மோசமான நிலையில் தர்ஷன்.. 3 நாளில் நடக்கப்போகும் விபரீதம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம், பார்கவி பதுங்கி இருக்கும் வீட்டின் கதவை யாரோ தட்டிய நிலையில், போலீஸ் டீம் சுற்றிவளைத்துவிட்டதாக நினைத்துக்கொண்ட ஜீவானந்தம். கையில் கட்டையை எடுத்துக்கொண்டு வெளியில் போகிறார். அப்போது பார்கவியிடம், எனக்கு என்ன ஆனாலும் நீ துணிந்து போராட வேண்டும் என சொல்லிவிட்டு செல்கிறார். இதையடுத்து, வெளியில் ஜீவானந்தம் இல்லாததால், பார்கவி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். பின், வீட்டிற்குள் வரும், ஜீவானந்தம் வெளியில் Bison, அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்குகிறது. நீ கவலைப்பட வேண்டாம் நிம்மதியாக தூங்கு என்கிறார்.

இதையடுத்து, திருமண மண்டபத்திற்கு விசாலாட்சியின் தம்பி வருகிறார். அவரைப் பார்த்து அனைவரும் ஆத்திரப்படுகின்றனர். இவனை யாரு கல்யாணத்திற்கு அழைத்தது என்று சொல்ல, விஷாலாட்சி எனக்கு இருப்பதே ஒரே ஒரு தம்பி, அவனையும் என்னுடைய பேரன் திருமணத்திற்கு அழைக்காமல் இருக்க முடியுமா.. நான் தான் அவனை வர சொன்னேன் என சொல்கிறாள். அப்போது திடீரென அவருக்கு மதுரை வீரன் சாமி வர, அக்கா... பெரிய சேதம் வரப்போகிறது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அடுத்த மூன்று நாளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஜாக்கிரதையாக இரு அக்கா, இது புலியங்குடி மதுரை வீரனின் வாக்கு மாறாது என சொல்கிறார். இதை கேட்டு விஷாலாட்சி அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதைத்தொடர்ந்து, மண்டபத்திற்கு மலையாள மந்திரவாதி ஒருவர் வந்து, விஷாலாட்சி தம்பியை பார்த்து, இவர் யார் என்று கேட்டுவிட்டு, நான் பூஜை நடத்தும் போது அதில் இவர் தலையிடக்கூடாது என்கிறார். உடனே முல்லை, அவர் எங்க மாமா தான். அவர் எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார் என்கிறான். இதையடுத்து, அந்த மலையாள மந்திரவாதி, குணசேகரனை பார்த்து, நீங்க ஒரு பெண்ணை மருமகளாக்க நினைக்கிறீர்கள். ஆனால், வீட்டில் இருக்கும் பெண்கள் வேறு ஒரு பெண்ணை மருமகளாக்க நினைக்கிறார்கள். இந்த திருமணம் நடப்பது சாதாரண விஷயம் இல்லை என்றார்.

மோசமான நிலையில் தர்ஷன்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், நந்தினி, தர்ஷன் எப்படி இருக்கிறான் என பார்ப்பதற்காக செல்கிறாள். அப்போது, தர்ஷன் எதுவுமே பேசாமல் சோர்ந்த நிலையில் இருப்பதை பார்த்து, ஏதோ சந்தேகம் வர ஜனனிக்கு ஃபோன் செய்து தர்ஷனை பார்த்தால் எங்களுக்கு ஏதோ சந்தேகமாக தெரிகிறது. அவன் எதுவுமே பேசவில்லை சோர்ந்து போய் இருக்கிறான் என சொல்கிறாள். இதனால், சந்தேகம் படும் ஜனனி, சக்தியை மண்டபத்திற்கு அனுப்பி தர்ஷனுக்கு என்ன ஆனது என பார்க்கும்படி சொல்கிறாள்.

தர்ஷனுக்கு என்ன ஆச்சு: மண்டபத்திற்கு வரும் சக்தி தர்ஷனை பார்த்துவிட்டு இவன் ஏன் இப்படி இருக்கிறான் இவனை நான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என சொல்ல மண்டபத்திற்குள் பெரிய சண்டை ஏற்படுகிறது. அப்போது, குணசேகரன் இதை வைத்து இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு ஏதோ திட்டம் போடுகிறார்களா என கேட்கிறார். உடனே சக்தி எல்லாத்தையும் தவறான எண்ணத்துடன் பார்க்காதீர்கள். தர்ஷனை பார்த்தால் உங்களுக்கே தெரியவில்லையா.... அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. இப்போது தர்ஷனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பிடிவாதமாக சொல்கிறார்.

திருமணம் நடக்குமா: மறுபக்கம் கொடைக்கானலில் திருமண கோலத்தில் இருக்கும் பார்கவி ஜீவானந்தத்தின் காலில் விழுந்தது, நான் நினைத்தது நடக்குமா சார் என்று கேட்க, ஜீவானந்தம் என் உயிரை கொடுத்தாவது, உன்னை நான் தர்ஷனிடம் சேர்த்து வைக்கிறேன் என சொல்கிறாள். இதைத் தொடர்ந்து, ஜீவானந்தத்திற்கு போன் செய்யும் ஜனனி, அனைவரும் இப்போதே திருமண மண்டபத்திற்கு கிளம்பி விட்டார்கள். அவர்கள் ஏதோ பெரிய திட்டத்தை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X