நடக்கப்போவது தர்ஷன் திருமணமா? இறுதி சடங்கா? உச்ச கட்ட பரபரப்பில் எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் எபிசோடில், வீடியோ மேன், அறிவுக்கரசியிடம் சென்று, உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறான். இதை கேட்டு ஆத்திரப்படும் அறிவுக்கரசி, யாருகிட்ட தனியா பேசணும்னு சொல்ற, நான் யார் தெரியுமா, என அடிக்கப் பாய்கிறாள். அப்போது, அந்த வீடியோ மேன், குணசேகரன் அவரது மனைவி ஈஸ்வரியை கொலை முயற்சி செய்த வீடியோவை போனில் இருந்து தூக்கிவிட்டேன். இப்போது அந்த வீடியோ என்னிடம் தான் இருக்கிறது என்று சொல்கிறான். இதை கேட்டு, அறிவுக்கரசி அடைந்து, அந்த அந்த வீடியோ மேனை சந்திக்க ரூமுக்கு செல்கிறாள். டேய்... யார மிரட்டுறனு தெரியுதா, என்கிட்ட இந்த வேலையை வெச்சிக்காதே என்று மிரட்டுகிறாள். அப்போது, அந்த வீடியோ மேன், அக்கா அமைதியா இருங்கக்கா, இல்லனா வீடியோ வெளியாகிவிடும் என சொல்கிறான்.
பின் தன் போனில் இருந்த வீடியோவை காட்டுகிறான், அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அறிவுக்கரசி, எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க. அப்போது அந்த வீடியோ மேன், தனது போனில் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோவை காட்டுகிறான் அதைப் பார்த்த அறிவுக்கரசி ஒழுங்கா, அந்த போனை என்னிடம் கொடுத்துவிடு என முரட்டுகிறாள். உடனே வீடியோ மேன், இந்த வீடியோவை காண்பித்து பணத்தை சம்பாதிக்கலாம் என்பதற்காகத்தான் நாங்கள் ஒரு டீமாக இங்கே இறங்கி இருக்கிறோம் என்கிறான். உடனே அன்புக்கரசி என்னது டீமா... கரிகாலனுக்கு இந்த விஷயம் தெரியுமா என கேட்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: உடனே வீடியோ மேன் கரிகாலனுக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், போட்டோகிராபருக்கு இந்த விஷயம் தெரியும், அவனுக்கு கூட முழுசா எதுவும் தெரியாது இதற்கு எல்லாம் மூல காரணம் நான் தான். எனக்கு தேவையான பணத்தை என்னிடம் கொடுத்து விட்டால் வீடியோவை உங்களிடம் கொடுத்துவிட்டு நான் சென்று கொண்டே இருப்பேன் என சொல்கிறான். உடனே அறிவுக்கரசி இது குறித்து அப்புறம் பேசலாம், அது வரை பொறுமையாக இரு கல்யாணம் முடிந்தவுடன் இதைப்பற்றி பேசிக்கொள்ளலாம் என சொல்கிறாள். உடனே வீடியோ மேன், அது எல்லாம் முடியாது காலையில் திருமணம் நடப்பதற்குள் எனக்கு தேவையான பணத்தையும் தந்துவிட வேண்டும் இல்லை என்றால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என முரட்டுகிறான்.
நடக்கப்போவது என்ன: மறுபக்கம் ஜனனி, பார்கவி, ஜீவானந்தம் அனைவரும் வெளியில் ரவுடிகள் இருப்பதால் எப்படி தப்பி செல்வது என யோசித்துக் கொண்டே இருக்கின்றனர். அப்போது ஜீவனந்தம், நீ வந்த காரில் மீண்டும் நாம் தப்பித்து செல்ல முடியாது, இந்த காரிலேயே நாம் சென்றால், மீண்டும் பின் தொடர்ந்து வருவார்கள். டாக்டரின் கார், தெருவில் இருக்கிறது. அவர் காரிலேயே சாவியை வைத்து இருக்கிறேன் என்று சொன்னார். நாம் எப்படியாவது இங்கிருந்து தப்பித்து சென்றுவிட வேண்டும், அதற்கு முன், நாம் போவதற்கு தாமதமாகிவிட்டால், தர்ஷனை மண்டபத்தில் இருந்து வெளியே வர ரெடியாக இருக்க சொல்லுங்கள் என்று சொல்கிறார். இதையடுத்து, ஜனனி, சக்திக்கு போன் செய்து நாங்கள் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டால் தர்ஷனை, எப்படியாவது நாங்கள் சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்துவிடு என்ன சொல்கிறாள். இதை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











