ஜீவானந்தத்திற்கு என்ன ஆச்சு.. தர்ஷன் திருமணத்தில் வரபோகும் பேராபத்து.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: நேற்றைய எபிசோடில், அறிவுகரசி, புலிகேசிக்கு ஃபோன் செய்து, ஜீவானந்தம் கிடைச்சான என கேட்கிறாள். உடனே புலிகேசி, அவன் காட்டுல பதுங்கிக்கிட்டு இருக்கிறான் அவனை தேடுவது எல்லாம் சாதாரணமான விஷயமுனு நினைச்சியா அவன் கதையை முடிச்சுட்டு நானே உனக்கு போன் பண்றேன். அதுவரைக்கும் போன் பண்ணி , என்ன ஆச்சு, என்ன ஆச்சுன்னு என்னை கேட்டு தொல்லை பண்ணாத என்கிறான். உடனே, அறிவுக்கரசி இன்னைக்கு ராத்திரிக்குள் ஜீவானந்தம், பார்கவி இருவருனுடைய கதையை முடித்துவிடு. அதற்காக என்ன வேண்டுமானாலும் நான் தருகிறேன் என சொல்கிறாள்.
அப்போது ஃபோனை எடுக்கும் ஜீவானந்தம், என்ன ஜனனி இந்த நேரத்தில் போன் செய்திருக்கிறீர்கள் என்று கேட்க, காலையிலிருந்து முயற்சி செய்கிறேன் உங்களுடைய நம்பர் கிடைக்கவே இல்லை என சொல்கிறாள். உடனே ஜீவானந்தம் நாங்கள் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் இருக்கிறோம். இந்த இடத்தில் போன் சிக்னல் கிடைக்காது. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ஜனனி, சரியான நேரத்தில் நான் பார்க்கவே அங்கு அழைத்து வந்து விடுவேன். நீங்கள் அங்கு பாதுகாப்பாக இருங்கள் என சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதன் பின் ஜீவானந்தம், பதுங்கி இருக்கும் வீட்டின் கதவை யாரோ தட்டுகின்றனர். போலீஸ் டீம் சுற்றிவளைத்துவிட்டதை தெரிநது கொண்ட ஜீவானந்தம். கையில் கட்டையை எடுத்துக்கொண்டு வெளியில் போகிறார். அப்போது பார்கவி, நானும் வருகிறேன் என்று கிளம்புகிறாள். அவளை தடுத்து நிறுத்தவும் ஜீவானந்தம், ரெண்டு பேரும் இப்போது வெளியில் சென்றால் இருவருமே செத்து விடுவோம். இப்பொழுது நான், வெளியில் போகிறேன். நீ வீட்டுக்குள் பத்திரமாக இரு, என்ன வந்தாலும், யார் உள்ளே வந்தாலும் அவர்களை எதிர்த்து போராடு. நீயும் தர்ஷனும் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ வேண்டும். அதுதான் அனைவருடைய ஆசையும். அதற்காக நீ போராட வேண்டும். இப்போது நான் தனியாக வெளியில் செல்கிறேன். நான் திரும்பி வரவில்லை என்றாலும் நீ உனக்காக வாழவேண்டும் என ஜீவானந்தம் உருட்டு கட்டையுடன் வெளியே வருகிறார். அதன் பிறகு பார்கவி, ஜீவானந்தத்தை தேட ஜீவானந்தம் அந்த இடத்தில் இல்லாததால் ஜீவானந்தத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் கவலைப்படுகிறாள்.
பயத்தில் விசாலாட்சி: இதையடுத்து இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் மலையாள மந்திரவாதி ஒருவர் மண்டபத்திற்கு வந்து, திருமணம் நன்றாக நடக்கவேண்டும் என்பதற்காக நான் செய்யப்போகும் இந்த பூஜையில் யாரும் தலையிடக்கூடாது என்கிறார். மேலும், குணசேகரனை பார்த்து, நீங்க ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண் இந்த வீட்டு மருமகளாக வரவேண்டும் என நிக்கிறீர்கள். ஆனால், வீட்டில் இருக்கும் பெண்கள் வேறு ஒரு பெண்ணை மருமகளாக்க நினைக்கிறார்கள். இந்த திருமணம் நடப்பது சாதாரண விஷயம் இல்லை என்றார். அதே நேரம் விசாலாட்சி தம்பிக்கு திடீரென சாமி வந்து அருள் வாக்கு சொல்கிறார். அதில், இந்த கல்யாணத்தால் மிகப்பெரிய சேதம் வரப்போகிறது என்று சொல்கிறார். தம்பி சொன்ன அருள் வாக்கை கேட்டு, என்ன நடக்குமோ என்கிற பயத்தில் இருக்கிறார் விசாலாட்சி.


Click it and Unblock the Notifications











