ஆம்பளையா இருந்தா தடுத்து நிறுத்துடா.. சக்திக்கு முடிவு கட்டிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஜனனியிடம் இருந்து போன் வராததால், ஷக்தி, தர்ஷனை மண்டபத்தில் இருந்து அழைத்துக்கொண்டு போவதற்காக ஒரு காரை ஏற்பாடு செய்கிறான். இந்த விஷயத்தை நந்தினியிடம் சொல்லும் ரேணுகா, ஜனனியிடம் இருந்து இன்னும் ஃபோன் வரவில்லை. இதனால், நீ தர்ஷனை எப்படியாவது அழைத்துக்கொண்டு, கீழே ரெடியாக இருக்கும் காருக்கு வந்துவிடு நான் காரில் காத்து இருக்கிறேன் என சொல்கிறாள். இதைக்கேட்டு, அதிர்ச்சி அடையும் நந்தினி, என்ன தர்ஷனை எப்படி அழைத்து செல்வது என்று தெரியாமல் யோசிக்கிறாள்.
மறுபக்கம் அறிவுக்கரசி, வீடியோ மேனை கொலை செய்துவிட்டு, அவனின் உடலை யாருக்கும் தெரியாமல் இந்த இடத்தில் வெளியில் கொண்டு போக வேண்டும் என ரௌடியிடம் சொல்கிறாள். மேலும், கொலை நடந்த இடத்தில் எப்படி கல்யாணம் செய்வது என்று யோசிக்கும் அறிவுக்கரசி, குணசேகரிடம் வந்து, மாமா என் மனதிற்கு ஏதோ தவறாக படுகிறது. மண்டபத்தில் திருமணம் வேண்டாம் கோவிலில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம், இப்போதே இங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட குணசேகரன் யாருக்கோ பயந்து இந்த மண்டபத்தை விட்டு நான் போய்,கோவிலில் கல்யாணத்தை நடத்த வேண்டுமா என்று கேட்கிறார். உடனே அறிவுக்கரசி, கல்யாணத்தில் இனிமேல் எந்த பிரச்சனையும் நடக்காது மாமா, அதான் பார்கவியும், ஜீவானந்தமும் செத்துட்டாங்களே என்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: உடனே கோவத்தில் கொந்தளித்த குணசேகரன், அவர்கள் இருவரும் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார்கள் என்கிறார். மேலும், நான் பிரம்மா முகூர்த்தத்தில் காலை 4:00 மணிக்கு கல்யாணம் இல்லை. நான் குறித்த நேரத்தில் 9 மணிக்கு தான் கல்யாணம். காலை நான்கு மணி பிரம்ம முகூர்த்தத்தில், அவர்கள் மூன்று பேரில் கதையை முடித்துவிட்டு, அதன் பிறகு நிம்மதியோடு கல்யாணத்தை நடத்துவேன் என சொல்கிறார். மற்றொரு பக்கத்தில் தர்ஷனை, வெளியே எப்படி அழைத்துக் கொண்டு வருவது என யோசித்துக் கொண்டிருக்கிறாள் நந்தினி. அப்போது, தூரத்தில் இருந்து முல்லை, மாறுவேடத்தில் இருக்கும் நந்தினியை பார்த்துக்கொண்டு இருக்க, அவள் தர்ஷனை மேக்கப் போட அழைத்து வரும்படி சொல்கிறாள். இதையடுத்து, படுத்து இருக்கும் தர்ஷனை முல்லை யாருக்கும் தெரியாமல் அழைத்து வர, முல்லையை ஒரு அறையில் பூட்டிவைத்து விட்டு தர்ஷனை கடத்திக்கொண்டு செல்கின்றனர்.
ஆம்பளையா இருந்த நிறுத்துடா: ஆனால், அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியே செல்வதற்குள் குணசேகரன் அவர்களை கண்டுபிடித்து விடுகிறார். மாறு வேஷத்தில் இருந்தது நந்ததி தான் என தெரிந்து ஆத்திரப்படுகிறார். உடனே நந்தினி தர்ஷனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. எங்களுக்கு வேறு வழி தெரியாமல் வேஷம் போட்டு தர்ஷனை கடத்தி செல்ல முயன்றோம் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர் நந்தினியை அடிக்கிறார். அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் அனைவருக்கும் இடையே கைகலப்பு நடந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். அப்போது சக்தி, தர்ஷனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. இந்த திருமணத்தை நான் நடத்த விட மாட்டேன் என சொல்கிறான். கோவத்தின் உச்சிக்கு சென்ற குணசேகரன், இதை சொல்வதற்கு நீ யாருடா... ஆம்பளையாக இருந்தால் இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி காட்டு என சவால் விடுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











