தர்ஷன் திருமணத்தில் முதல் காவு.. சத்தமில்லாமல் சம்பவத்தை செய்த அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: பார்கவி, ஜீவானந்தம் இருவரும் உயிரோடு இருப்பது தெரிந்து கொண்ட குணசேகரன், தர்ஷன் திருமணத்தில் ஜனனி சவால் விட்டபடி, நிச்சயம் ஏதோ பிரச்சனை வரும் என்பதை தெரிந்து கொண்ட குணசேகரன், திருமணத்திற்கு வந்த சொந்த பந்தங்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். தனது தம்பிகள் கதிர், ஞானத்தை அழைத்து, எனக்கு ஏதோ மனசுக்கு சங்கடமாக தெரிகிறது. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. இதனால், சொந்தக்காரர்கள் இருந்தால் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டது போல இருக்கும் என்பதால், அவர்களை அனுப்பிவிட்டேன். எது நடந்தாலும் தர்ஷன் கல்யாணம், நின்று விடக்கூடாது அதற்காக கல்யாணம் நேரத்தை காலை நான்கு மணிக்கு மாற்றி வைத்திருக்கிறேன் என சொல்கிறார்.
இதைக்கேட்டு கோபப்படும் கதிர், யாருக்காகவோ பயந்து கொண்டு நாம் ஏன் நேரத்தை மாற்ற வேண்டும், நீங்க தான் தர்ஷன் கல்யாணம் சொந்தபந்தத்தை கூட்டி நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீங்க, இப்போ இப்படிசொன்னால் என்ன அர்த்தம் என கேட்கிறான். உடனே குணசேகரன், டேய்... விவகாரமா எதுவும் பேசாத நான், நெனச்சபடி கல்யாணம் நடக்கணும், அது 9 மணிக்கு நடந்தா என்ன? நாலு மணிக்கு நடந்தா என்ன? இங்க நடக்கிறது எதுவும் சரி இல்ல. அதனால காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கணும் அதுக்கான ஏற்பாடுகளை செய்யுங்க, காலையில 3:00 மணிக்கு ஐயர் வந்துருவாரு, அவர் மண்டபத்திற்குள் வந்ததும், பெண்ணு, மாப்பிள்ளை தயாராக இருக்க வேண்டும், அதறகாக எல்லாரும் தயாராக இருங்க என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: குணசேகரன் பேசிக்கொண்டு இருந்ததை, மாடியில் இருந்து சக்தி, ரேணுகா, நந்தினி என அனைவருமே கேட்டு விடுகின்றனர். உடனே நந்தினி, எதற்காக கல்யாண நேரத்தை மாற்ற வேண்டும். அப்படி என்றால் பார்கவியும், ஜீவானந்தமும் உயிரோடு இருப்பது அவருக்கு தெரிந்து இருக்கிறது. அதனால், தான் இப்படி அவசரமாக நேரத்தை மாற்றி கல்யாணத்தை நடத்திவிடலாம் என நினைக்கிறார். இந்த விஷயத்தை ஜனனியிடம் சொல்லி சக்தி, அப்பொழுதுதான் அவர்கள் அங்கிருந்து சீக்கிரமாக கிளம்புகிறார்கள் என நந்தினி சொல்கிறாள். இதையடுத்து சக்தி, நந்தினிக்கு பலமுறை முயற்சி செய்கிறார். ஆனால், போன் போகாததால், வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பி விஷயத்தை சொல்கிறான் சக்தி.
சரிந்துவிழுந்த வீடியோ மோகன்: இன்றை எபிசோடில், தம்பிகள் அனைவரையும் ஒரே படத்தில் தூங்க வைத்துவிட்டு குணசேகரன் மட்டும் தூங்காமல் இருக்கிறார். மறுபக்கம், அன்புக்கரசி வீடியோ மேனை தனியாக வரவைத்து நீ கேட்ட பணம் இந்த பையில் இருக்கிறது. இதை எடுத்துக்கொண்டு வீடியோ ஆதாரத்தை கொடு என சொல்கிறாள். உடனே அந்த வீடியோ மேன், இந்த பேன் டிரைவில் வீடியா இருக்கிறது. என்னிடம் வேறு எந்த காப்பியும் இல்லை என அறிவுக்கரசியின் கையில் கொடுத்துவிட்டு, பணம் பையை வாங்கும் நேரத்தில், அறிவுக்கரசி அவனை கத்தியால் குத்தி விடுகிறாள். இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் சரிந்து கிடக்க, அப்போதும் ஆத்திரம் தீராத அறிவுக்கரசி அவனின் கழுத்தில் கால் வைத்து மிதித்து மொத்த வில்லத்தனத்தையும் காட்டுகிறான். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











