங்கு அழைத்து வந்தார். இவருக்கு கை முடியாததால், இவர் சொல்ல சொல்ல பார்கவி தான் ஆப்ரேஷன் செய்தார் என்று சொல்கிறார்.
பின் முதலில் பார்கவியை இங்கிருந்து அழைத்துச் சென்று திருமணம் செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பாருங்க என சொல்கிறார். இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்ததை, ரவுடி பார்த்து , அதை போட்டோ எடுத்து குணசேகரனுக்கு அனுப்புகிறான். உடனே குணசேகரன், அந்த இடம் எங்கு இருக்கிறது என்ற தகவலை அனுப்பிவிட்டு, அங்கு இருந்து அனைவரும் கிளம்புங்க என்று சொல்கிறார். இதையடுத்து, குணசேகரன், வீரா என்ற வேறு ஒரு ரௌடிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி கூடுதலாக ரௌடிகளை அனுப்பி, அங்கு இருந்து ஒருத்தரும் உயிரோட திரும்பி வரக்கூடாது, அனைவரையும் அதே இடத்தில் வைத்து தீர்த்து கட்ட சொல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: திருமண மண்டபத்தில் மாறுவேடத்தில் இருக்கும் நந்தினி, தர்ஷனிடம் அனைத்து விஷயத்தையும் சொல்லிவிட்டு, ரேணுகாவிற்கு போன் செய்கிறாள். அக்கா நந்தினி, ஜனனியிடம் இருந்து போன் வந்ததா என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, ஜனனியிடம் இருந்து போன் வருகிறது. பின் மூன்று பேரும் கான்பிரன்சில் பேசுகின்றனர். அப்போது, ஜனனி அக்கா நான் சொன்னது போலவே, பார்கவிக்கும் ஜீவானந்தம் சாருக்கும் எதுவும் ஆகவில்லை. அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்கிறாள். இதைக் கேட்டு இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இந்த விஷயத்தை நந்தினி சக்தியில் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். இதை தூரத்தில் இருந்து பார்க்கும் கதிர், இவர்கள் ஏதோ திட்டம் போடுகிறார்கள், அதை நான் கண்டுபிடிக்கிறேன் என்றார்.
இன்றைய எபிசோடில், குணசேகரன் அனுப்பிய ஆட்கள், ஜீவானந்தம், பார்கவி இருக்கும் இடத்திற்கு உருட்டு கட்டையுடன் வருகின்றனர். இதைப்பார்த்து விட்ட ஜனனி அனைவரையும் உள்ளே அனுப்பிவிட்டு, இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என உருட்டுக்கட்டையுடன் வெளியே வருகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











