முடிஞ்சா தடுத்துப்பாரு.. கெத்தாக சவால் விட்ட ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: தர்ஷனுக்கு சிகிச்சை பார்த்துவிட்டு வெளியே வரும் மருத்துவர், சக்தியிடம் தர்ஷன் சுயமாக செயல்படக்கூடாது என்பதற்காக யாரோ ஒரு மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து இருக்கிறார்கள். அதனால் தான் அவர், மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்தால் அது தெளிவாக தெரிந்துவிடும், இருந்தாலும், அவரின் நடவடிக்கையை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. அவரை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள். நான் கொடுத்த மருந்தை அவருக்கு தொடர்ந்து கொடுங்கள் சரியாகிவிடும், வேறு எதாவது பிரச்சனை என்றால் உடனே போன் பண்ணுங்க நான் வருகிறேன் என சொல்லிவிட்டு செல்கிறார். இதைக்கேட்டு, சக்தி அதிர்ச்சி அடைகிறார்.

மறுபக்கம் கொடைக்கானலில் புலிகேசி டீம் ட்ரோல் கேமிராவை வைத்து தேடுகின்றனர். இதை தெரிந்து, கொண்ட ஜீவானந்தம் மற்று பார்கவி, ட்ரோல் கேமிராவில் படாதபடி, ஒரு இடத்தில் மறைத்து கொள்கின்றனர். தப்பித்து சென்ற ஜீவானந்தம் நிச்சயமாக இந்த வீட்டில் தான் பதுங்கி இருப்பான். நாம் அந்த இடத்திற்கு சென்று விசாரித்தால் தெரிந்து விடும் இங்கே இருந்து நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம், என போலீஸ் டீம் அனைவருமே ஜீவானந்தத்தின் வீட்டை நோக்கி நடந்து வருகின்றனர். வீட்டுக்குள் ஜீவானந்தம் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலேயே இருக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் மருத்துவமனையில் இருந்த ஜனனி மண்டபத்திற்குள் வர, அப்போது சக்தி, ஜனனி மற்றும் நந்தினியிடம் தர்ஷனுக்கு உடல்நிலை மோசமானதற்கு காரணம் அறிவுகரசு தான். அவள் தான் ஏதோ ஒரு மருந்தை கலந்து கொடுத்து இருக்கிறாள் என்கிறான். இதைக் கேட்டு ஆத்திரப்படும் நந்தினி, நானும் சந்தேகப்பட்டேன் ஏனென்றால் அவன் அப்படி மோசமான நிலையில் இருந்தான் சக்தி, அதற்காகத்தான் உன்னை போன் செய்து உடனே வர சொன்னேன் என்ன சொல்லிவிட்டு, அந்த அறிவுக்கரசியா சும்மா விடக்கூடாது என கோபத்துடன் கிளம்புகிறாள்.உடனே ஜனனி, நந்தினி அக்கா கொஞ்சம் பொறுமையா இருங்க, இப்போதைக்கு நமக்கு தர்ஷனின் கல்யாணம் ஈஸ்வரி அக்கா ஆசைப்பட்டபடி நடக்கணும். நாம சொன்னபடி ஜீவானந்தம் சார், நிச்சயமாக பாரவியை கூட்டிட்டு வந்துருவாரு, கல்யாணம் ஆனதுக்கு பிறகு தான் எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும் என சொல்கிறாள். இதை அறிவுக்கரசியின் தோழி ஒட்டு கேட்டு விட்டு அறிவுக்கரசியிடம் சொல்கிறாள்.

சாவல் விட்ட ஜனனி: இதைக்கேட்டு ஆத்திரப்படும் அறிவுக்கரசி, குணசேகரன் முன்பு சாரை தூக்கி போட்டு உடைத்து விட்டு, உங்க வீட்டு பொம்பளைங்க எல்லாம் சும்மா அமைதியா இருக்காங்கன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? அந்த மெட்ராஸ் காரி, பெரிய திட்டத்தோடத்தான், இந்த வீட்டுக்கு வந்திருக்கா. ஜீவானந்தம் பார்கவியை கூட்டிக்கிட்டு இங்கே வரானாம். இதே மண்டபத்தில், பார்கவிக்கும் தர்ஷனுக்கும் கல்யாணம் செய்து வைக்க திட்டம் போட்டு இருக்காங்க என்று சொல்கிறாள். இதைக்கேட்டு, கோபப்படும் கதிர், சக்தியிடம் என்னடா, தர்ஷனை பார்கவிக்கு கல்யாணம் செய்து வைக்க திட்டம் போடுறீங்களோ என கேட்க, அப்போது, ஜனனி, கெத்தாக ஆமாம், நாங்க நினைச்சபடி தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் திருமணம் நடக்கும் என குணசேகரன் முன்பு சவால் விடுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X