பேராபத்தில் தர்ஷன்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: கல்யாண மண்டபத்திற்கு வரும் சக்தி தர்ஷனை பார்த்துவிட்டு இவன் ஏன் இப்படி இருக்கிறான் இவனை நான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என சொல்ல மண்டபத்திற்குள் பெரிய சண்டை ஏற்படுகிறது. அப்போது, குணசேகரன் இதை வைத்து இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு ஏதோ திட்டம் போடுறீங்களா என கேட்கிறார். உடனே சக்தி எல்லாத்தையும் தவறான எண்ணத்துடன் பார்க்காதீர்கள். தர்ஷனை பார்த்தால் உங்களுக்கே தெரியவில்லையா.... அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு, அவன் உங்களுடைய பையன் அவனை, பாருங்க அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு என சொல்கிறான்.

உடனே குணசேகரன், இப்போது என்ன செய்ய வேண்டும் சக்தி என்று கேட்கிறார். தர்ஷன் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என சொல்கிறான். உடனே குணசேகரன் டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டாம், வேண்டுமென்றால் டாக்டரை இங்கே வர சொல் என சொல்கிறான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த, அறிவுக்கரசி அதெல்லாம் வேண்டாம் மாமா, தர்ஷன் சரியா தூங்காமல், அம்மாவை நினைத்து கவலையாக இருக்கிறார். நன்றாக தூங்கி எழுந்தால் சரியாகி விடும் என்று சொல்கிறாள். இதைக் கேட்டு ஆத்திரப்படும் சக்தி எல்லாம் உன்னால தான் நீ தான் ஏதோ பண்ணி இருக்க என்று அறிவுக்கரசியை அடிக்க பாய்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: அவர்களை சமாதானப்படுத்தும் குணசேகரன், சக்தியை டாக்டரை வர சொல் என்கிறார். மண்டபத்திற்கு வரும் மருத்துவர், தர்ஷனை பரிசோதித்து விட்டு அவருக்கு இப்பொழுது மனநிலை மோசமாக இருக்கிறது. அவர் மனதளவில் ஏதோ பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை யாராவது உடன் இருந்து கவனித்துக் கொள்ளுங்கள், அவர் யார் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறாரோ அவர்கள் கூட இருந்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல தர்ஷன், சக்தி சித்தப்பா கூட இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறான்.

தர்ஷனின் இந்த நிலைக்கு காரணம் யார்: இதைக்கேட்டு, அறிவுக்கரசி இதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என சொல்கிறாள். இதையடுத்து வெளியே வரும் மருத்துவர், சக்தியிடம் தர்ஷன் சுயமாக செயல்படக்கூடாது என்பதற்காக யாரோ ஒரு மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து இருக்கிறார்கள். அதனால் தான் அவர், மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள் நான் கொடுத்த மருந்தை அவருக்கு தொடர்ந்து கொடுங்கள் என சொல்லிவிட்டு செல்கிறார். இதைக்கேட்டு, சக்தி அதிர்ச்சி அடைகிறார்.

மறுபக்கம் கொடைக்கானலில் புலிகேசி டீம் ட்ரோல் கேமிராவை வைத்து தேடுகின்றனர். இதை தெரிந்து கொண்ட ஜீவானந்தம் மற்று பார்கவி, ட்ரோல் கேமிராவில் படாதபடி, ஒரு இடத்தில் மறைத்து கொள்கின்றனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X