ரெண்டு உயிர் போராடுது.. கெடு விதித்த மலையாள மந்திரவாதி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில் குணசேகரன், சக்தியிடம் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதாவது, தர்ஷனை பார்த்துக் கொள்ள வேண்டுமானால் மருத்துவமனையில் இருக்கும் ஜனனியை மண்டபத்திற்கு வரசொல் என்று சொல்ல, சக்தியும் ஜனனிக்கு போன் செய்து மருத்துவமனைக்கு வர சொல்கிறான். இதனால், ஜனனி மண்டபத்திற்குள் வர, அப்போது சக்தி, ஜனனி மற்றும் நந்தினியிடம் தர்ஷனுக்கு உடல்நிலை மோசமானதற்கு காரணம் அறிவுகரசு தான். அவள் தான் ஏதோ ஒரு மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து இருக்கிறாள் என்கிறான்.
இதைக்கேட்டு ஆத்திரப்படும் நந்தினி, நானும் சந்தேகப்பட்டேன் ஏனென்றால் அவன் அப்படி மோசமான நிலையில் இருந்தான். அந்த அறிவுக்கரசியா சும்மா விடக்கூடாது என கோபத்துடன் கிளம்புகிறாள். உடனே ஜனனி, நந்தினி அக்கா கொஞ்சம் பொறுமையா இருங்க, இப்போதைக்கு நமக்கு தர்ஷனின் கல்யாணம் ஈஸ்வரி அக்கா ஆசைப்பட்டபடி நடக்கணும். நாம சொன்னபடி ஜீவானந்தம் சார், நிச்சயமாக பார்கவியை கூட்டிட்டு வந்துருவாரு, கல்யாணம் ஆனதுக்கு பிறகு தான் எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும் என சொல்கிறாள். இதை அறிவுக்கரசியின் தோழி ஒட்டு கேட்டு விட்டு அறிவுக்கரசியிடம் சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக்கேட்டு ஆத்திரப்படும் அறிவுக்கரசி, குணசேகரனிடம் சென்று, உங்க வீட்டு பொம்பளைங்க எல்லாம் சும்மா அமைதியா இருக்காங்கன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? அந்த மெட்ராஸ்காரி, பெரிய திட்டத்தோடத்தான், இங்கு வந்திருக்கா. ஜீவானந்தம் பார்கவியை கூட்டிக்கிட்டு இங்கே வருவானாம். இதே மண்டபத்தில், பார்கவிக்கும் தர்ஷனுக்கும் கல்யாணம் செய்து வைக்க திட்டம் போட்டு இருக்காங்க என்று சொல்கிறாள். இதைக்கேட்டு, கோபப்படும் கதிர், சக்தியிடம் என்னடா, தர்ஷனை பார்கவிக்கு கல்யாணம் செய்து வைக்க திட்டம் போடுறீங்களோ என கேட்க, அப்போது, ஜனனி, கெத்தாக ஆமாம், நாங்க நினைச்சபடி தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் திருமணம் நடக்கும் என குணசேகரன் முன்பு சவால் விடுகிறாள்.
இரண்டு உயிர் போராடுது: இதையடுத்து, இன்றைய எபிசோடில், குணசேகருனுக்கு சமமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு, உங்களால் உண்மையை மீறி கெட்டதை ஜெயிக்க வைக்க முடியுமா என நேருக்கு நேர் கேட்கிறாள். இதையடுத்து அறிவுக்கரசி, அந்த பணிக்கர் சொன்னது எல்லாம் உண்மை தான் அவரை வைத்தே, நாம எல்லா விஷயத்தையும் கண்டுபிடித்து விடலாம் என்கிறார். இதையடுத்து, மலையாள மந்திரவாதி, தனது பூஜையை ஆரம்பித்து, போலீஸ் கூட்டம் வேட்டைக்கு கிளம்பி விட்டது. அந்த இரண்டு ஜீவன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிக்கொண்டு இருக்கு என்கிறார். இதைக்கேட்ட ஜனனி, ஜீவானந்தம் மற்றும் பார்கவியை நினைத்து கவலைப்படுகிறாள்.


Click it and Unblock the Notifications











