For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் டிடி ரசிகையாக்கும்...- டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவின் கலகல பேட்டி

  By Mayura Akilan
  |

  சென்னை: தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்த அடையாளம் அடையாளம் இருக்கும். அப்படி சன் டிவியில் சினிமா செய்திகளை தொகுத்து வழங்குவதில் புதிய பாணியை புகுத்தி பார்வையாளர்களை கவர்ந்ததில் அர்ச்சனாவிற்கு ஒரு தனி இடம் உண்டு.

  பொதிகை தொலைக்காட்சியில் தொடங்கி சன் தொலைக்காட்சி வரை சின்னத்திரை உலகில் நீண்ட பயணம் அர்ச்சனா உடையது. சீரியல், சினிமா என தொட்டுவிட்டு வந்திருந்தாலும் தொகுப்பாளராக இருப்பதுதான் தன்னுடைய விருப்பம் என்கிறார்.

  முதன்முதலில் பொதிகை டிவியில் மாதவனை நேர்காணல் செய்ததன் மூலம் ஆரம்பித்த இவரது பயணம், இப்போது 16 வருடங்களை தாண்டி வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொதிகையில் சினி கூத்துகள் என்று திரைக்கு பின்னால் இருக்கும் கலைஞர்களை பேட்டி எடுத்த இவர், பின் ஜெயா டிவியில், இனிய இல்லம் என்று பெண்களுக்கான நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தினார்.

  சன்டிவியில் பயணம்

  சன்டிவியில் பயணம்

  சன் டிவியில் நுழைந்தவர், அங்கே பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியின் மூலம் தனது பணியை துவங்கினார். அதன்பின் படிப்படியாக கே டிவியில் முதல் பயணம், கொண்டாட்டம்,போன்ற நிகழ்ச்சிகளை செய்து வந்த இவர் சன் டிவியில் சினிமா செய்திகள் நிகழ்ச்சியை கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக தொகுத்து வழங்கி, தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

  அர்ச்சனாவில் அடையாளம்

  அர்ச்சனாவில் அடையாளம்

  அதன்பின் சமீப காலமாக ஒரு கூட்டுக்குள் தன்னை அடைத்துக்கொள்ள விரும்பாமல் சுதந்திரமாக ப்ரீலான்சர் தொகுப்பாளினியாக மாறி தனது எல்லைகளை சற்றே விரிவுபடுத்தியுள்ளார்.

  லண்டன் சேனலில் செல்பி டைம்

  லண்டன் சேனலில் செல்பி டைம்

  தற்போது கேப்டன் டிவியில் வாழ்வின் வசந்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தவிர லண்டன் சேனலான ஐ.வி.சியில் ‘செல்பி டைம்' என்கிற நிகழ்ச்சியையும் சுவைபட நடத்தி வருகிறார். மீண்டும் தனது தாய்வீடான பொதிகையில் புதன்கிழமையன்று மேட்னி ஷோ என்ற திறமையானவர்களுக்கான நிகழ்ச்சியை ஒன்றரை மணி நேரம் உற்சாக துள்ளலுடன் நடத்துகிறார்.

  ஹலோ உங்களுடன்

  ஹலோ உங்களுடன்

  பிரபலங்களை வரவழைத்து "ஹலோ உங்களுடன்" என்ற லைவ் ஷோ வெள்ளிதோறும் நடத்துகிறார். .
  அதே பொதிகையில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இவரது ‘ழகரம்' என்ற நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களிடையே ரொம்பவே பாப்புலர்.

  சினிமா பாடல் நிகழ்ச்சி

  சினிமா பாடல் நிகழ்ச்சி

  இந்த நிகழ்ச்சியில் இரண்டு கல்லூரியில் இருந்து மாணவிகளை வரவழைத்து, அவர்களுக்கு தமிழ் வளத்தை அதிகரிக்க செய்வதற்காக தமிழ் சார்ந்த விளையாட்டு போட்டி ஒன்றை நடத்தி வருகிறார். இதுதவிர ஒன் எஸ் (1 yes) என்ற சேனலில் டாப் டென் பாடல்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

  சினிமா விழாக்களில் அர்ச்சனா

  சினிமா விழாக்களில் அர்ச்சனா

  தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இருப்பதும் இவரே. இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தாண்டி பல சினிமா விழாக்களிலும் இவரது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

  அடையாளம் தந்த சன்டிவி

  அடையாளம் தந்த சன்டிவி

  சன் டிவி தனக்கு பதினான்கு வருடம் நல்ல குருகுலமாக இருந்ததுடன் சன் டிவி புகழ் அர்ச்சனா என்ற பெயரையும் வாங்கித்தந்தது என நெகிழும் அர்ச்சனா, அங்கே கற்ற பாடத்தில் தான் இத்தனை சேனல்களில் இவ்வளவு நிகழ்சிகளை தைரியமாக தன்னால் நடத்த முடிகிறது என்கிறார்.

  சன்டிவி சீரியலில் அர்ச்சனா

  சன்டிவி சீரியலில் அர்ச்சனா

  சீரியல், சினிமா வாய்ப்புகளை நான் தேடவில்லை. ஆனாலும் ஆறு வருடங்களுக்கு ‘அரசி' சீரியலில் செல்வராணி'யாக நடித்ததை இப்போதும் கூட பலரும் நினைவுபடுத்தி பேசுகிறார்கள். அதன்பின் சில சீரியல்களில் நடித்தாலும் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கும் வேலையை சமாளிக்கவேண்டி இருந்ததால் சீரியலில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.

  சிறந்த தொகுப்பானியாவதே லட்சியம்

  சிறந்த தொகுப்பானியாவதே லட்சியம்

  சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பது தான் அர்ச்சனாவின் ஆசை. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ஒரு மாரத்தான் நிகழ்ச்சியில் குழுமியிருந்த மூவாயிரம் பேர்களை கட்டுக்கோப்பாக வைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை கௌதமி அதைக்கண்டு ஆச்சர்யப்பட்டு அர்ச்சனாவை அழைத்து பாராட்டினாராம்.

  டிடியின் நிகழ்ச்சி தொகுப்பு

  டிடியின் நிகழ்ச்சி தொகுப்பு

  பிளஸ் டூ முடித்தவுடனே திடீரென தொகுப்பாளராக மாறியதால் இந்த துறையில் யாரையும் எனது இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ளவில்லை. அதேசமயம் இந்த பீல்டில் தன்னைக்கவர்ந்த தொகுப்பாளினி என்றால் அது டிடி (திவ்யதர்ஷினி) ஒருத்தர் தான். ஒரு நிகழ்ச்சியை கொஞ்சம் கூட குறையாமல், நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை அறிந்து அதன் போக்கிலேயே லவ்லியாக நிகழ்ச்சியை டிடி கொண்டு செல்லும் அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  தந்தையினால் பெருமை

  தந்தையினால் பெருமை

  அர்ச்சனாவின் தந்தை வி.பி.மணி பிரபலமான சினிமா மக்கள் தொடர்பாளர். ஆனால் தனது தந்தையின் பெயரை தானோ, அல்லது தன் பெயரை தனது தந்தையோ எங்கும் சொல்லி அடையாளப்படுத்தி கொள்வதில்லை. இருந்தாலும், சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, அவர்கள் தன்னை வி.பி.மணியின் மகள் என அடையாளப்படுத்தி பேசும்போது பெருமையாகவே உணர்வதாகவும் கூறுகிறார்.

  ஆண்டாள் பிரியதர்ஷினி

  ஆண்டாள் பிரியதர்ஷினி

  பொதிகை டிவியில் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆண்டாள் பிரியதர்ஷினி, என்னுடைய ஒவ்வொரு செயலையும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி வருகிறார். அதனால் இன்னும் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது அவர் எனது இன்னொரு தாய் என்றே பெருமை பொங்க சொல்கிறார் அர்ச்சனா.

  English summary
  Archana Mohan was Anchor from Sun Network. She hosted Cinema Seithigal Show in Sun Tv. Now she is working freelance anchor.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X