இன்னைக்கு ராத்திரி தாண்டமாட்டா ஜனனி.. கொலை வெறியில் குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன் அனுப்பிய அடி ஆட்கள், ஜீவானந்தம், பார்கவி இருக்கும் இடத்திற்கு உருட்டு கட்டையுடன் காத்திருக்கின்றனர். இதைப்பார்த்து விட்ட ஜனனி, ரௌடிகள் அசந்த நேரமாக பார்த்து நாம் வெளியில் சென்று விடலாம் என்ற திட்டத்தோடு இருக்கிறாள். ஆனால், ரவுடிகளோ, காலையில் எழுந்து ஈசியாக தப்பித்து சென்றுவிடலாம் என நினைக்கிறார்கள். நாம சரியாக ஒரு மணிக்கு உள்ளே இறங்கி அனைவரையும் போட்டு தள்ளி விட வேண்டும் என வாசலிலேயே காத்திருக்கின்றனர்.

அதே நேரம் மண்டபத்தில் தர்ஷனுக்கும், அன்புக்கரசிக்கும் நலங்கு வைக்கப்படுகிறது. அனைவரும் ஒருவர் ஒருவராக நலங்கு வைத்துக் கொண்டு இருக்க கதிருக்கு, பர்தா அணிந்த முஸ்லிம் பொண் வேஷடத்தில் இருக்கும் நந்தினியின் முகத்தை பார்க்க வேண்டும் என, அந்த பெண் பின்னே சுற்றிக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், முல்லை, அது நந்தினி என தெரியாமல், அவனும் நந்தினி பின்னால் சுற்றுகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகி உள்ளது, அந்த ப்ரோமோவில், குணசேகரன் தன்னுடைய தம்பி, ஞானம், கதிரை தனியாக அழைத்து, ஜீவானந்தமும் பார்கவியும் சாகவில்லை அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். அவர்களை ஜனனி எப்படியோ தேடி கண்டுபிடித்துவிட்டால், அவள் சவால் விட்டபடி, பார்கவியை இங்கே அழைத்து வந்தது, தர்ஷனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளில் அவள் ஈடுபட்டு இருக்கிறாள். ஆனால், அதற்கு முன்பே அவர்களின் கதையை முடிக்க ஆளை அனுப்பிவிட்டேன். அவர்கள் அனைவரின் கதையும் இன்று இரவு குள்ளே முடித்துவிட வேண்டும். இந்த விஷயம் வேறு யாருக்குமே தெரியக்கூடாது. குறிப்பாக அன்புக்கரசிக்கு தெரியக்கூடாது. அவ புலிகேசியை வைத்து ஜீவானந்தத்தின் கதையை முடித்து விட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு தெரிந்தால் அவ வேறு ஒரு திட்டம் போது என சொல்கிறாள். இதைக் கேட்டு ஞானம், கதிர் அதிர்ச்சி அடைகின்றனர்.

நடக்கப்போவது என்ன: மறுபக்கம் குடோனில் இருக்கும் ஜீவானந்தம், பார்கவி, ஜனனி என்ன செய்வது, வெளியில் எப்படி செல்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது ஜனனி, சார் ரௌடிகள் உள்ளேயும், வர வெளியேவும் போகவில்லை என்கிறார். உடனே ஜீவானந்தம், அவர்கள் ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள், இதற்கு மேல் நாம் தான் உஷாரா இருக்க வேண்டும், இங்கு என்ன நடந்தாலும், பார்கவி சரியான நேரத்திற்கு மண்டபத்திற்கு சென்றுவிட வேண்டும் என்றார். மேலும், ஜனனி, நீங்க நந்தினிக்கு போன் போட்டு, எந்த நேரமாக இருந்தாலும், நாங்கள் போன் செய்தவுடன் தர்ஷனை வெளியில் அழைத்து வர வேண்டும், அதற்காக ஒரு திட்டத்தோடு தயாராக இருக்க சொல்லுங்கள் என்கிறார். உடனே ஜனனி, நந்தினிக்கு ஃபோன் செய்து, அக்கா இங்கே நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு, ஜீவானந்ம் சாரும், பார்கவியும் உயிரோடு இருக்கும் விஷயம், குணசேகருக்கு தெரிந்துவிட்டது என்று நினைக்கிறேன். இங்கே நாங்கள் வெளியே வரமுடியாத படி, ஆடியாட்களை அனுப்பி இருக்கிறார். ஒரு வேலை நாங்கள் சரியான நேரத்திற்கு மண்டபத்திற்கு வரமுடியவில்லை என்றால், நீங்க தர்ஷனை வெளியில் அழைத்து வரவேண்டும் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X