கடவுளே.. ஜீவானந்தம், பார்கவிக்கு என்ன நடக்கப்போகுதோ.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: டீ கடையில் ஜீவானந்தம் டீ குடித்துக் கொண்டு இருக்க, அப்போது ஜீவானந்தத்தை தேடி அலையும் போலீஸ் டீம் அந்த இடத்திற்கு வருகிறது. இவர்களை பார்த்து உஷாராகி மறைந்து கொண்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார். போலீஸ் டீம் ஜீவானந்தத்தை பின் தொடர்ந்து துரத்தி செல்கின்றனர். மறைந்து ஓடிச்சென்ற ஜீவானந்தம், பார்கவியிடம் போலீசுக்கு நாம் இருக்கும் இடம் தெரிந்து விட்டது. உடனே இங்கு இருந்து கிளம்ப ஜீப்பில் தப்பித்து சென்று, யாருக்குமே தெரியாத நண்பர் ஒருவரின் வீட்டில் இருவரும் தஞ்சம் அடைகின்றனர். இந்த வீட்டை போலீசார் கண்டுபிடிக்க முடியாது. இந்த வீட்டில் தான் நானும் என் மனைவியும் வாழ்ந்து கொண்டு இருந்தோம், பின் ஒரு நண்பர் கேட்டதால், இந்த வீட்டில் புலிகேசி டீம் கண்டுபிடிக்கும் வரை, நாம் நிம்மதியாக இருக்கலாம் என்கிறார்.
மறுபக்கம் வீட்டில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. அறிவுகரசி கொடுத்த மருந்தால், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஏதோ பித்து பிடித்தது போல தர்ஷன் தன்னை மறந்து இருக்கிறான். அனைவரும் திருமண மண்டபத்திற்கு கிளம்புகின்றனர். அப்போது ரேணுகா. நந்தினி இருவருமே பார்கவிக்காக வாங்கி வைத்திருந்த முகூர்த்த புடவையை எடுத்துக்கொண்டு மண்டபத்திற்கு செல்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அனைவரும் மண்டபத்தில் வந்து விட, அறிவுக்கரசி, ஏற்பாடு செய்து வைத்திருந்த ரவுடி ஒருவனிடம், உனக்கு யார் மீது எல்லாம் சந்தேகம் வருகிறதோ அவர்களை தூக்கிட்டு போய் போட்டு தள்ளி விடு, இந்த திருமணம் நன்றாக நடக்க வேண்டும். அது என்னுடைய பல நாள் ஆசை. கல்யாணத்தை நிறுத்தும் நோக்கத்துடன் ஒருவன் கூட உள்ளே வரக்கூடாது என சொல்கிறாள். அதை கேட்டு அந்த ரவுடி முல்லை அண்ணன் உங்கள் எதிரிகளின் போட்டோ அனைத்தையும் எனக்கு அனுப்பி வைத்துவிட்டார் கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறான்.
அதன் பின் கதிர், மருத்துவமனையில் ஈஸ்வரியை கொல்வதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த வார்ட்பாய்க்கு ஃபோன் செய்து, என்ன ஆச்சு என கேட்கிறான். அப்போது அந்த, வார்ட்பாய், இங்கு போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. சிசிடிவி கேமரா என அனைத்தையும் கண்காணித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், ஈஸ்வரி அறைக்கு யார் சொன்றாலும், போலீஸ் விசாரித்துவிட்டுத்தான் அனுப்புவின்றன. கொலை செய்வது ஈஸியான விஷயம் இல்லை, கொஞ்சம் நேரம் கொடுங்க, நேரம் பார்த்து காரியத்தை செய்து விடுகிறேன் என்கிறான்.
சுற்றிவளைத்த போலீஸ்: இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது, அந்த ப்ரோமோவில், அறிவுகரசி, புலிகேசிக்கு ஃபோன் செய்து, இன்னைக்கு ராத்திரிக்குள் ஜீவானந்தம், பார்கவி இருவருனுடைய கதையை முடித்துவிடு, அதற்காக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என சொல்கிறாள். பார்கவி, ஜீவானந்தம் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட புலிகேசி, அந்த வீட்டை நெருங்கி விடுகிறான். அப்போது, பார்கவி, கோவத்துடன் நான் வெளியில் போகிறேன் என்று சொல்ல, உடனே ஜீவானந்தம், வெளியில் போனால், ரெண்டு பேரும் செத்துவிடுவோம் என சொல்லிவிட்டு, ஜீவானந்தம் மட்டும் கையில் கட்டையை எடுத்துக்கொண்டு தனியாக போலீஸ் டீமை எதிர்க்க செல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











