»   »  பாகுபலி, புலி… மாரி… மீண்டும் களமிறங்கும் சன் டிவி

பாகுபலி, புலி… மாரி… மீண்டும் களமிறங்கும் சன் டிவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன் டிவி புத்தம் புதிய சூப்பர் ஹிட் படங்களின் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை வாங்கி குவித்து வருகிறது. தனுஷ் நடித்த மாரி, சிம்புவின் வாலு படங்களைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட படமான பாகுபலி, சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படங்களின் உரிமைகளையும் கைப்பற்றியுள்ளது.

பிரம்மாண்ட படங்கள், பெரிய ஹீரோக்கள் படங்களைத் தவிர தற்போது முழு மூச்சாக இரண்டாம் நிலையில் இருக்கும் ஹீரோக்களின் படங்களை வாங்க களத்தில் குதித்துவிட்டது.

புத்தம் புது படங்கள்

புத்தம் புது படங்கள்

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, உள்ளிட்ட பண்டிகை தினங்கள், விடுமுறை நாட்களில் புத்தம் புது திரைப்படங்களை ஒளிபரப்பி விளம்பரங்களை வாரி குவிப்பது டிவி சேனல்களின் வழக்கம்.

போட்டியில் சேனல்கள்

போட்டியில் சேனல்கள்

இதனையடுத்து கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து திரைப்படங்களை வாங்க சன் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, ராஜ் டிவி உள்ளிட்ட பல சேனல்களும் போட்டி போடுகின்றன.

அள்ளிய சன் டிவி

அள்ளிய சன் டிவி

தனுஷ் - காஜல் அகர்வால் நடித்திருக்கும் ‘மாரி' படத்தையும், ஒலிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் - எமி ஜாக்ஸன், சமந்தா ஆகியோர் நடித்துவரும் ‘ வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தையும் சன் டிவி வாங்கியிருக்கிறது.

சிம்புவின் படங்கள்

சிம்புவின் படங்கள்

தனுஷ் படங்களை வாங்கியதுபோலவே ஜூலை 17ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘வாலு' படத்தையும், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன்தாரா நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு' படத்தையும் சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறைவி, நானும் ரவுடிதான்

இறைவி, நானும் ரவுடிதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் ‘இறைவி' படத்தையும், தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நயன்தாரா நடித்து முடித்திருக்கும் ‘நானும் ரவுடிதான்' படத்தையும் கைப்பற்றியிருக்கிறது சன் டிவி.

பாகுபலி

பாகுபலி

ஜூலை மாதம் வெளியாக உள்ள பாகுபலி திரைப்படத்தையும் சன் டிவி கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்தியராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய் நடித்த புலி

விஜய் நடித்த புலி

சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா நடித்துள்ள புலி திரைப்படத்தையும் சன் டிவி வாங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக புதிய திரைப்படங்கள் எதையும் வாங்க ஆர்வம் காட்டாத சன் டிவி தற்போது புத்தம் புதிய திரைப்படங்களை வரிசையாக வாங்கி குவித்து வருகிறது.

English summary
The Tamil satellite rights of Rajamouli‘s ‘ Baahubali‘ is grabbed by Sun Tv. The news is officially confirmed by the makers of Baahubali. The movie all set to release on July 2015.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil