மண்டபத்தில் இருந்து தப்பிய தர்ஷன்.. முல்லைக்கு ஆட்டம் காட்டிய நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் சீரியல் நேற்றைய எபிசோடில், தம்பிகள் அனைவரையும் ஒரே படத்தில் தூங்க வைத்துவிட்டு குணசேகரன் மட்டும் தூங்காமல் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார். அந்த நேரம், வீரா ரௌடியிடம் இருந்த போன் வருகிறது. அதில், பேசிய குணசேகரன், மூன்று பேரின் கதையை முடித்துவிடுங்கள். அதிலும் குறிப்பா, சக்தி பொண்டாட்டியை சும்மா விடாதே, அவள் வாயிலேயே வெட்டு என்கிறார். உடனே ரௌடி வீரா, அனைவரின் கதையை முடித்துவிட்டு காலையில் ஃபோன் செய்கிறேன். நீங்க நிம்மதியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான்.

அப்போது,அங்கு வரும் அறிவுக்கரசி, இந்த நேரத்தில் யாரிடம் இருந்து ஃபோன் என்று கேட்க, அது உனக்கு எதுக்கு நீ போய் உன் வேலையை பாரு என்று சொல்கிறார். இதையடுத்து, வீடியோ மேன் அங்கு தூங்காமல் இருக்கிறான். இதைப்பார்த்த, அன்புக்கரசி வீடியோ மேனை தனியாக வரவைத்து நீ கேட்ட பணம் இந்த பையில் இருக்கிறது. இதை எடுத்துக்கொண்டு வீடியோ ஆதாரத்தை கொடு என சொல்கிறாள். உடனே அந்த வீடியோ மேன், இந்த பேன் டிரைவில் வீடியா இருக்கிறது. என்னிடம் வேறு எந்த காப்பியும் இல்லை என அறிவுக்கரசியின் கையில் கொடுத்துவிட்டு, பணம் பையை வாங்கும் நேரத்தில், அறிவுக்கரசி அவனை கத்தியால் குத்தி விடுகிறாள். இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் சரிந்து கிடக்க, அப்போதும் ஆத்திரம் தீராத அறிவுக்கரசி, என்னைய மிரட்டி ஒரு கோடி கேக்குறியா.. இந்த ஓரு கோடி..,. இந்த ஒரு கோடி என அவனின் கழுத்தில் கால் வைத்து மிதித்து மொத்த வில்லத்தனத்தையும் காட்டுகிறான். இதில் அந்த வீடியோ மேன் உயிரிழந்துவிடுகிறான்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், ஜீவானந்தம் ஜனனி அனைவரும் எப்படி தப்பித்து செல்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, அந்த இடத்திற்கு ரௌடிகள் வர, ஜனனி தனி ஆளாக சென்று அனைத்து ரௌடிகளையும் அடிஅடி என அடித்து உதைக்கிறாள். ஒரு கட்டத்தின் ஜனனியின் அடியை தாக்கமுடியாத ரௌடிகள் அந்த இடத்தில் இருந்து ஓடிவிடுகின்றனர். இந்த நேரத்தை விட்டால் மீண்டும் தப்பிக்க முடியாது என்று மூன்று பேரும், தெருவில் யாராக இருந்த காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

மண்டபத்தில் இருந்து தப்பிய தர்ஷன்: மண்டம்பத்தில் ஜனனியிடம் இருந்து போன் வராததால், ஷக்தி, தர்ஷனை இங்கிருந்து அழைத்துக்கொண்டு போவதற்காக ஒரு காரை ஏற்பாடு செய்கிறான். இந்த விஷயத்தை நந்தினியிடம் சொல்லும் ரேணுகா, ஜனனியிடம் இருந்து இன்னும் போன் வரவில்லை. இதனால், நீ தர்ஷனை எப்படியாவது அழைத்துக்கொண்டு, கீழே ரெடியாக இருக்கும் காருக்கு வந்துவிடு நான் காரில் காத்து இருக்கிறேன் என சொல்கிறாள். இதைக்கேட்டு, அதிர்ச்சி அடையும் நந்தினி, என்ன நான் தர்ஷனை அழைத்து வரவேண்டுமா, குணசேகரன் மாமா தூங்காம உங்காந்து இருக்கிறார். இந்த நேரத்தில் நான் எப்படி அழைத்துவருவது என யோசிக்கிறாள். அப்போது, தூரத்தில் இருந்து முல்லை, மாறுவேடத்தில் இருக்கும் நந்தினியை பார்த்துக்கொண்டு இருக்க, அவள் தர்ஷனை மேக்கப் போட அழைத்துவரும்படி சொல்கிறாள். இதையடுத்து, படுத்து இருக்கும் தர்ஷனை முல்லை யாருக்கும் தெரியாமல் அழைத்து வர, முல்லைக்கு டாடா காட்டிவிட்டு தர்ஷனை கடத்திக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X