ஜனனி கேட்ட கேள்வி.. குணசேகரின் ரகசியத்தை போட்டுடைத்த பணிக்கர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், கதிர், தர்ஷனுக்கும் கல்யாணம் செய்து வைக்க திட்டம் போட்டு இருக்காங்க என்று சொல்கிறாள். இதைக்கேட்டு, கோபப்படும் கதிர், சக்தியிடம் என்னடா, தர்ஷனை பார்கவிக்கு கல்யாணம் செய்து வைக்க திட்டம் போடுறீங்களோ என கேட்க, அப்போது, ஜனனி, கெத்தாக ஆமாம், நாங்க நினைச்சபடி தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் திருமணம் நடக்கும் என குணசேகரன் முன்பு சவால் விடுகிறாள்.

குணசேகருனுக்கு சமமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு, ஈஸ்வரி அக்காவை அடிச்சி ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிட்டீங்க, தர்ஷனை இப்படி மரக்கட்டையாக்கி உட்கார வச்சிட்டீங்க. எங்களையும் அழிப்பதற்காக இப்போ சாமியாரை கூட்டிட்டு வந்து இருக்கீங்க. இப்படி கெட்டதே நினைக்கும் நீங்களே, பல விஷயத்தை யோசிக்கும் போது, நல்லது செய்ய நினைக்கிற நாங்க எப்படி எல்லாம் யோசிப்போம். உங்களால உண்மைய மீறி கெட்டதை ஜெயிக்க வைக்க முடியுமா என நேருக்கு நேர் சவால் விட்டு பேசுகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: நீங்க பெரிய சாமியாருன்னு, எங்களை அழிப்பதற்காக உங்களை கூட்டிக்கிட்டு வந்து இருக்காங்க, உண்மையை மீறி, சத்தியத்தையும் மீறி இந்த இடத்துல எதுவுமே நடக்காது. நீங்க பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் பொய் சொல்லலாம், ஆனால், நாங்க நினைச்சபடி தான் இந்த கல்யாணம் நடக்கும் என்று கோவத்தோடு கத்துகிறாள் ஜனனி. அப்போது, பணிக்கர் சாமியார், காட்டுக்குள் இரண்டு உயிர், உயிருக்கு போராடிக் கொண்டு வருகிறது என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தில் இருந்து சென்றுவிடுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனிக்கு பணிக்கர் சாமியார் மீது நம்பிக்கை வருகிறது. ஏனென்றால், ஜீவானந்தமும் பார்கவியும் காட்டுப் பகுதியில் தான் இருக்கிறார்கள் என்பது ஜனனிக்கு நன்றாக தெரியும். அதை எப்படி அவர் சரியாக சொன்னார் என யோசிக்கிளாள்

எல்லாம் கர்மவினை: இதையடுத்து, பணிக்கர், பூஜையை ஆரம்பித்து, சோழி போட்டு பார்த்துவிட்டு, வனப்பகுதியில், இரண்டு உயிர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றன. போலீஸ் டீம், இவர்களை நெருங்கி விட்டது என சொல்லிவிட்டு. அன்புக்கரசி நான் சொன்னது சரியா என கேட்கிறாள். இதைக்கேட்ட அறிவுக்கரசி, அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் நான் எந்த போலீஸ் டீமையும் அனுப்பவில்லை என சொல்ல, நீ தான் அனுப்புன என சொல்கிறாள். இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஜனனி, பணிக்கர் சாமி யார் முன் வந்து, எல்லாத்தையும் கணித்து சொல்லக்கூடிய சாமியாராக இருக்கும் நீங்க என் பாவம் செய்பவர்கள் பக்கம் இருக்கீங்க. நாங்க இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமகள்கள், ஆனால், நாங்க நல்லாவே இருக்க கூடாது என்று பலவிதமான பிரச்சனைகளை செய்து கொண்டே இருக்கிறார் இவர். நாங்க இந்த குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், எங்களை அழிக்க வேண்டும் என்பதற்காக நீங்க வந்து இருக்கீங்க.

பாவத்தற்கு துணை போகலாமா: இவர்கள் மேலும் மேலும் பாவதை செய்து கொண்டே இருக்கிறார்கள், எல்லாம் தெரிந்த நீங்க பணத்திற்காக அவர்கள் பக்கம் இருப்பது சரியா, இதெல்லாம் நியாயமா என பணிக்கரை பார்த்து கேட்கிறாள் ஜனனி, உடனே பணிக்கர், அது எல்லாம் கர்ம வினை, அது நடந்தே தீரும், இந்த ஜென்மத்தில் அவர்கள் செய்யும் பாவத்திற்கு அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் கண்டனை கிடைக்கும். அதேபோல, உங்களுக்கு நடப்பது கர்மவினை தான், அதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்கிறார். இதைகேட்டு, மேலும் ஆத்திரப்படும் ஜனனி, அப்போ இந்த ஜென்மத்தில் நீங்கள் செய்யும் பாவத்திற்கு அடுத்த ஜென்மத்தில் கர்மவினை அனுபவிப்பீர்களா.. பணத்திற்காக பாவத்திற்கு துணை போவது பாவம் இல்லையா என ஜனனி அடுத்தடுத்து கேள்வி கேட்க பணிக்கர் என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து போகிறார்.

இதையடுத்து, இன்றைய எபிசோடில், நடக்கப்போவதை அனைத்தையும் சொல்லும் சக்தி வாய்ந்த உங்களைபோல இருக்கும் குருவிற்கு இவர்கள் செய்த அனைத்து கேட்டவிஷயமும் தெரியும்ல அதை சொல்லுங்க என்று சொல்ல, பணிக்கர், குணசேகரன் செய்த அனைத்து கெட்ட விஷயத்தையும் சொல்கிறார். இதையடுத்து, கதிர் அவரை தடுத்து நிறுத்தி அடிக்க பாய்கிறான். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X