வீடியோவால் பீதியில் அறிவுக்கரசி.. ஜனனியை கொல்ல காத்திருக்கும் அடியாட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், குணசேகரன் தன்னுடைய தம்பி, ஞானம், கதிரை தனியாக அழைத்து, ஜீவானந்தமும் பார்கவியும் உயிரோடு தான் இருக்கிறார்கள். அவர்களும் ஜனனியும் இருக்கிறாள். அவள் சவால் விட்டபடி, பார்கவியை இங்கே அழைத்து வந்தது, தர்ஷனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளில் அவள் ஈடுபட்டு இருக்கிறாள். ஆனால், அதற்கு முன்பே அவர்களின் கதையை முடிக்க ஆளை அனுப்பிவிட்டேன். அவர்கள் அனைவரின் கதையும் இன்று இரவு குள்ளே முடித்துவிட வேண்டும். இந்த விஷயம் வேறு யாருக்குமே தெரியக்கூடாது. இந்த விஷயத்தில் அன்புக்கரசி ஏதோ திட்டம் போட்டுகிறாள் என்று எனக்கு தோன்றுகிறது. அவ புலிகேசியை வைத்து ஜீவானந்தத்தின் கதையை முடித்து விட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டும், இதைபற்றி யாரிடும் மூச்சுவிடக்கூடாது, நாளைக்கு காலையில் கல்யாணம் நடக்கணும் என்கிறார்.
மறுபக்கம் குடோனில் இருக்கும் ஜீவானந்தம், பார்கவி, ஜனனி என்ன செய்வது, வெளியில் எப்படி செல்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது ஜனனி, சார் ரௌடிகள் உள்ளேயும், வர வெளியேவும் போகவில்லை என்கிறார். உடனே ஜீவானந்தம், அவர்கள் ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள், இதற்கு மேல் நாம் தான் உஷாரா இருக்க வேண்டும், இங்கு என்ன நடந்தாலும், பார்கவி சரியான நேரத்திற்கு மண்டபத்திற்கு சென்றுவிட வேண்டும் என்றார். மேலும், ஜனனி, நீங்க நந்தினிக்கு போன் போட்டு, எந்த நேரமாக இருந்தாலும், நாங்கள் போன் செய்தவுடன் தர்ஷனை வெளியில் அழைத்து வர வேண்டும், அதற்காக ஒரு திட்டத்தோடு தயாராக இருக்க சொல்லுங்கள் என்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: உடனே ஜனனி, நந்தினிக்கு ஃபோன் செய்ய, அங்கு மாறு வேஷத்தில் இருக்கும் நந்தினியை சுற்றி ஆட்கள் இருப்பதால், போனை எடுக்க முடியாமல் போகிறது. மீண்டும் ஜனனி ஃபோன் செய்ய, நந்தினி, மாப்பிள்ளையின் அறைக்கு ஓடி சென்று, போனை எடுத்து, ஜனனி இனிமேல் எனக்கு போன் பண்ணாதே, எதுவாக இருந்தாலும், சக்தியிடம் சொல், என்னை சுற்றி ஆட்கள் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள் என சொல்லிவிட்டு எதையும் கேட்காமல் போனை கட் செய்துவிடுகிறாள். நந்தினியை நோட்டமிட்டு வந்த, கதிர், வெளியே வந்த நந்தினியிடம், அது என்ன ரகசியமா போன் பேசிட்டு வர என்று அவளிடம் வம்பு செய்ய, சக்தி வந்து தடுத்து அங்கிருந்து அழைத்து செல்கிறான்.

வசமாக சிக்கிய அன்புக்கரசி: எதிர்நீச்சல் சீரியலில், இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், வீடியோ மேன், அறிவுக்கரசியிடம் சென்று, உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறான். இதை கேட்டு ஆத்திரப்படும் அறிவுக்கரசி, யாருகிட்ட தனியா பேசணும்னு சொல்ற, நான் யார் தெரியுமா, என அடிக்கப் பாய்கிறாள். அப்போது, அந்த வீடியோ மேன், குணசேகரன் அவரது மனைவி ஈஸ்வரியை கொலை முயற்சி செய்த போது, எடுத்த வீடியோ இப்ப என்னிடம் தான் இருக்கு என்று சொல்கிறான். இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் அறிவுக்கரசி. அந்த அந்த வீடியோவை, உடைந்த போனில் இருந்து என்னுடைய ஃபோனுக்கு மாற்றிவிட்டேன். அது சம்பந்தமாக பேச வேண்டும், ரூமுக்கு வாங்க என்ன சொல்ல பதட்டத்தோடு அறிவுக்கரசி ரூமுக்குள் செல்கிறாள். பின் ஃபோனில் இருந்த வீடியோவை வீடியோ மேன், அன்புக்கரசியிடம் காட்ட அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அந்த வீடியோகிராஃபரின் கழுத்தை பிடித்து, என்னிடமே வேலையை காட்டுகிறாயா என அடைக்கிறாள்.


Click it and Unblock the Notifications











